1990களின் ஆரம்பகாலத்தில்…ஓர் இலண்டனபல்கலைக்கழகத் தமிழ்மாணவர்களின் வேண்டுகோளையேற்று…புலவர் சிவநாதன் அவர்கள் எழுதிஅரங்கேற்றிய‘விழிப்பு’எனும் நாடகத்தில்…நகைச்சுவைக்கானஒருபாத்திரமாகஒருகல்யாணத்தரகர்பாத்திரம் தோன்றிஅனைவரையும் சிரிக்கவும் சிநதிக்கவும் வைத்திருந்தது!இந்தநாடகத்தில் ஜெயகரன் டாக்டார்அஞ்சலிஆகியோர்நடித்து இப்படைப்பிற்குசிறப்பூட்டினர்!
இதன்பின்னர்..இதேபடைப்புமீணடும் தமிழவையின் அரங்குகளில் டாக்டர்அனந்தசயனன் ரஜனிஅனந்தசயனன் நிர்மலசங்கர்ஆகியோரதுபங்களிப்பில் அரங்கேறியபோது..அந்த‘விழிப்பு’நாடகத்தில்… இந்தநகைச்சுவைப்பாத்திரத்திற்கானஒருதனிக்காட்சிஇணைக்கப்பட்டுசேரலாதன் வரதலிங்கம்உதயணன் சார்ள்ஸ் எனப் பலரதுநடிப்பில்அரங்கேற்றம் கணடது!சேரலாதன் இப்பாத்திரத்தினைஅதிசிறப்பாகநடித்திருந்தார்!இதனைத்தொடர்ந்து…இத்தனிக்காட்சியேஒருமுழ நகைச்சுவைச் சித்திரமாக..ஒருதனிக்கலைப்படைப்பாக..‘தமிழ் மணம் டொற் கொம்’எனும் தலைப்பில்…சேரலாதன் வரதலிங்கம் ரகுப்பிரியாஜெயகரன் உதயணன் எனப் பலரதுபங்களிப்பில் அரங்கேற்றம் கண்டுபார்வையாளர்களைச் சிரிப்பிலாழ்த்தியது!

