புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும் அரங்க வானலைத் தயாரிப்புகளும்
தாயகத்த்pல்… வட்டுக்கோட்டையிலும் சுன்னாகம் கந்தரோடைஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கொழும்பு மாநகரிலும் கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலிலும் வேர்கொண்டு கிளைவிட்ட வட்டூர்ப் பங்கயமணாளனின் நாடகவியல் அரங்காற்றுகை படைப்பாக்க ஆளுமை அனுபவங்களும் கதாப்பிரசங்கழ் வில்லுப்பாட்டு ஆகிய கலைகளின் ஈடுபாடும் இயக்கமுமே.. அவரது புலம்பெயர் வாழ்விற் புலவர் சிவநாதன் என்கின்ற ஒரு விரிந்த பரிமாணத்தில் அவரை இயக்கிவந்தன எனலாம்! புலவர் சிவநாதனின் வட்டுக்கோட்டை வாழ்வுக்காலம் அவரை நாட்டுக்கூத்துகளோடும் இசை வாசாப்பு நாடகங்களோடும் மிகவும் நெருக்கமாகவும் உயிர்ப் பங்களிப்போடும் பிணைத்துக் கொண்டதன் பின்னணியில்.. புலவர் சிவநாதன் அவர்கள் எழுதி.. இயக்கிப் படைத்தளித்த இன்பியல் துன்பியல் இணைந்த அரங்க வானலை ஆக்கங்கள் பலவாகும்! கூத்து நடைகள்.. இசை நாடகப் பாடல் வடிவங்கள் கவிதா நிகழ்வுப் பாங்குகள் தாளலய வடிவங்கள் எனப் பன்முகப்பட்ட எழுத்தாக்கச் செல்நெறிகளைப் புலவர் சிவநாதன் அவர்க்ள் கையாண்டு வந்தமை குறிப்pடத்தகக்கது! எனினும்… நாடகத் துறையிலும் ஒப்பனை உடையலங்காரம் ஒளி ஒலி அரங்க இசை அமைப்பு.. மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றில் இப்படைப்புகளுக்குத் துணை புரிந்தவர்கள் அனைவருமே வருமானம் கருதாது தமது சொந்த ஈடுபாட்டின் விளைவாகப் தன்னார்வ முனைப்புகளோடு புலவரோடு துணைநின்று பயணித்தவர்களே என்பது ஒரு முக்கிய கவனப் புள்ளியாகும்! பல்கலைக்கழகக் கற்கைநெறிகள் பட்டப்படிப்புகளிலும்… தொடர்ச்சியான குருமரபுப் பட்டறை.. பயில்நெறி அனுபவங்களிலும் ஈடுபட்டு வளர்ச்சியும் விருத்தியும் அடைந்த ஆளுமைகள் எவருமே இப்படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடாத ஒரு காலகட்டத்திலும் இவற்றிற்கெல்லாம் வாய்ப்பும் வசதியும் நிதி ஆதரவும் அற்ற ஒரு நெருக்கடியான இறுக்கமான சூழலிலேயே.. அன்றாடம் தமது வாழ்வுக்கான உழைப்பு ஊதியம்… தாயகத்தில் வாழும் தங்கள் குடும்ப உறவுகள் குறித்த பழுக்கள் பொறுப்புகள்… தமது கல்வி மேம்பாட்டு இலக்குகள் எனப் பல நிலைப்பட்ட சுமைகளோடும் சுயங்களோடும் போராடிக்கொண்டிருந்த ஒரு புலம்பெயர் சமூகத்தின் உறுப்பினர்களை ஊக்குவித்தும் இணைத்தும் இயக்கியுமே புலவர் சிவநாதன் அவர்கள் தனது படைப்பாக்கங்களைத் தமிழுக்கும் தமிழருக்கும் தந்துள்ளார்! தனது தாயகதேசத்தின் அனுபவங்களையும் தான் வாழ்நது கொண்டிருந்த புலம் பெயர் சமூகத்தின் பிரச்சனைகள் பின்னணிகள் பின்னல்களையும் மையப்படுத்தி எழுதியும் இயக்கியும் தயாரித்தும் அரங்கேற்றிய படைப்புகளே இவையாகும்!
பாலரிலிருந்து முதியவர்வரை… பெண்களையும் ஆண்களையும் இணைத்து இயங்கிய இவரது நாடக அரங்கவியல’ ஆற்றுகைப் பயணம் இலண்டனின் பிரசிததி பெற்ற பல மண்டபங்களில் அரங்கேறியமை ஈண்டு குறப்பிடத் தக்கது!


