கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெற்ற ஆராதனா நாட்டியப்பள்ளியின் ஆண்டுவிழாவின்போது மேடையேறிய ‘இரவிமைந்தன்’என்ற கொடை வள்ளல் கர்ணனைப் பற்றிய நாட்டிய நாடகம் பற்றி எனது பார்வையையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். ‘எனது பார்வை’ என்று குறிப்பிடும் பொழுது, எனது மகளும் இதே நாட்டியப் பள்ளியில் நடனம் பயில்வதால் பெற்றோரின் சார்பில் ஓர் பார்வையையும், ஆராதனா நாட்டியப்பள்ளியின் ஆசிரியை திருமதி சுஜந்தினி மகேஸ்வரன்