என் நீண்டகால நண்பரும் இலண்டன் தமிழவையின் நிறுவனருமான புலவர் ந. சிவநாதன் அவர்களின் கவியாக்கத்தில் இலண்டன் பத்மினி குண்சீலன் அவர்களின் கலையாக்கத்தில் வழூவூரார் இசை நாட்டியப்பள்ளியின் ஏற்பாட்டில் சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ‘சிவகங்கை செந்தீ’எனும் நாட்டிய நாடகம் நேற்று( பிப்.11)நடைபெற்றது. இலண்டனில் மருத்துவம் (ம)பொறியியல் படிக்கும் 30 மாணவிகள் உயரூட்டமான
முகதோற்றத்துடன் வீரமும் வேட்கையும் கொண்ட வீர மங்கைகளாக வேலுநாச்சியாரையும் குயிலியையும் கண்முன்னே களமாடவைத்து நம்மை சிவகங்கை சீமைக்கே அழைத்து சென்றார்கள். மருது சகோதரர்களின் கர்ஜனையை செவிகளில் ஒலிக்க செய்தார்கள். நாட்டியத்தை வடிவமைத்த பத்மினிஅவர்களை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சி வழுவூரார் நாட்டிய (ம)இசைப்பள்ளியின் ஆண்டு விழாவுடன் இணைந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை (கூ)ஆணையர் திருமதி. சி. ஹரிப்பிரியா அவர்களும் பத்ம ஶ்ரீ சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களும் புலவர் ந. சிவநாதன் (ம)பத்மினிஆகியோர்க்கு விருதையும் மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரை வழங்கினார்கள். இசைப்பள்ளிக்குழந்தைகளின் குரலிசையும் இசை மேதை மாணிக்க விநாயகம் அவர்களின் பேரன் பேத்தியின் தேனிசையும் இசைவாணர் செந்தில் மாணிக்கவிநாயகம் அவர்களின் நேர்த்தியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் பாராட்டுக்குரியவை மறக்க முடியாதவை.இதே நாட்டிய நிகழ்ச்சியை 14ஆம் நாள் மாலை 6 மணிக்கு மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கண்டுகளிப்போம்.
தங்க காமராஜ்

