மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடாத்தும் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில்…
‘பிரித்தானியாவிற் தமிழ்மொழி வளர்ச்சி’ எனும் பொருண்மையிற்.. புலவர் நல்லதம்பி சிவநாதன் ( இலண்டன் தமிழவை) அவர்கள் 01-06-2020 அன்று ஆற்றிய உரையின் கட்டுரையாக்கப் பதிவு
செல்லரித்துக்கிடந்த செங்தமிழின் ஏடுகளைக் கல்லரித்துக் கழுவிக் கலத்தாலழியாது சொல்லொலித்துச் சிரிக்கும் சுரங்கமென நூலாக்கிப் புல்லரிக்கச்செய்யும் புகழ்படைத்த பெருமக்கள் எள்ளெரித்து வணங்கி எமக்காகத் தவங்கிடந்து உள்ளெரித்துச் சென்ற அன்புத் தீ அறிவுத் தீ உள்ளிருந்து எங்கள் உயிருக்கு ஒளியூட்ட உலகமெலாம் பறந்தும் உள்ளுணர்வால் ஒன்றானோம்
அன்னைத்தமிழின் பொன்னடி வணங்கி முன்னைத் தமிழ்க்குடி மூத்தோரை வழுத்தி என்-
மண்ணை மனத்திருத்தி மக்கள் நலம்வேண்டி என்னையும் இப்பணியில் இணைத்தஇறை தாள் போற்றி முன்னமர்ந்து உரைகேட்கும் உள்ளங்கள் தமை வாழ்த்தி எண்ணம் பகிரும் என்னுரைக்கு வருகின்றேன:!
உலகின் துயர் விலக உலுப்புகின்ற கொரோனாவின் அலகின் பிடி விலக ஆண்டவனை வேண்டிடுவோம்!
எனது உரையின் ஆரம்பப்புள்ளியாகத் தாய்த்திருமொழிக்காவும் தம்மின விடுதலைக்காவும் தமதின்னுயிர் நீத்த அனைத்துத் தமிழுள்ளங்களுக்கும் எனது இதயாஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றேன்!
தன்னிகரில்லாச் செம்மாழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிபற்றிய
இந்த அருமையான பன்னாட்டுக் கருத்தரங்கினை இணைய வழிகூட்டுகின்ற பெரும்பணியினை மேற்கொண்டு அதனை மிகச்சிறப்பாக ஆற்றிக்கோண்டிருக்கின்ற மதுரை காமராசர் பல்கலைகழக அமைப்பினர் மற்றும் அவர்களோடு இணைந்து தோளோடு தோள்கொடுத்து பங்காற்றிக்கொண்டிருக்கின்ற தமிழக அரசின் தமிழ் வளர்சிசித்துறை உலகத்தமிழராய்சிசி நிறுவனத்தினர் ஆகியோர்க்கு முதலில்ர எனது சிரங்தாழ்ந்த வணக்கங்கங்களையும் நன்றிகளையும் முதற்கண் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்!
இப்பணிக்கான வழிகாட்டல்களையும் வாய்ப்பு வசதிகளையும் வழங்கி… அன்னைத் தமிழின் அகில வளர்ச்சி குறித்த..உலக்த்தமிழர்தம்
இயக்கத்தினையும் ஈர்ப்பினையும் ஈடுபாட்டினையும் அவர்தம் ஆற்றல்களையும் ஆளுமைகளையும் உலகப்பார்வைக்கு எடுத்துவரும்
இவ் அளப்பரியசேவையில்…
ஆர்வத்தோடும்..அரவணைப்போடும் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களையும்…அவரோடு இணைந்து…. இயைந்து
இப்பெருமுயற்சிக்குப் பலமும் வளமும் அளித்து வருகின்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்… என்னை என்றும் ‘அண்ணை வாங்க’ என அழைத்து உரிமையோடு அன்பு பாராட்டி எனது தமிழ்ப்பணிகளை ஊக்குவிக்கும் எனதன்புச் சகோதரர் ஐயா விசயராகவன் அவர்கட்கும்…
இப்பாரிய பொறுப்பினைத் தலையேற்று அதனை வெற்றிகரமாக ஆற்றி வருகின்ற… எளிமையும் இங்கிதமும்… பணிவும்… பண்பாற்றலும் மிக்க… அன்பு இளவல்…மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்கட்கும்…அவரது தலைமையில் உழைத்து உறுதுணைசெய்யும் அவர்தம் அணியினருக்கும்….
