சுதெசிகளல்லாத மக்கள் வாழும் நிலையில்… தத்தம் மொழி கலை பண்பாட்டு வாழ்வியல் வழமைகள் வழக்குகளுடன் பல இனமக்கள் வாழ்ந்து வருவதை இந்நாட்டின் ஒருவளமாகக் கருதுகின்ற சுதேசக் குடிமக்களையும் யாம் சந்திக்கத் தவறுவதில்லை! இதேவேளை அண்மைக்காலங்களில் டீசுநுஓஐவு எனப்படும் ஒரு பாரிய சமூக அரசியல் பொருளாதாரப் பேரலையை எழுப்பி… ஐரோப்பாவையும் ஏனைய உலக நாடுகளையும் உலுப்பிய கருத்தாக்கச் செயலாக்கத்தின் தாக்கத்தையும் உங்களிற்பலர் அறிந்திருப்பீர்கள்!
2010இன் கணக்கெடுக்கின்படி… அண்ணளாவாக 110.000 தமிழர்கள்
இங்கு வாழ்வதாகப் பதிவுசெய்யப்பட்டபோதிலும்… தற்போது ஏறக்குறைய 300இற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழலாமென்ற ஒரு மதிப்பீடும் நிலவி வருகிறது!
பிரித்தானியாவில்..தமிழ் மொழிவளர்ச்சிகான பயணத்தில்.. முனைப்போடும்… முழுமூச்சோடும் இயங்கிக்கொணடிருக்கின்ற
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ்ச்சங்கங்கள்.. தமிழ்க்கல்விக்கூடங்கள் கலகை;கூடங்களின்… நிறுவனர்கள்.. நிர்வாகிகள்.. பெற்றோர்கள்… ஆசிரியர்கள்..மாணவர்கள் அனைவரும் இந்த மக்கள் கூட்டத்திலிருந்து பூத்தவர்களே!
எல்லாவற்றிற்கும் மேலாக… தமிழ்மொழியை ஓர் அறிவுப்பொருளாக… தொடர்பு நெறிப் பொருளாக…நோக்குகினற நிலையிலிருந்து பெரிதும் பரந்துபட்ட நிலையில் அதனை ஓர் உணவுர்ப்பொருளாக… உணர்வுப்பொருளாக உய்த்துணரவேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை உண்டு என்பதை யாம் மறப்பதற்கில்லை!
இலங்கைப் பேராதனைக் கழகத்தின் பேராசிரியர் இளவல் எம் எம் ஜெயசீலன் அவர்கள் தமது உரையில்.. ஒரு மிகமுக்கியமான கருத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது என எண்ணுகின்றேன்!
புலம்பெயர் தமிழ்மக்களின் தமிழ்மொழிவளர்ச்சியானது தாயக மொழி வளர்ச்சியின் ஒரு நீட்டமே எனும் பெருள் படப்பேசியமை என்னை மிகவும் கவர்ந்தது!
1956, 1958, 1970கள், 1983, 2015, 2009 எனத் தாயக நிகழ்வுகளை நிரற்படுத்துவோமாயின்… தாயகத்தின் மொழி கலை இலக்கிய
ஆற்றல்கள் ஆளுமைகள்…அனுபவங்களின் படிப்டியான புலப்பெயர்வுகளின் நேரடியான விளைவுகளே… புலம்பெயர் தேசங்களில் தமிழ் வளர்ச்சியின் ஊக்கிகள் உந்துசக்திகள் என்பதை யாம் எளிதிற் புரிந்துகொள்ளமுடியும்! தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சி… கலைக்கூடங்களின் வளர்ச்சி… இலக்கிய வெளிப்பாடுகளின் எழுச்சி பெற்றோர்களின் விழிப்புணர்வு.. என பன்முகக் காரணிகள் தமிழ்டிமாழியின் வளர்ச்சிக்கு நீர் வார்த்தன!
1956…
அப்போது எனக்கு ஏழுவயது இருக்கும்!
1956இல் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களமசோதாவும் அதனைத்தொடர்ந்து…நிகழ்ந்த அரசகரும நிர்வாக மொழியழிப்பு நடவடிக்கைகளும்… அதன்விளைவாக 1958இல் அரங்கேறிய
இனக்கலவரமும் அசை சார்ந்து நிகழ்ந்த உயிரிழப்புகளும் எமது தாயக மக்களின் மொழிப் பற்றையும் மொழியுணர்வையும் வான்வரை உயர்த்தின எனலாம்!
‘உயிர் தமிழுக்கு’ என்ற கொள்கை வித்திடப்பட்டதும் இக்காலத்தில் எனலாம்! மொழிக்காக எம்மக்கள் சிறைவாசம் அனுபவித்த காலம்
இங்குதான் ஆரம்பமானதெனக் கூறலாம்!
சிங்களமொழித் திணிப்பு மும்முரப்படுத்தப்பட்ட இக்காலத்திற்றான் தாயகத்தின் படித்த…பட்டம் பெற்ற… படிக்கவல்ல தமிழ்மக்கள் சிலரும் புலம்பெயரும் நிலைக்குத்தள்ளப்பட்டனரெனலாம்!
