இப்பாரிய பொறுப்பினைத் தலையேற்று அதனை வெற்றிகரமாக ஆற்றி வருகின்ற… எளிமையும் இங்கிதமும்… பணிவும்… பண்பாற்றலும் மிக்க… அன்பு இளவல்…மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்கட்கும்…அவரது தலைமையில் உழைத்து உறுதுணைசெய்யும் அவர்தம் அணியினருக்கும்….
எனது தமிழ் வாழ்வின் தகைமை கண்ணுற்று… என்னை இப்பணியில்
இணைத்த ஆஸ்திரேலியாவின்…ஐயா திரு மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா அவர்கட்கும் எனது அனபிற்குரிய இலண்டன் வசந்தன் குருக்கள் ஐயா அவர்கட்கும்
எனது இதயங்கனிந்த வணக்கங்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்!
தேசத்தமிழர்கள்… உலகத்தமிழர்களாகித் தேமதுரத்தமிழோசையை உலகமெலாம் பரவும் வகைசெய்யும் எங்கள் மிடுக்கு மீசைக்காரன் மகாகவி பாரதியின் கனவுகள் மெய்ப்படுகின்ற காட்சியைக் காண
இவ்விணைய அரங்கிலே விழிகள் விரியக் கூடியிருக்கின்ற அறிஞர்பெருமக்களே! ஆய்வாளர்களே! ஆர்வலர்களே! அன்புள்ளங்களே! எங்கள் நாளைய சந்ததியின் காவலர்களே!பாவலர்களே! நாவலர்களே! தோழர்களே! நண்பர்களே!
உங்களனைவரையும் உள்ளன்போடு வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்!
இக்கருத்தரங்கில்.. இதுவரை உரையாற்றிய அறிஞர் பெருமக்களின் அற்புதமான ஆற்றுகைகள் மூலம் அறிவொளிபெற்றேன்! அன்புணர்வுற்றேன்!
அவர்களுக்கும் எனது பணிவன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொளிகின்றேன்!
பதியெழ அறியாப் பழங்குடி மாந்தர் எனப் பதிவு செய்தான் இளங்கோ! ‘விதியே! விதியே! தமிழச்சாதியை என்செய நினைத்துளாய்? என விதியினை வினவினான் எங்கள் கவிமுனி பாரதி!
பதியது விலகி… வதிவிடம் தேடிப் பாரெலாம் பரவி… நிதியொடும் பொதியொடும் நிலைத்திட நேரினும்…
கதியெமக்கெங்கள் கனித்தமிழென்ற கருத்தினை நெஞ்சின் கருவினிற் கொள்ள அரிய நல்வாய்ப்புகள் தருகின்ற தமிழக அரசினர் தமக்கும் என் தனியான நன்றிகள்!
இன்று ளுவநிhநn ர்யறமiபெ போன்ற மாமேதைகள் ஆய்ந்து வந்த…வருகின்ற முதற் பொருளாகிய நிலத்தையும் பொழுதையும்..
இன்றைய விஞ்ஞானம் தொடர்ச்சியாய்ப் பேசும் விண்ணையும் வளியையும் தீயையும் நீரையும் அன்றே உய்த்தறிந்து இலக்கியப் பொருளாய் செம்மொழிச்சுடராய் எமக்களித்த முன்னோர்களின் அறிவியல் வரலாறு பற்றிய ஆய்வுகள் பலவற்றை இன்று ஆற்றிவருகின்ற இந்திய தமிழக ஈழப் பல்கலைக்கழகங்களை வாழ்த்திட வார்ததைகள் போதா!
தாய்மடிதேடும் குழந்தைகள் போலத் தாயகநிலங்களைத் தவிப்பொடு நோக்கும் சேய்கள் யாம் என்பேன்!
வாய்ப்பினைத் தந்து வரவேற்கும் உங்களின் சேவைகள் தொடர…
இறைவனை வேண்டுவேன்!
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று கணியன் பூங்கன்றன் ஓதிய உயர்வரிகளுக்கு உருவங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமகால வரலாற்றுக் கால ஓட்டத்திற்… புலம் பெயர்ந்தாலும் உளம் பெயராதவர்களாக…ஒருதொல்குடிவரலாற்றின் சொந்தக்காரர்களாக… எம்மை ஒருங்கிணைத்து ஒருகுடையின் கீழ் உயிர்ப்போடு… உணர்வோடு… இயங்கவைத்துக்கொண்டிருக்கின்ற எம்தாய்த்தமிழை…
ஒருமொழியாக மட்டுமன்றி…ஒரு வழியாக மட்டுமன்றி… எமது விழியாகவும்… திசைகாட்டும் உயிரொளியாகவும்… கலங்கரை விளக்காகவும்… ஏற்று…. ஏந்திப் போற்றியவாறுதான்;; யாம்
இவ்வுலகப்பேழையில்…. உலவுகிறோம்… குலவுகிறோம்! நிலவுகிறோம!; என்ற செய்தியை முதலில் ஈண்டு பதிவு செய்ய விரும்புகின்றேன்!
