தமிழ் மொழி ‘ஆன்ற தமிழ்’ என்று சிறப்பிக்கப்பெறுகின்ற ஒன்று. தமிழ் மொழி ஆக்கமுடையது என்ற பொருளில் அப்படிக் குறிக்கப்பெறுகிறது. தமிழின் ஆக்கத்தை இரண்டு முறைகளில் குறிப்பிடவேண்டும். காலந்தோறும் மக்கள் வாழ்வியல் சார்ந்து வளர்ந்து வருகின்ற நிலை ஒன்று. கருத்தியல் பதிவுகள் வகையில் மனித மனத்தைச் செம்மைபெறச் செய்கின்றநிலை மற்றொன்று. ‘நினைத்தல்’ என்ற அறிவுத் தொழிலுக்கு நிகழ்ச்சிகளோடு கூட மொழி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நினைத்தல் அழுத்தமாகத் தொழிற்படும்போது சிந்தனையாகிறது. இந்த அழுத்தமானது ஆளுமையை அறிவுசார்ந்த நிலையில்






