‘தமிழவை’ – 1974அம் ஆண்டில் பூத்து விரிந்த ஒரு புலவனின் கனவு:
“ஒரு பல்லினக் கலாச்சாரச் சூழலிலும் கூட… ஓரினம் தனது அடையாளத்துடனும்… அங்கீகாரத்துடனும் இப்பூகோள முகத்தில் நிலைத்து… உயிர்புடன் வாழமுடியுமென்ற நம்பிக்கையுடன் உலக சமுதாயத்தின் சனநாயக விழுமியங்களையும் மனிதநேயத்தின் மாண்புகளையும் மதித்துப் போற்றிப் பேணவல்ல தேசமாம்… ‘பிரித்தானிய மண்ணில்’…. பல்லாயிரம் ஆண்டுகளுக்கான தொன்மைகொண்ட….. உலகச் செம்மொழியையும்….. எழுத்துச் சுவடிகளுக்குள் அகப்படாத…. தமிழர்தொல்குடி வரலாற்றுப் பெருமையையும் பேணிப் பாதுகாக்காகவல்ல…. உலகத் தமிழருக்கான ஒரு தமிழ் விருட்சமாகத் ‘தமிழவை’ என்ற அமைப்பு நிறுவப்பட வேண்டும்”
தமிழ் மொழி… கலை… கவிதை… இலக்கிய… பண்பாட்டுத் தொன்மிய… கிராமிய… ஊர்மிய… மரபுகளை…. புதிய வீச்சுடனும் புதிய பரிமாணங்களுடனும் நவீன யுக்திகளுடனும் மீட்டுப் பாதுகாத்து நாளைய சந்ததிக்குக் கையளிக்கும் பணியிற் தமிழவை முன்னின்றுழைத்தல் வேண்டும்.
தமிழவையின் முதன்மையான இலக்குகள்:
தமிழ் மொழியினதும் தமிழினத்தினதும் தேச, தேசிய, தெய்வ நிலைப்பட்ட தொன்மை நிறை வரலாற்றையும் இவ்வரலாறு இவ்வுலகிற்கு வழங்கிய மொழி கலை பண்பாடு வாழ்வியல் விழுமியங்களையும் உலகப் பரப்பில் வாழும் இன்றைய சந்ததிக்கு மட்டுமின்றி வாழப்போகின்ற நாளைய சந்ததிக்கும் வழங்கிடப் பன்முக முயற்சிகளை எடுத்தல்.
உலக ஆய்வாளர்களின் பௌதிக ஆய்வுப் பரிமனங்களுகுட் சிக்காத… தொல்குடி வரலாற்றுத்தேடல்களை ஊக்குவித்து… நிலத்தடியிலும்… கடலின் ஆழத்திலும் அமிழ்ந்து கிடக்கும் ஆதிநாகரிகத் தொடர்சிகளையும் ஊடுதொடர்புகளையும் வெளிக்கொணர்தல்.
எமது முன்னோரின் முகாமைத்துவ… தலைமைத்துவ ஆற்றல்களை அனுபவங்களை இனங்கண்டு…. அவற்றின் பழங்களை உள்வாங்கி… அவற்றினை நவீன நிர்வாக முகாமைத்துவ… தலைமைத்துவத் தத்துவங்களுடன் இணைத்து… தனிமனித…. சமுதாய மேம்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைகளை நடத்துதல்.
வையப் பொதுமறையாம் திருக்குறளையும்… தெய்வப் பெரும் புலவனாம் வள்ளுவப் பெருந்தகையையும் உலகப் பார்வையில்… உச்சப்படிக்கு உயர்த்துதல்.