‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!’
‘ஆன்றோர் அறிவும் சான்றோர் சால்பும்
தோன்றாத் துணையாய்க் கொண்டது அவையே!’
-இலண்டன் தமிழவை
‘மெய்ப்பொருள் காண்போம்;
மேதினி சிறக்க’
செல்லரித்துக் கிடந்த செந்தமிழின் ஏடுகளைக்
கல்லரித்துக் கழுவிக் காலத்தாலழியாது
சொல்லெலித்துச் சரிக்கும் சுரங்கமென நூலாக்கிப்
புல்லரிக்கச் செய்யும் புகழ் படைத்த பெருமக்கள்
எள்ளெரித்து வணங்கி எமக்காகத் தவம் கிடந்து
உள்ளெரித்துச் சென்ற அன்புத்தீ அறிவுத்தீ
உள்ளிருந்து எங்கள் உயிருக்கு ஒளியூட்ட
உலகமெலாம் பறந்தும் உள்ளுணர்வால் ஒன்றானோம்!
– புலவர் சிவநாதன்