எனது தமிழ் வாழ்வின் தகைமை கண்ணுற்று… என்னை இப்பணியில்
இணைத்த ஆஸ்திரேலியாவின்…ஐயா திரு மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா அவர்கட்கும் எனது அனபிற்குரிய இலண்டன் வசந்தன் குருக்கள் ஐயா அவர்கட்கும்
எனது இதயங்கனிந்த வணக்கங்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்!
தேசத்தமிழர்கள்… உலகத்தமிழர்களாகித் தேமதுரத்தமிழோசையை உலகமெலாம் பரவும் வகைசெய்யும் எங்கள் மிடுக்கு மீசைக்காரன் மகாகவி பாரதியின் கனவுகள் மெய்ப்படுகின்ற காட்சியைக் காண
இவ்விணைய அரங்கிலே விழிகள் விரியக் கூடியிருக்கின்ற அறிஞர்பெருமக்களே! ஆய்வாளர்களே! ஆர்வலர்களே! அன்புள்ளங்களே! எங்கள் நாளைய சந்ததியின் காவலர்களே!பாவலர்களே! நாவலர்களே! தோழர்களே! நண்பர்களே!
உங்களனைவரையும் உள்ளன்போடு வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்!
இக்கருத்தரங்கில்.. இதுவரை உரையாற்றிய அறிஞர் பெருமக்களின் அற்புதமான ஆற்றுகைகள் மூலம் அறிவொளிபெற்றேன்! அன்புணர்வுற்றேன்!
அவர்களுக்கும் எனது பணிவன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொளிகின்றேன்!
பதியெழ அறியாப் பழங்குடி மாந்தர் எனப் பதிவு செய்தான் இளங்கோ! ‘விதியே! விதியே! தமிழச்சாதியை என்செய நினைத்துளாய்? என விதியினை வினவினான் எங்கள் கவிமுனி பாரதி!
பதியது விலகி… வதிவிடம் தேடிப் பாரெலாம் பரவி… நிதியொடும் பொதியொடும் நிலைத்திட நேரினும்…
கதியெமக்கெங்கள் கனித்தமிழென்ற கருத்தினை நெஞ்சின் கருவினிற் கொள்ள அரிய நல்வாய்ப்புகள் தருகின்ற தமிழக அரசினர் தமக்கும் என் தனியான நன்றிகள்!
இன்று ளுவநிhநn ர்யறமiபெ போன்ற மாமேதைகள் ஆய்ந்து வந்த…வருகின்ற முதற் பொருளாகிய நிலத்தையும் பொழுதையும்..
இன்றைய விஞ்ஞானம் தொடர்ச்சியாய்ப் பேசும் விண்ணையும் வளியையும் தீயையும் நீரையும் அன்றே உய்த்தறிந்து இலக்கியப் பொருளாய் செம்மொழிச்சுடராய் எமக்களித்த முன்னோர்களின் அறிவியல் வரலாறு பற்றிய ஆய்வுகள் பலவற்றை இன்று ஆற்றிவருகின்ற இந்திய தமிழக ஈழப் பல்கலைக்கழகங்களை வாழ்த்திட வார்ததைகள் போதா!
தாய்மடிதேடும் குழந்தைகள் போலத் தாயகநிலங்களைத் தவிப்பொடு நோக்கும் சேய்கள் யாம் என்பேன்!