அவர்களிற் பெரும்பாலானோர் பிரித்தானியாவை நோக்கிக் கப்பலேறியதாக அறியக்கிடக்கிறது!
இக்காலகட்டங்களில் ஈழத்தில் நிகழ்ந்த சத்தியாக்கிரகங்களும் மலேசியா மற்றும் தமிழக தேசங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளும் பொதுவாகப் பிரித்தானியாவிலும் குறிப்பாக இலண்டனிலும் தமிழரின் குடியிறக்கத்திற்கு வழிவகுத்தன எனலாம்!
இதனைத் தொடர்ந்து… 1970இன் ஆரம்பத்தில்… இலங்கையில்… பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வினில் ‘தரப்படுத்தல்’ எனும் போர்வையில் நிறைவேற்றப்பட்ட இனமுரண்பாட்டுக் கொள்கையே… பல
கல்வித்தகைமையும் வினை;த்திறன் ஆற்றலும் கொண்ட மாணவர்களை
இன மொழி சார்ந்து எழுச்சிகொள்ள வைத்ததெனலாம்!
இத்துடன்…1974இல்… யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின்போது நேர்ந்த உயிரிழப்புகளும் தமிழுள்ளங்களிற் தமிழ் மொழியுணர்வையும் தாயக உணர்வையும் மேன்மேலும் வளர்த்தன என்றால் அது மிகையாகாது!
இக்காலகட்டத்திற்றான்…ஈழத்திலிருந்து பல மாணவர்கள் இலண்டனை நோக்கி உயர் கல்விக்காக விமானமேறினார்கள்!
ழேசவா டுழனெழn இலுள்ள நுனஅழவெழn எனும் பகுதியிலுள்ள ஆனைனடநளநஒ Pழடலவநஉhniஉஇ ழேசவா டுழனெழn Pழடலவநஉhniஉ மற்றும் ளுழரவா நுயளவ டுழனெழn பகுதியிலுள்ள ளுழரவா நுயளவ டுழனெழn Pழடலவநஉhniஉஇ ளுழரவாயடட எனும் பகுதியிலுள்ள ளுழரவாயடட Pழடலவநஉhniஉஇ டீழடவழn டுயnஉயளாசைந பகுதியிலுள்ள டீழடவழn ஐளெவவைரந ழுக வுநஉhழெடழபலஇ ஆயnஉhநளவநச பகுதியிலுள்ள ஆயnஉhநளவநச ருniஎநசளவைல என இப்படி ஒருசில குறித்த கல்விக்கூடங்களுக்கே தமிழ் மாணவர்கள் வந்து குவிந்தவண்ணமிருந்தார்கள்!
இக்காலத்தில் இலண்டனிற் காலடி வைத்தவர்களுள் ஒருவனே யான்!
இவ்வேளை… எனது உரையினைச் செவிமடுப்போருக்கும் இவ்வுரையின் ஆவணப்பதிப்பாக்கத்திபை படிக்க முனைவேருhக்கும் பயனளிக்கு மென்பதாலும் ‘இயல்வது கரவேல்’ எனும் தமிழ்மூதாட்டியின் முதமொழிக்கிணங்கவும் இவ்வுரையினை ஆற்றும் எனைப்பற்றியும் ஒருசில வரிகள் பதிவாக்கம் செய்வது நலமென எண்ஓகின்றேன்!
தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்ட யான்…இலங்கைத்தேசிய கீதத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவரும்…. இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி அகில
இலங்கை நீதியாக நடாத்தப்பெற்ற ‘மணித்தாய்நாடும் மரதனோட்டமும்’ எனும் கவிதைப்போட்டியில்… முதற்பரிசைப்பெற்றவரும்… தமிழகத்தின் திருநெல்வேலித் தமிழச்சங்கத்தினால் ‘முதுதமிழ்ப் புலவர்’ என விருதளித்துக் கௌரவிக்கப்பட்டவருமான… அமரர் முதுதமிழ்ப்புலவர் முருகுப்பிள்ளை நல்லதம்பி அவர்களின் இளையபுத்திரனாவேன்!
தந்தையை எனது ஒன்றரை வயிதில் இழந்தபோதும்…கூத்து நாடகம் கலை கவிதை பண்பாட்டு மரபுகளின் வேரினைத் தாங்கிய வட்டுக்கோட்டையிற் பிறந்து காரணத்தாலும்… தமிழோடும் தமிழர் வாழ்வோடும் பிணைந்த பண்பாட்டுச் சூழலில்…எமது முன்னோரின் பாரம்பரிய வழக்குகளின் மத்தியில்…தேச தேசிய தெய்வச்
சிந்தனையோடும் செயற்பாடுகளோடும் என் தாயாரால் வளர்க்கப்பட்ட
காரணத்தாலும் சிறுவயதிலிருந்தே கூத்தோடும் பாட்டோடும்
கலையோடும் கவிதையோடும் உறவு கொண்டு அரங்கிலும் அவையிலும் ஆற்றுகை செய்து வந்தேன்!
வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு வித்தியாசாலை…வட்டுக்கோட்டை
இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்விகற்றுப்…தொடர்ந்து… சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரேதயாக்கல்லூரி… கொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கலைகக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் உயர்தரக் கல்வி பயின்று பின்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் தமிழ் விஞ்ஞான கணித ஆசியரியனாகத் தொழிலனுபவம்பெற்ற நிலையிலேயே பொறியியற் பட்டப்படிப்பு நோக்கி இலண்டனை நோக்கி விமானமேறினேன்!
கூத்து நாடகம் கவிதை எழுத்தாக்கம்.. சொற்பொழிவு வில்லுப்பாட்டு கதாப்பிரசங்கம் எனப் பன்முக ஆற்றுகைகள் ஆளுமைகளைச் சுமந்து கொண்டே 1974இல் நான் பிரித்தானிய மண்ணிற் பிரவேசம் செய்தேன்
தாயகத்தின் கவிதை கலை பத்திரிகை ஊடக இலக்கியத் துறையின் ஆளுமைகள் பலருடன் அன்பையும் ஆற்றல்களையும் பகிர்ந்து பழகிய அனுபவமும் ஆழமான ஆத்ம வேட்கையும்.. என்னை இலண்டன வந்த காலங்களில்.. தமிழ் சார்ந்த… மொழி கல்வி கலை சார்ந்த…தேச தேசிய தெய்வ நிலைகள் சார்ந்த ஆளுமைகள் ஆற்றல்களைத் தேடிச் செல்லும் ஓர் ஆவலும் ஆர்வமும் நிறந்த பயணதில் ஈர்ப்போடு
ஈடுபடவைத்தன எனலாம்! இந்தப் பரவலான தேடலே…
பிரித்தானியாவிற் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து ஒரு
நடுவுநிலைமையான அணுகுமுறைக்கு என்னை ஆளாக்கியுள்ளதென
நான் உறுதியாக நம்புகின்றேன்!
25. ற்கும் மேற்பட்ட நாடகங்களையும்… 30வரையிலான நாட்டிய நாடகங்களையும் கவிதை பாட்டு வில்லுப்பாட்டு பள்ளிக்கீதங்கள்
நாட்டியத்துக்கான பாடல்கள்.. மாத்திரமன்றி கவிதைத் தொகுப்பு
ஆய்வுநூல்.. நாட்டியநாடகத் தொகுப்பு எனப் பல்வகைப்
படைப்பாக்கங்களைப் படைத்தளிக்கும் பெருவாய்ப்பினையும் எனது பன்முக ஆளுமைகள் கொண்ட ஈடுபாடே எனக்கு இன்றுவரை அளித்து வந்ததாவே நான் நம்புகின்றேன்!
இக்களஅனுபவமும் தமிழ்ப் புலனெறிப் பின்னணியும்.. பிரித்தானியாவிற் தமிழ்மொழி வளர்ச்சிக்கான எனது தன்னார்வத்தோடும் தன்னுழைப்போடும் கூடிய அன்பியல் அறிவியல் அறப்பண்பியல் சார்ந்த தொடர்ச்சியான தொண்டும் பங்களிப்புமேத என்னை இவ்வுரையை நிகழ்த்துதற்கான தகைமைக்கு ஆளாக்குகிறதென நம்பி எனது கடமையை ஆற்றிட விழைகின்றேன:!
மேலும் 1974இன் கடைசிப் பகுதியில்…எனது பொறியியல் முதலாண்டு ஆரம்பக்கல்வியை யான் டீழடவழn ஐளெவவைரந ழுக வுநஉhழெடழபல இலும் எனது பொறியியற் பட்டப்படிப்பை ஆனைனடநளநஒ Pழடலவநஉhniஉ இலும் கற்க நேர்ந்ததால் எனக்கு பிரித்தானியாவின் வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்த தமிழ் மக்களையும் அறிந்து பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டிற்று எனலாம்! தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்… தமிழ்ச்சங்கங்கள்…தமிழர் முன்னேற்றச் சங்கங்கள்… கலை மன்றங்கள்… கலைப்பள்ளிகள்… வானொலி… தொலைக்காட்சி பத்திரிகை ஊடகங்கள்… இளையோர் பெற்றோர் கழகங்கள்…முதியோர் இல்லங்கள்.. ஆலயங்கள்.. அறிவியற் பல்கலைக்கழகங்கள்…தொண்டர் நிறுவனங்கள் என அனைத்து நிலை அமைப்புகளுடனும் இணைந்து கவிதை எழுத்து கலைப்பணியும் தமிழ்ப்பணியும் கருத்தியல் அறிவியற் பணியும் ஆற்றிய நீண்டகால அனுபவத்தின் பின்னணியிலேயே இவ்வுரையை ஆற்றுவதறகு யான் முன் வந்துள்ளேன்!

