அன்பே தமிழென்றார் அதனில் அமிழென்றார் இதனால் நாமிணைந்தோம் இன்புமும் நாமடைந்தோம் அறிவால் வயதால் அன்பால் அனுபவத்தால் உயர் தமிழ் அறிவால் உயர்வாய் நீற்கின்றீர்கள் உண்மை நட்பினில் உருகி நிற்பவர் பணமதனைப் போற்றாமல் பண்பதனைப் போற்றுபவர் மொழியால் உணர்ந்தோம் தந்தையர் வழியாலிணைந்தோம் கொள்கையில் ஒன்றானோம் குணத்தால் நட்பானோம் இடையிடையே தொடர்புகள் இல்லாது போயினும் ஊடல்கள் கொள்வதும் உடன்பின்னால் கூடல்கொள்ளலும் கூடிக் குலவுதலும் கொண்டாடி மகிழலும் குணமாகக் கொண்டவர் கெட்டதில்லை பிரிந்ததில்லை அறுபதாண்டு இலக்கியப்பயணம் அறத்துடன் தொடர்ந்துநடந்திட விருப்புடன்நானும் வாழ்த்துகிறேன்