வாய்ப்பினைத் தந்து வரவேற்கும் உங்களின் சேவைகள் தொடர…
இறைவனை வேண்டுவேன்!
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று கணியன் பூங்கன்றன் ஓதிய உயர்வரிகளுக்கு உருவங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமகால வரலாற்றுக் கால ஓட்டத்திற்… புலம் பெயர்ந்தாலும் உளம் பெயராதவர்களாக…ஒருதொல்குடிவரலாற்றின் சொந்தக்காரர்களாக… எம்மை ஒருங்கிணைத்து ஒருகுடையின் கீழ் உயிர்ப்போடு… உணர்வோடு… இயங்கவைத்துக்கொண்டிருக்கின்ற எம்தாய்த்தமிழை…
ஒருமொழியாக மட்டுமன்றி…ஒரு வழியாக மட்டுமன்றி… எமது விழியாகவும்… திசைகாட்டும் உயிரொளியாகவும்… கலங்கரை விளக்காகவும்… ஏற்று…. ஏந்திப் போற்றியவாறுதான்;; யாம்
இவ்வுலகப்பேழையில்…. உலவுகிறோம்… குலவுகிறோம்! நிலவுகிறோம!; என்ற செய்தியை முதலில் ஈண்டு பதிவு செய்ய விரும்புகின்றேன்!
ஆழக்கடல் நடுவே… பெரும் புயல் மழையிற் சிக்கிய பெருங்கப்பல்போல… யாமும் எம்தமிழ்மொழியும் கலையும் கல்வியும்
இலக்கியமும் பண்பாடும் பன்முகச் சவால்களுக்கு முக்ஙகொடுத்துப் பயணிக்கின்ற ஒருநிலையிலும் கூட…
‘பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்’ எனும் கலித்தொகையின் செல்நெறியோடு வரலாற்றின் வளைவு நெளிவுகளையும்… வாழ்வியலின் வலிகளையும் வலிமைகளையும் கலையாகவும் காவியமாகவும் படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!
புறப்பொருளிருளிருளிற்… தடம்புரண்டு போகாமல்.. பொய்யறிவின் பிடியில்… போலிகளின் மடியில்… அறப்பிறழ்வு மலிந்த அறிவியலின் மிடியில்..…
யாமும் எமது இளைய சந்ததியினரும் தன்னடையாளமும்
இனஅடையாளமும் பண்பாட்டு விழுமியங்களும் எமது தொன்மைமிகு
வரலாற்றுச் சுவடிகளும்.. படிப்படியாக இழந்து.. போகாமல்..
எமது இருப்பைத் தக்கவைப்பதற்குரிய ஒரு தாங்குசக்தியாகவே தமிழை யாம் பொதுவாக்ப் புலம்பெயர்நிலங்களிலும்…குறிப்பாகப் பிரித்தானியாவிலும் எமது குழந்தைகட்குப் புகட்ட முயல்கிறோம் என்பதை யான் இவ்விடத்திற் பதிவுசெய்ய விரும்புகின்றேன்!
ஆபிரிக்க.. கிழக்காசிய தேசங்களிலும் ஏனைய பிறநாடுகளிலும்
வாழந்துகொண்டிருக்கின்ற தமிழ்மக்கள் தங்கள்
அடையாளங்களைத்தேடி ஏங்கித்தவிக்கும் செய்திகளையறிவதன் மூலம் நாளை எமது குழந்தைகளும் அந்நிலைக்கு ஆகிவிடக்கூடாதே என்ற ஆதங்கம் எம்முட் பலருக்கு ஏற்படுவதை யாம் அவதானிக்கமுடிகிறது!
மலேசியப்பலகலைக்கழகப் பேராசிரியர் குமரன் அவர்கள் தமது
உரையில் மலேசிய மக்ளின் தமிழ்மொழி வளர்ச்சி பற்றி
உரையாற்றியமை நெஞ்சை நெகிழவைத்தது!
