தமிழைக் காக்கும் காப்பகம்
தாகம் தீர்க்கும் பந்தலானது
அமுதைக் குழைத்து அளித்த
ஆண்டுகள் இருபத்தைந்தை
வெற்றிக் கிணத்தில்
தங்க நீர்க் கிண்ணமாய்
தமிழவை நிரப்பிக் காட்டின
தாங்கிய புலவரை மெய்ச்சின
வாழ்த்தையும் அள்ளிக் கொட்டிட
வாழ்த்துகின்றேன் வளம் இன்னும் பெருகிட!
தவித்திடும் தமிழ் விரும்பிகள்
அளித்திடும் அன்பால் மலர்ந்த தமிழவை
வளர்ந்திட வாழ்த்தைத் தந்தே
வாழ்த்துகின்றேன்
வாழிய தமிழவை பல்லாண்டே தமிழ் மணம் பெற்றே!
இருபத்தைந்தாண்டு இனிதே நடைபெற
இதயத்தில் தமிழை இணைத்தவர்- அந்த
உதயத்தில் மனங்களில் நிறையட்டும்
உள்ளன்போடு வந்து
மெய்யன்பாய் வாழ்த்தி மகிழுங்கள்
தமிழவை தன்னிகரில்லா ஆளுமை
அமிழ்ந்ததில் குளித்தவர்
ஆயுள்வரை தமிழில் மூழ்குவர்!
நன்றி
கதிர் லோகன்

