புலவர் சிவநாதனின் நாடகவியல் ஆக்கங்களும் அரங்கவானலைத் தயாரிப்புகளும்
தாயகத்த்pல்…வட்டுக்கோட்டையிலும் சுன்னாகம் கந்தரோடைஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கொழும்புமாநகரிலும் கிளிநொச்சிஉருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலிலும் வேர்கொண்டுகிளைவிட்டவட்டூர்ப்பங்கயமணாளனின் நாடகவியல் அரங்காற்றுகைபடைப்பாக்கஆளுமைஅனுபவங்களும் கதாப்பிரசங்கழ் வில்லுப்பாட்டுஆகியகலைகளின் ஈடுபாடும் இயக்கமுமே.. அவரதுபுலம்பெயர்வாழ்விற் புலவர் சிவநாதன் என்கின்றஒருவிரிந்தபரிமாணத்தில் அவரைஇயக்கிவந்தனஎனலாம்!
புலவர் சிவநாதனின் வட்டுக்கோட்டைவாழ்வுக்காலம் அவரைநாட்டுக்கூத்துகளோடும் இசைவாசாப்புநாடகங்களோடும் மிகவும் நெருக்கமாகவும் உயிர்ப் பங்களிப்போடும் பிணைத்துக் கொண்டதன்பின்னணியில்..புலவர் சிவநாதன் அவர்கள்எழுதி..இயக்கிப் படைத்தளித்தஇன்பியல் துன்பியல் இணைந்தஅரங்கவானலைஆக்கங்கள் பலவாகும்!
கூத்துநடைகள்..இசைநாடகப் பாடல் வடிவங்கள் கவிதாநிகழ்வுப் பாங்குகள் தாளலயவடிவங்கள் எனப் பன்முகப்பட்டஎழுத்தாக்கச் செல்நெறிகளைப் புலவர் சிவநாதன் அவர்க்ள் கையாண்டுவந்தமைகுறிப்pடத்தகக்கது!
எனினும்…
நாடகத் துறையிலும் ஒப்பனைஉடையலங்காரம்ஒளிஒலிஅரங்கஇசைஅமைப்பு..மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றில் இப்படைப்புகளுக்குத் துணைபுரிந்தவர்கள் அனைவருமேவருமானம் கருதாதுதமதுசொந்தஈடுபாட்டின் விளைவாகப் தன்னார்வமுனைப்புகளோடுபுலவரோடுதுணைநின்றுபயணித்தவர்களேஎன்பதுஒருமுக்கியகவனப் புள்ளியாகும்!
பல்கலைக்கழகக் கற்கைநெறிகள் பட்டப்படிப்புகளிலும்…தொடர்ச்சியானகுருமரபுப் பட்டறை..பயில்நெறிஅனுபவங்களிலும் ஈடுபட்டுவளர்ச்சியும் விருத்தியும் அடைந்தஆளுமைகள் எவருமேஇப்படைப்பாக்கமுயற்சிகளில் ஈடுபடாதஒருகாலகட்டத்திலும் இவற்றிற்கெல்லாம் வாய்ப்பும் வசதியும் நிதிஆதரவும் அற்றஒருநெருக்கடியான இறுக்கமானசூழலிலேயே..அன்றாடம் தமதுவாழ்வுக்கானஉழைப்புஊதியம்…தாயகத்தில் வாழும் தங்கள் குடும்பஉறவுகள் குறித்தபழுக்கள் பொறுப்புகள்…தமதுகல்விமேம்பாட்டு இலக்குகள் எனப் பலநிலைப்பட்டசுமைகளோடும் சுயங்களோடும் போராடிக்கொண்டிருந்தஒருபுலம்பெயர்சமூகத்தின் உறுப்பினர்களைஊக்குவித்தும் இணைத்தும் இயக்கியுமே புலவர் சிவநாதன் அவர்கள் தனதுபடைப்பாக்கங்களைத்தமிழுக்கும் தமிழருக்கும் தந்துள்ளார்!தனதுதாயகதேசத்தின் அனுபவங்களையும் தான் வாழ்நதுகொண்டிருந்த புலம் பெயர்சமூகத்தின் பிரச்சனைகள் பின்னணிகள் பின்னல்களையும் மையப்படுத்திஎழுதியும் இயக்கியும் தயாரித்தும் அரங்கேற்றியபடைப்புகளே இவையாகும்!
பாலரிலிருந்துமுதியவர்வரை…பெண்களையும் ஆண்களையும் இணைத்துஇயங்கியஇவரதுநாடகஅரங்கவியல’ஆற்றுகைப் பயணம் இலண்டனின் பிரசிததிபெற்றபலமண்டபங்களில் அரங்கேறியமைஈண்டுகுறப்பிடத் தக்கது!
(இப் படைப்புகளிற் பங்குபற்றியநடிகர்கள் கலையுள்ளங்களின் பெயர்விபரங்கள் பின்னர் இணைக்கப்படவுள்ளன)

