30 தடவைகள் மேடையேறியது. ‘இயக்கவிதி – 3’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. ‘கண்ணாடி வர்ப்புகள்’ நாடகம் ஆறு நாடகங்- கள் என்ற நூல் அச்சுச் செலவிற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக சிறப்பான காட்சி அமைப்புடன் மேடையேறியது. ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது மட்டுமல்லாமல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம்
இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 83 ஆடிக்கலவரத்தின் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர் அந்நியச்
சூழலில் வாழும் எமது சிறுவர்கள் தமது சுய அடையாளத்தை இனம் காணவும், தன்னம்பிக்கையுடன் ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பவும், தமிழ் மொழியைச் சரளமாகப் பேசிப் பயிலவும் சிறுவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, தொடர்ச்சியாக சிறுவர் நாடகங்களை மேடையேற்றி வருகிறார். சி.மௌனகுருவின் ‘வேடரை உச்சிய வெள்ளைப்புறாக்கள்’ முதல் இவ்வருட நாடகவிழாவில் மேடையேறிய மாவையின் ‘இது ஒரு நாடகம்’ என்று சிறுவர் நாடகங்கள் தொடர்கின்றன. பிரெக்ற் என்ற பிறமொழி நாடகாசிரியரை ‘யுகதர்மம்’ மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்- தது போல் பல தரமான பிறமொழி நாடகங் களை எமக்கு அனுபவமாக அறியத்தந்தார். எனினும் பாலேந்திரா சுயமொழி நாடகங்களையே அதிகமாக மேடையேற்றினார். மேலும் ‘பாரத தர்மம்’, ‘துன்பக் கேணியிலே’, ‘பெயர்வு’, ‘போகிற வழிக்கு ஒன்று’, ‘மரணத்துள் வாழ்வு’ போன்றன பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும். இவரது தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நாடக விழாக்கள் இலங்கை, இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்- லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் அண்மையில் இந்தியாவிலும் இடம் பெற்றுள்ளன. கொள்கை
என்று எந்தக் குழுவுடனும் இணையாமல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், தனித்துவமாகவும் இயங்கி, எந்நாளும் நாடகத்துக்கான தேடலை யாசித்து நிற்கின்ற இந்தக் கலைஞனின் சக்தி அதீதமானது. பாலேந்திராவின் ஆரம்ப நாடகமான ‘ஏணிப் படிகள்’இலிருந்து பெரும்பாலான நாடகங்களை நேரிடையாகவும், பல சிறுவர் நாடகங்களை வீடியோவிலும் பார்த்தவன் என்ற ரீதியில் ஒரு குறிப்பைச் சுருக்கமாகச் சொல்லமுடியும். “இவரது நாடகங்கள் எனது மனவெளியில் என்றும் ஜீவிதமாக இருப்பவை”. பாலேந்திராவின் நாடகங்களில் பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான உறவு பலமாக இருந்து கொண்டிருக்கும். எப்போதும் ஒரு உயிர்நிலை பேணப்படும். ஒரு கணம் சரிந்தாலே வீழ்ந்து போகக் கூடிய “மழை” என்ற நாடகத்துடன் இரு மணி நேரமாக எங்களைக் கட்டிப்போட்டு வைப்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். ‘கண்ணாடி வார்புகள்’ – டொம், மழை – அண்ணன் பாத்திரங்கள் இவரது நடிப்புக்குப் புகழ் சேர்த்தவை. ஆயினும் ‘பசி’யில்
இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இவரது நாடகங்களில் இசை, ஒளி என்பன முக்கிய பாத்திரங்களாக அமையும். ‘முகமில்லாத மனிதர்கள்’, ‘யுகதர்மம்’ மற்றும் அனைத்துச் சிறுவர் நாடகங்களிலும் இசையும், பாடல்களும் நிறைந்து காணப்படும். ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் பிற்பகுதியில் இவர் கையாண்ட ஒளி அமைப்பும், இளையோடிய
இசையும் பார்வையாளர்களை அவ்விரு நாடகப்பாத்திரங்களின் உலகிற்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துடன் மனித அவலங்களைச் சொல்கிற, எமது வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டியதான இவரது நாடகத் தெரிவுகள் பிரசித்தமானவை. இவ்வாறு நாடகக் கலையின் சகல பக்கங்- களிலும் ஆற்றல் பதித்த இந்த மாபெரும் கலைஞன் “நாடகம் என்பது கூட்டு முயற்சி. தனது துணைவியார் ஆனந்தராணி மற்றும் சக நடிகர்கள்,
இசைக் கலைஞர்கள், காட்சி அமைப்பு உதவியாளர்கள், நாடக ஆசிரியர்கள் என்பவர்களால் தான் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம்
இயங்கமுடிகிறது” என்று சொல்லும் எளிமையான மனிதர். பழகுவதற்கு மென்மையானவர். பாலேந்திரா, அவரது நாடகங்கள், அவர் சார்ந்த கலைஞர்கள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். இப்பக்கத்தில் இவை மட்டுமே எனக்குச் சாத்தியமாயிற்று-
– ப. ஸ்ரீஸ்கந்தன் -தாய்வீடு
பிரித்தானியாவிலிருந்து பரதநாட்டியத்துறை மூலம் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றிய… பங்காற்றுகின்ற
நாட்டியக்கலை ஆளுமைகள்
• சுபத்திரா சிவதாசன்- Nரிசயமநனெசய னுயnஉந ளுஉhழழட
• பத்மினி குணசீலன் – யேசவாயயெ முயடயடயலய
• நளாயினி ராஜதுரை
• செல்வலக்சுமி ராமகிருஸ்ணன்
• ராகினி ராஜகோபால்- யேவலயடயலய னுயnஉந ளுஉhழழட
• ரஜனி சுரேஸ்குமார்
• கிரிஜா வரேதயசிங்கம்
• கங்கா சுதாகரன்
• ரஜி மோகன்ராஜ்
• உமா சந்திரதேவா
• விஜயாம்பிகை இந்திரகுமார்
• அன்னபூரணி சத்தியமூர்த்தி- ளுசi ஆநநயெனஉhi யேவலயி Pயடடi
• சுஜந்தினி மகேஸ்வரன் – யுசயனாயயெ னுயnஉந ளுஉhழழட
• ரகுப்பிரியா செந்தில்குமார்
• சிவறாஜி சிவகுமார்- ளுiஎயயெசவாயயெடயலயஅ
• மேனகா ரவிராஜ்
• மாலதி ஜெயநாதன்
• பிரேமிளா ரவீந்திரன்
• விநோதினி சண்முகநாதன்
• விநோதினி பரதன்
• ரட்ணலக்சுமி சோமசுந்தரம்
• புஸ்கலா கோபால்- ஆரவாசயடயலய
• அனுசா சஜீவ்- ளுயமவால குiநெ யுசவள
• ளுரளயnயெ ர்யசசiபெவழn- யேவலய நுயளவ
• நிருஜா குணரூபன்
• சாரங்கா குணசீலன்- யேசவாயயெ முயடயடயலய
• சாயிபானுமஞ்சரி கந்தஞானி

