எமதுஈழத்தமிழினம்..
தமதுதாயகத்திற் தொடர்ச்சியாகச் சிறீலங்காவின் சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை இனத்தின் இனவாதஅரசியலின் ஆதிக்கவெறியினாலும்..திட்டமிடப்பட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டகாடைத்தனத்தினாலும்;..இராணுவஅதிகாரஅச்சுறுத்தல்கள்..படுகொலைகளினாலும்…உலங்குவானூர்திகளின் மூலமும்மற்றும் விமானப்படைவிமானங்கள் மூலமும் செல் குண்டுகளின் தாக்குதலகளின் மூலமும் தீக்கிரையாக்கப்பட்டதங்கள் வீடுகள் விடுதிகள் கல்விச்சாலைகள் பொதுச் சந்தைகள் மட்டுமன்றிசிதைதழிக்கப்பட்டதமதுஊர்கள் கிராமங்கள் வயல்கள் காணிகளிருந்தும் விரட்டப்பட்டுத் துரத்தப்பட்டுத் தமதுசொந்தநிலத்திலேயேஅகதிகப்பட்டநிலையில்…ஆலயங்களிலும் மதபீடங்களிலும் தஞ்சம் புகுந்துதங்களையும் தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றத் துடித்தகாலம் ஒன்றினைக் கடந்துவந்துள்ளது!
அந்தக்காலகட்டத்தின் பிரிதிபலிப்பேஇறைதரிசனம் எனும் இப்படைப்பாகும்!
இப்படைப்பாக்கம்ஈழத்தமிழரிடைபுரையோடிக் கிடந்தசாதிசமயஏற்றத்தாழ்வுகளின் இழிவுநிலையையும் அதிலிருந்துதமிழினம் விடுபடவேண்டியதனமுக்கியத்துவத்தினையும் சுட்டிக்காட்டும் மையக்கருவில் புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று இயக்கப்பெற்றுத் தயாரிக்கப்பெற்றுஅரங்கேறியஅரங்கநாடகமாகும்!
இப்படைப்பினுக்கான இடமும் நாளும் குறிக்கப்பட்டபின்னர்…விழாநாளன்று…விழாவிற்கானமண்டபத்தில் நிகழ்வுக்கானஆயத்தளங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருங்தபோது..தியாகதீபம் திலீபனின் அமரத்துவச் செய்திஅறியநேர்ந்ததால் இவ்விழாதியாகதீபத்திற்கான ஓர்அஞ்சலிநிகழ்வாகமாற்றப்பட்டமைஈண்டுகுறிப்பிடத்தக்கது!