அவர் மலேசியத் தமிழ் நாட்டார் பாடல்களின் வரிகளை எடுத்துக்
கூறியபோது எனது விழிகளில் பாரதியின் முகமே தோன்றியது! மொழிபெயர்ப்புகளோடு முடிந்துவிடுவதல்ல ஒரு மொழியின் வளர்;ச்சி!
மொழியென்பது பேசப்படவேண்டும்! மொழியப்படாத மொழிக்கு விழியும் ஒளியும் உயுpர்ப்பும் உந்துசக்தியும் உயர்வும் இருக்கமுடியாது என்பதை யாம் பூரணமாக உணர்ந்திருக்கிறோம்!
தமிழ்மொழியை ஒரு ‘மனன’ மொழியாகவும்… இயக்கமற்ற ‘மௌன’ மொழியாகவும் எமது நாளைய சந்ததிக்குக் கையளிப்பதில் எதுவித திருப்தியையும் அடைந்துவிட யாம் தயாராகவில்லை!
கலை இலக்கியப் படைப்பாக்க சக்தியின் மீளுருவாக்கமே ஒரு மொழிவளர்ச்சியைத் தக்கவைக்குமெனபதை யாம் மறந்துவிடக்கூடாது!
இலக்கியம் கண்டு இலக்கணம் காண்பதும் பழையன கழிந்து புதியன புகுதலும் இல்லையேல் எம்மால் மொழிவளர்ச்சியை எமது நாளைய சந்ததியிடம் கையளிக்கமுடியாதென்ற உண்மையை யாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது!
இலக்கிய உருவாக்கத்தின் தொடர்ச்சியே…. நவீன இலக்கண உருவாக்கத்தின்… மற்றும் புதிய சொல்லுருவாக்த்தின்… சமகாலத் தொழில் நுட்ப…கலைச் சொல்லாக்கத்தின் வளர்ச்சியாகமுடியுமென யாம் நம்பும் நிலையில்… காலத்தோடும் ஞாலத்தோடும் இணையவல்ல கலை கவிதை இலக்கியங்களைப் படைக்கவல்ல எரு இளைய சமுதாயத்தைப் படைக்கும் திறனுள்ள கல்விப் பாடத் திட்டத்துடன்
கூடிய ஒரு தமிழ்க்கல்வி இயக்கத்தினையே பிரித்தானியாவின் தமிழ்க் கல்விக் கலைக்கூடங்கள் கடைப்பிடிக்கவேணடிய அவசியத்தை யாம் உணர்கின்றோம்!
தமிழில்… ‘மொழி’ என்றாலே.. அது பெயராகவும் வினையாகவும் சுட்டிநிற்பது நீங்களறியாததல்ல!
உள்ளுணர்வும் உண்மைப் பொருளறிவும்..உயிர்ப்பும் இல்லாத தமிழ் மொழி வியாபாரம் செய்வதால் தமிழ் மொழி வளரமாட்டாதென உலகத்மிழர்களாகிய நாம் உறுதியாக நம்பவேண்டியதாகவுள்ளது!
ஒருமொழியின் கவிதையும் கலையும் இலக்கியமும் பண்பாட்டு வரலாற்று விழிப்புணர்வும் எப்பொழுது மக்களை ஒன்று படுத்துகிறதோ அன்று தான் மொழியானது வளர்ச்சியடைகிறது என்பது எமது நம்பிக்கையாகும்!
இதே வேளை… புலம்பெயர் பெயர்நிலங்களிலே… யாமும் எமது குழந்தைகளும் அவர்தம் குழந்தைகளும்… ஒருபல்லினக்கலாச்சாரச்
சூழலிலே…
பன்மொழிப் பாவனைக்கான அழுத்தங்களின மத்தியில் வாழ்கின்ற ஒரு யதார்த்தநிலையையும் யாம் எக்காலத்திலும் புறக்கணிக்காதவர்களாகவே இயங்கி வருகின்றோம்!