ஆழக்கடல் நடுவே… பெரும் புயல் மழையிற் சிக்கிய பெருங்கப்பல்போல… யாமும் எம்தமிழ்மொழியும் கலையும் கல்வியும்
இலக்கியமும் பண்பாடும் பன்முகச் சவால்களுக்கு முக்ஙகொடுத்துப் பயணிக்கின்ற ஒருநிலையிலும் கூட…
‘பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்’ எனும் கலித்தொகையின் செல்நெறியோடு வரலாற்றின் வளைவு நெளிவுகளையும்… வாழ்வியலின் வலிகளையும் வலிமைகளையும் கலையாகவும் காவியமாகவும் படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!
புறப்பொருளிருளிருளிற்… தடம்புரண்டு போகாமல்.. பொய்யறிவின் பிடியில்… போலிகளின் மடியில்… அறப்பிறழ்வு மலிந்த அறிவியலின் மிடியில்..…
வரலாற்றுச் சுவடிகளும்.. படிப்படியாக இழந்து.. போகாமல்..
எமது இருப்பைத் தக்கவைப்பதற்குரிய ஒரு தாங்குசக்தியாகவே தமிழை யாம் பொதுவாக்ப் புலம்பெயர்நிலங்களிலும்…குறிப்பாகப் பிரித்தானியாவிலும் எமது குழந்தைகட்குப் புகட்ட முயல்கிறோம் என்பதை யான் இவ்விடத்திற் பதிவுசெய்ய விரும்புகின்றேன்!
ஆபிரிக்க.. கிழக்காசிய தேசங்களிலும் ஏனைய பிறநாடுகளிலும்
வாழந்துகொண்டிருக்கின்ற தமிழ்மக்கள் தங்கள்
அடையாளங்களைத்தேடி ஏங்கித்தவிக்கும் செய்திகளையறிவதன் மூலம் நாளை எமது குழந்தைகளும் அந்நிலைக்கு ஆகிவிடக்கூடாதே என்ற ஆதங்கம் எம்முட் பலருக்கு ஏற்படுவதை யாம் அவதானிக்கமுடிகிறது!
மலேசியப்பலகலைக்கழகப் பேராசிரியர் குமரன் அவர்கள் தமது
உரையில் மலேசிய மக்ளின் தமிழ்மொழி வளர்ச்சி பற்றி
உரையாற்றியமை நெஞ்சை நெகிழவைத்தது!
அவர் மலேசியத் தமிழ் நாட்டார் பாடல்களின் வரிகளை எடுத்துக்
கூறியபோது எனது விழிகளில் பாரதியின் முகமே தோன்றியது! மொழிபெயர்ப்புகளோடு முடிந்துவிடுவதல்ல ஒரு மொழியின் வளர்;ச்சி!
மொழியென்பது பேசப்படவேண்டும்! மொழியப்படாத மொழிக்கு விழியும் ஒளியும் உயுpர்ப்பும் உந்துசக்தியும் உயர்வும் இருக்கமுடியாது என்பதை யாம் பூரணமாக உணர்ந்திருக்கிறோம்!
தமிழ்மொழியை ஒரு ‘மனன’ மொழியாகவும்… இயக்கமற்ற ‘மௌன’ மொழியாகவும் எமது நாளைய சந்ததிக்குக் கையளிப்பதில் எதுவித திருப்தியையும் அடைந்துவிட யாம் தயாராகவில்லை!
கலை இலக்கியப் படைப்பாக்க சக்தியின் மீளுருவாக்கமே ஒரு மொழிவளர்ச்சியைத் தக்கவைக்குமெனபதை யாம் மறந்துவிடக்கூடாது!
இலக்கியம் கண்டு இலக்கணம் காண்பதும் பழையன கழிந்து புதியன புகுதலும் இல்லையேல் எம்மால் மொழிவளர்ச்சியை எமது நாளைய சந்ததியிடம் கையளிக்கமுடியாதென்ற உண்மையை யாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது!
