இப்படைப்பின் தலைப்பு..எமதுதாயகநிலங்களிற் பலராலும் அறியப்பட்ட…‘திரிசங்குசொர்க்கம்’எனும்…ஈருலகங்களுக்கும் இடைப்பட்டநிலையினைச் சித்தரிக்கும்..திரிசங்குவையும் இந்திரனையும் விசுவாமித்திரமுனிவரையும் இணைத்தஒருகர்ணபரம்பரைக் கதையினைத் துழுவியதாகும்!
ஓன்றிற்குமேற்பட்டதடவைகள் அரங்கேறியபுலவர் சிவநாதன் அவர்களது இந்தநாடகப் படைப்பு..70கள் 80களில்…தாயகதேசங்களிலிருந்துகடல் கடந்தும் கண்டங்கள் கடந்தும் வெளிநாடுகளிற்குப் புலம்பெயர்ந்து…வந்துஒருபல்லினக் கலாச்சாரச் சூழலில்…பல்லினக் குழுக்களின் மரபுகள் நம்பிக்கைகளின் அலைமோதல்களின் மத்தியில்…வாழ்கின்றபுலம்பெயர்வாழ் தமிழர்களின்குடும்பவாழ்விடையே..சமகாலங்களில் நிகழ்ந்துவருகின்றகாட்சிக் கோலங்கள் பலநூறு!
நிலத்தில் உளமும்…
புலத்தில் வளமும்..
சுய- நலத்தில் களமும் தைத்து..
கிழக்கில் ஒருகாலும்..
மேற்கில் மறுகாலும் வைத்து…
வானத்தில் ஒருசிறகும்…
வையத்தில் மறு சிறகும் விரித்து…
கலக்கத்திலும் மயக்கத்திலும் குழப்பத்திலும் வாழும் உலகத் தமிழர்சமூகம்…
சந்திக்கும் புயல்கள்..அனுபவிக்கும் பூகம்பங்கள்..எதிர்கொள்ளும் பிரளயங்கள் பற்பல!
அதுவும் குறிப்பாக…தற்காலஉலகச் சுழற்சியில்..புலம் பெயர்ந்துவாழ் தமிழர்சமூகத்தின் பெற்றோருக்கும் அவர்தம் பிள்ளைகட்கும் இடையிலான இல்லறம் அல்லதுகுடும்பம் அல்லதுதிருமணவாழ்வுபற்றியநம்பிக்கைகள் கொள்கைள் குறித்தமுரண்களைமையப்படுத்திஎழுதப்பெற்றஒருயதார்த்தநாடகப் படைப்பே இதுவாகும்!ஓவ்வொருதடவையும் வெவ்வேறுநடிகர்களையும் இணைத்துஅரங்கேற்றப்பட்டபடைப்புகளுள் இதுவும் ஒன்றாகும்!

