நவீனயமன் தர்பார்: ‘காலதேவனின் சட்டசபையில்’
‘வாசாப்பு’இசைநாடகமரபினையும் நாட்டுக்கூத்துமரபினையும் இணைத்த இந்தஅரங்கநாடகப் படைப்பு…
1980-90களில் எமதுதாயகமக்களின் விடுதலைவேட்கையினையும் அவர்கள் வடித்தகண்ணீரையும் செந்நீரையும் பிரிதிபலிக்கின்ற ஓர் அரங்கப் படைப்பாக்கமாகவல்தம்ஸ்ரோதமிழ்ப்பாடசாலைமழலைகட்காகப் புலவர் சிவநாதனால் எழுதப் பெற்று..நெறியாள்கைசெய்யப்பெற்று…அரங்கேற்றம் கண்டுள்ளது!
யமன் சித்திரகுப்தன் மற்றும் மழுவர்கள் ஆத்மாக்கள் வேடங்களிற் தோன்றியபாலர்கள்…மிகவும் சிறப்பாகநடித்துப் பலத்தபாராட்டினைப் பெற்றனர்!
நண்பர்கள் சாந்திகுமார்சிறீபாலன் ஆகியோரதுமைந்தர்களேயமன் வேடந்தாங்கிநடித்தனர்!
பின்னர்சிறீபாலனின் மகன் அவுஸ்திரேலியாவிலும் நடித்து இப்படைப்பினைஅரங்கற்றியதுபற்றிஅறிந்துள்ளேன்!இதன் ஒளிப்பதிவினைக் கூடப் பார்த்ததாகஞாபகம்!தற்போதுஎனதுகைக்குக் கிடைக்காததுவேதனை!
அதன்பின்னர்..நவராத்திரியைமுன்னிட்டு..மேலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு‘காலதேவனின் சட்டசபையில்’எனும் புதியதலைப்புடன் அரங்கேறியஇப்படைப்பு..எமதுபாசையூர்ச் சகோதரர்களாலும் நடிக்கப் பெற்றுஅரங்கேறியுள்ளது!
‘காலதேவனின் சட்டசபையில்’எனும் இப்படைப்பின் ஒலிப்பதிவுஎமதுதமிழவையின் ஆவணப்பதிவாகஎம்மிடம் உள்ளமைமகிழ்சிசிதரும் ஒருவிடயமாகும்!
மேலும்…
2007இல்..தமிழவையின் முத்தமிழாரம் நிகழ்ச்சியைமுன்னிட்டுமீண்டும் காலமாற்றத்திற்குஏற்றவாறு..நவீனப் படுத்தப்பட்டு புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று..நெறியாள்கைசெய்யப்பெற்று…றுiளெவழn ஊhரசஉhடைட ர்யடடஇல் அரங்கேற்றம் கண்டது! இத்தடவை..தம்பிஉதயணன் யமனாகவும்..தம்பிபிறிற்றோசித்திரகுப்பதனாகவும் தோன்றி..மிகமிகச் சிறப்பாகநடித்துப் பார்வையாளர்களைமகிழ்வித்தனர்!
தமதுஒப்பற்ற இசைஈடுபாட்டின் மூலம்..எமது இசைநாடகங்களுக்குஎப்போதும் உயிரூட்டிஉணர்வூட்டிவருபவர்கள்..சகோதரர்ஜோ வில்சன் இருதயானந்தன்..தம்பிகள் ரமே~; ஜெயம் தனம் ஆகியோரே!
இப்படைப்பிலிருந்துஒருநறுக்குக் காட்சி…05-10-2024 அன்றுநிகழ்ந்ததமிழவையின் வெள்ளிவிழாநிகழ்வின் நாடகஉலாவிலும் இடம்பெற்றமைகுறிப்பிடத்தக்கது! உதயணன் யமனாகவும் மணிவண்ணனசித்திரகுப்தனாகவும் பாத்திரமேற்றுநடிக்க..ரமே~; ஜோ இருதயானங்தன் ஜெயம் தனம் ஆகியோர்பின்னணியிசைபாடல் ஆதரவினைவழங்கிச் சிறப்பித்தனர்!