இலக்கிய உருவாக்கத்தின் தொடர்ச்சியே…. நவீன இலக்கண உருவாக்கத்தின்… மற்றும் புதிய சொல்லுருவாக்த்தின்… சமகாலத் தொழில் நுட்ப…கலைச் சொல்லாக்கத்தின் வளர்ச்சியாகமுடியுமென யாம் நம்பும் நிலையில்… காலத்தோடும் ஞாலத்தோடும் இணையவல்ல கலை கவிதை இலக்கியங்களைப் படைக்கவல்ல எரு இளைய சமுதாயத்தைப் படைக்கும் திறனுள்ள கல்விப் பாடத் திட்டத்துடன்
கூடிய ஒரு தமிழ்க்கல்வி இயக்கத்தினையே பிரித்தானியாவின் தமிழ்க் கல்விக் கலைக்கூடங்கள் கடைப்பிடிக்கவேணடிய அவசியத்தை யாம் உணர்கின்றோம்!
தமிழில்… ‘மொழி’ என்றாலே.. அது பெயராகவும் வினையாகவும் சுட்டிநிற்பது நீங்களறியாததல்ல!
உள்ளுணர்வும் உண்மைப் பொருளறிவும்..உயிர்ப்பும் இல்லாத தமிழ் மொழி வியாபாரம் செய்வதால் தமிழ் மொழி வளரமாட்டாதென உலகத்மிழர்களாகிய நாம் உறுதியாக நம்பவேண்டியதாகவுள்ளது!
ஒருமொழியின் கவிதையும் கலையும் இலக்கியமும் பண்பாட்டு வரலாற்று விழிப்புணர்வும் எப்பொழுது மக்களை ஒன்று படுத்துகிறதோ அன்று தான் மொழியானது வளர்ச்சியடைகிறது என்பது எமது நம்பிக்கையாகும்!
இதே வேளை… புலம்பெயர் பெயர்நிலங்களிலே… யாமும் எமது குழந்தைகளும் அவர்தம் குழந்தைகளும்… ஒருபல்லினக்கலாச்சாரச்
சூழலிலே…
பன்மொழிப் பாவனைக்கான அழுத்தங்களின மத்தியில் வாழ்கின்ற ஒரு யதார்த்தநிலையையும் யாம் எக்காலத்திலும் புறக்கணிக்காதவர்களாகவே இயங்கி வருகின்றோம்!
இங்கு தான் ‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!’ என்கின்ற ஒரு தத்துவமும்… ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்’ என்ற பெருநோக்கும்.. ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்ற திருமந்திரத் திறனாய்வும்…
‘சார்வினுக்கெல்லாம் தகத் தக மாறினும் தானும் தன் தருமமும் மாறாதிருக்கின்ற’ பாரதியின் மந்திரச்சொல்லின் மகிமையும்… ‘ஈதல் இசைபடவாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற வள்ளுவத்தின் வழிகாட்லும்…
‘மாற்றான் தோட்டத்து மலரும் மணம் தரும்’ எனும் பேரறிஞரின் பாரணைக்கும் பகுத்தறிவும்..
எம்மைத் தமிழ் வெறியாளர்களாக மாற்றாமற் தமிழ் நெறியாளர்களாக நெகிழவைத்துள்ளது என்பதை யாம் முற்று முழதாக உணர்ந்துள்ளோம்!
எமது தாயக நிலத்திலே நிகழ்ந்த…. தேசிய இன முரண்பாடுகளின் நிமித்தம் புலம்பெயர்தேசங்களிற்கு வந்த பெற்றோர்களின் எச்சங்களாக விளங்கும் எமது இளைய சந்ததியினருக்கு அவர்கள் தம் மொழி கலை பண்பாட்டு விழுமியங்களை சனநாயகவழியில்.. கையளிப்பதையும் அதுசார்ந்த உணர்வுகளை அவர்கள் வாழும் தேசநியதிகள் நியமங்கள் வழிநின்று வெளிப்படுத்துவதையும் பிரித்தானிய அரசு எப்போதும் வரவேற்கத்தவறியதில்லை!
பிறதாயகதேசங்களிலிருந்து தத்தமக்குரிய தனித்துவமான காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து வந்து பிரித்தானியாவிற்குடியேறிய பிறஇனங்களுக்கான மனிதநேய…அரசியல்…சமூக பொருளாதார உரிமைகளைப் பேணுவதிலும் அவற்றைப்பாதுகாப்பதிலும் முன்னின்று உழைக்கும் பலநிறுவனங்களை யாம் இந்நாட்டின் பல பாகங்களிலும் எம்மாற்காணமுடியும்!
ஏறக்குறைய 66மில்லியன் குடிசனத்தொகையைத் தன்னத்தே கொண்ட பிரித்தானியாவில் அண்ணளவாக 9.4மில்லியன் பிரித்தானியாவின்

