(புலவர் சிவநாதன் அவர்கள் இலண்டனிலிருந்துஅரங்கிலும் அலையிலும் ஏட்டிலும் இதழிலும் படைத்தளித்தகவிதைகளிலிருந்துஎடுத்துக் கோர்க்கப்பட்டகவிதைத் தொகுப்புநூல்! அந்நியஆதிக்கஅடக்குமுறைகளாலும் ஊடுருவல்களாலும் அடிமைப்படுத்தப்பட்டுஆட்கொள்ளப்பட்டதமதுவரலாற்று இறைமையைமீட்கவும் திட்டமிடப்பட்டுத் தொடர்ச்சியாகநிகழ்த்தபபட்டுவந்த இன இழிப்பிலிருந்தும் சித்திரவதைகள் சிறைவாசங்களிலிருந்துதம்மைக் காக்கவும் தாயகத்திற் தமிழ் மக்கள் செய்தயாகங்கள் ஈகங்கள் தியாகங்கள்…முகங்கொண்ட இழப்புகள் இன்னல்கள் இடுக்கண்கள்…பட்டதுயரங்கள் துன்பங்கள் ஆகியபல்வேறுபட்ட இனம்-சார்அகப் புறப் பரிமாணங்களையும்…புலம்பெயர்வாழ் தமிழர்வாழ்வியல்.. உளவியல் சமூகவியல் விவகாரங்களையும் சித்தரிக்கும் கவிதாஓவியங்களைஉள்ளடக்கிய இந்நூல் இலண்டன் வல்தம்ஸ்ரோமண்டபத்தில் புலவர் சிவநாதனின் பலஅரங்கப் படைப்புகளோடுமிகவும் விமரிசையாகஅரங்கேற்றப்பட்டது!
இலண்டன் தமிழவையினதும் மதுரைஉலகத் தமிழ்ச் சற்கதிதினதும் ஆதரவிலும் மதுரையில் அரங்கேறியஇலண்டன் பத்மினிகுணசீலன் அவர்களின் ‘நாத்தனகலாலயாநாட்டியப் பள்ளியின் தயாரிப்பில் உருவான..புலவர் அவர்களின் படைப்பான‘பிரபஞ்சலீலை’நாட்டியநாடகஅரங்கநிகழ்வின்போது….
இக்கவிதைப் படைப்பின் களமுணர்ந்துகனமுணர்ந்துகவித்துவத் தரமுணர்ந்து…
மார்கழி2014இல்…
தமிழகத்தின் வில்லிபுத்தூர் செந்தமிழ் அறக்கட்டளையினர் புலவர் சிவநாதன் அவர்களுக்கு…‘கவிப்பேரொளி’எனும் விருதுவழங்கிக் கௌரவித்துப் பெருமைசெய்தனர்!
சத்தியம் சாகாது- அது
தீயிலும் வேகாது!
நித்தியமாயிருக்கும்- அது
நீதியின் வழி நடக்கும்! -அற
நீதியின் வழி நடக்கும்!
-புலவர் சிவநாதன்

