புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டனிலிருந்து அரங்கிலும் அலையிலும் ஏட்டிலும் இதழிலும் படைத்தளித்த கவிதைகளிலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல்! அந்நிய ஆதிக்க அடக்குமுறைகளாலும் ஊடுருவல்களாலும் அடிமைப்படுத்தப்பட்டு ஆட்கொள்ளப்பட்ட தமது வரலாற்று இறைமையை மீட்கவும் திட்டமிடப்பட்டுத் தொடர்ச்சியாக நிகழ்த்தபபட்டு வந்த இன இழிப்பிலிருந்தும் சித்திரவதைகள் சிறைவாசங்களிலிருந்து தம்மைக் காக்கவும் தாயகத்திற் தமிழ் மக்கள் செய்த யாகங்கள் ஈகங்கள் தியாகங்கள்…
முகங்கொண்ட இழப்புகள் இன்னல்கள் இடுக்கண்கள்… பட்ட துயரங்கள் துன்பங்கள் ஆகிய பல்வேறுபட்ட இனம்-சார் அகப் புறப் பரிமாணங்களையும்… புலம்பெயர்வாழ் தமிழர் வாழ்வியல்.. உளவியல் சமூகவியல் விவகாரங்களையும் சித்தரிக்கும் கவிதா ஓவியங்களை உள்ளடக்கிய இந்நூல் இலண்டன் வல்தம்ஸ்ரோ மண்டபத்தில் புலவர் சிவநாதனின் பல அரங்கப் படைப்புகளோடு மிகவும் விமரிசையாக அரங்கேற்றப்பட்டது!
இலண்டன் தமிழவையினதும் மதுரை உலகத் தமிழ்ச் சற்கதிதினதும் ஆதரவிலும் மதுரையில் அரங்கேறிய இலண்டன் பத்மினி குணசீலன் அவர்களின் ‘நாத்தன கலாலயா நாட்டியப் பள்ளியின் தயாரிப்பில் உருவான.. புலவர் அவர்களின் படைப்பான ‘பிரபஞ்சலீலை’ நாட்டிய நாடக அரங்க நிகழ்வின்போது….
இக்கவிதைப் படைப்பின் களமுணர்ந்து கனமுணர்ந்து கவித்துவத் தரமுணர்ந்து…
மார்கழி 2014இல்…
தமிழகத்தின் வில்லிபுத்தூர் செந்தமிழ் அறக்கட்டளையினர் புலவர் சிவநாதன் அவர்களுக்கு… ‘கவிப்பேரொளி’ எனும் விருது வழங்கிக் கௌரவித்துப் பெருமை செய்தனர்!
சத்தியம் சாகாது- அது
தீயிலும் வேகாது!
நித்திய மாயிருக்கும்- அது
நீதியின் வழி நடக்கும்! -அற
நீதியின் வழி நடக்கும்!
-புலவர் சிவநாதன்


