புலவர் சிவநாதனின் இளம்பருவம் தொட்டே அவரது வாழ்வோடு வேரூன்றி விழுதெறிந்து வளர்ச்சி பெற்ற தமிழின் இறைமை.. தமிழர் தொன்மை சார் மரபுகள் அன்பு அற விழுமியங்கள் குறித்த ஆழமான பற்றும் பக்தியும் நம்பிக்கைகளும்…
தமிழ் மொழி தமிழர் கலைகள் கவிதைகள் சரித்திரம் வரலாறு இலக்கியங்களோடு கூடிய புலவரது ஈடுபாடுகளும்… தேடல்களும்
1974இல்… இலண்டனில் விமானத்திலிருந்து காலடி வைத்தபோதே.. பலத்த சவால்களுகளைச் சந்திக்கத் தொடங்கியது!
அதுவும் குறிப்பாக அவரது பட்டப் படிப்பினைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வாதாரமாக ஏற்றுக் கொண்ட கட்டடப் பொறியியற்துறைத் தொழில் சார்ந்த களப் பயணமும்; பயிற்சிகளும் பயில்நெறிப் பட்டறைகளும் புலவரிற்கு வழங்கிய கசப்பான அதேவேளை அவரது அறச்சீற்றங்களை வெகு ஆழமாகவும் தீவிரமாகவும் தூண்டிய அனுபவங்கள்… புலவரின் சுய அடையாளத்தைச் சீண்டிய ஒரு சில கள அனுபவங்கள் புலவர் சிவநாதனைத் தனது தாய்மொழியின் செம்மொழித் தகைமை குறித்தும் தனது முன்னோரின் வரலாற்றுத் தொன்மை குறித்தும் தொல்லியற் சான்றாதாரங்கள் தேடிக் குவிக்கின்ற ஆழ்ந்த பரந்த நீண்ட ஆய்வுகளுக்குள் இழுத்துச் சென்றது!
முன்னோர் புலமைத்துவ புலனெறி வழக்கின் வழியான இலக்கிய சான்றுகளை நோக்கிய புலவரின் தேடல்களோடு….
இவற்றிற்கு இணையாக…
கட்டடப் பொறியியல் அறிவுச் செல்நெறி நிலைப்பட்ட…
‘மண்சார் பொறியியல்’ ‘மண் ஆய்வு’ ‘மண்ணடுக்கமைப்பு’ ‘பூகோளத் தட்டியக்கங்கள் அசைவுகள் அதிர்வுகள்’ ‘கடலடித் தட்டியக்கம்’ ‘எரிமலை வளையம அல்லது நெருப்பு வளையம்’ போன்றவை பற்றிய செய்தித் தேடல்களும்..; அவை குறித்த உசாவு துணைப் பதிவுகள் ஆய்வுக் கட்டுரைகள் களப் பரிசோதனைகள் பற்றிய தொடர்ச்சியான ஆhவமும் ஈடுபாடும் உந்தலும் உய்த்துணர்வுகளும் புலவர் சிவநாதனின் ஆத்மார்த்த அனுபவமாக மாற்றம் பெற்றது!
அதுவும் மிகவும் குறிப்பாகச்; சங்க இலக்கியப் புலவோர் பாக்கள்.. தொல் தமிழர் கப்பற் கட்டுமானம் கட்டடக் கட்டுமானம் மற்றும் கடல் வழி வணிக மேலாண்மை தலைமைத்துவம் சார்ந்த அறிவியல்… ஆளுமைகள் ஆற்றல்கள் அனுபவம் பற்றிய ஆழ்ந்த தேடல்களும்…
முக்கடற்கோள்கள்… குமரிக்கண்டம்… கடல் கொண்ட நாடுகள் தீவுகள் பற்றிய தேடல்களும் புலவரின் பொறியியல் கட்டடத்துறைகளினூடு மேன்மேலும் ஆய்வுகளாய் ஆழமடைந்து.. சான்றுகளோடு உரம் பெற்று சத்தியமாய் உறுதிபெற்ற ஒரு காலகட்டத்தில்…
‘சத்தியம் சாகாது!’ எனும் புலவரின் கவிதைத் தொகுப்பு நூலின் இறுதிப் பக்கக் கவிதையில் புலவரின் முன்னோர் குறித்த தேடலின் ஓசை பதிவாக்கம் பெற்றது!
சங்க இலக்கியங்களையும் அவற்றின் பாக்களை யாத்த புலவோரின் பதிவுகளையும் புனைவுகளாகவும்.. பொய்யுரைகளாகவும் சித்திரித்து வந்த புத்திசீவிகள்.. தமிழர் வரலாற்றின் திரிபுவாதிகளின் வாதங்களுக்கான அறிவார்ந்த பதில்களைத் தேடியது புலவரின் கவியுள்ளம்!
இவ்வாறான ஒரு காலப்பின்னணியிற்றான்…
2004இன் கடற்கோள் அனர்த்தம் இந்து சமுத்திரத் தீவுகளை அதிரவைத்து… அகிலத்தின் பார்வையை ‘கடற்கோள்’ அல்லது ‘சுனாமி’ அல்லது ‘ஆழிப் பேரலைகள்’ பற்றியும் அதனது கடூரமான தாக்கங்கள் பக்கவிளைவகள் பற்றியும் மீள்பார்வைக்குக் கவனப்படுத்தியது!
2004 ஆழிப்பேரலையின் விளைவாக நிகழ்ந்த கடலோர கடல் சார்ந்த நிகழ்வுகளே… ‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்’ எனும் நூலாக வடிவெடுத்தது என்றால் அது மிகையாகாது!
தமிழகத்தின் தமிழாசானும் கவிஞரும் எழுத்தாளரும் ‘அகர முதலித் திட்ட’ மேனாள் இயக்குநருமான திருமிகு தங்க காமராஜ் அவர்களைப் பதிப்பாசிரழயராகக் கொண்டு சென்னை சித்திரா பதிப்பகத்தினால் இந்நூல’ அச்சிட்டுப் பதிப்பிடப்பட்டு… தெய்வத்திரு சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் தலைமையில்.. சென்னை கன்னிமாரா நூலகத்தின் அணணா கலையரங்கில் அரங்கேற்றம் கண்டது! பின்னார் பேராசிரியர் தீரன் ஆகியோரின் உரைகளோடு இலண்டன் றுiளெவழn ஊhரசஉh ர்யடட இலும் இரண்டாம் தடவையாக இந்நூல் வெளியிடப்பட்டது!


