புலம்பெயர் நாட்டில் 1990ல் இருந்து சிறுவர் நாடகங்களை தொடர்ந்து மேடையேற்றி வருகிறோம். ஆங்கிலச் சூழலில் வாழும் எமது சிறுவர்கள் எமது கலைஇ கலாச்சார விழுமியங்களைஇ எமது மொழியை அறிந்து கொள்ளவும்இ அவர்களது தன்னம்பிக்கையையும் ஆளுமை வளர்ச்சியையும் விருத்தி செய்யவும் நாடகம் ஒரு நல்ல ஊடகம் என்ற அடிப்படையில் இயங்கிவரும் நாம் கடந்த 17 வருடங்களாக லண்டன் தமிழ் நாடகப் பள்ளியை நடத்தி வருகிறோம்.
வாரந்தோறும் ஒன்றரை மணிநேரங்கள் நாடகப் பட்டறையை நடத்திஇ இதன் மூலம் திறமையான சிறுவர் நாடகங்களை தமிழில் தயாரித்து மேடையேற்றி வருகிறோம். இதன் மூலம் நடிப்பு மட்டுமல்லாது விளையாட்டாக கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அமைந்துள்ளன. எமது நாடகப் பள்ளியே லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நாடகப் பள்ளியாகும். தமிழ் நாட்டில் கூட சிறுவர்களுக்கான நாடகப் பள்ளி இல்லை என பிரபல நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.
எமது சிறுவர் நாடகங்களில்இ 6 வயதில் நடிக்க வந்தவர்களில் பலர் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி தொழில் புரிந்து கொண்டும்இ சிலர் திருமணம் செய்து கொண்டும் தொடர்ந்து எமது இளையோர் நாடகங்களிலும் பெரியவர் நாடகங்களிலும் நடித்து வருவது வளர்ச்சியின் ஒரு படியாகும். இதன் அடுத்த கட்டமாக அண்மைக்காலத்தில் இவர்கள் தாங்களாகவே தமிழில் நாடகப் படைப்புகளை எழுதி இயக்கி இரண்டு நாடகங்களை மேடையேற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் லண்டனில் பிறந்து வளர்ந்த இளையோர்.
இது விருது பெற்ற தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் 40ஆவது ஆண்டு விழா 2018இல் கொண்டாடப்பட்ட போது மேடையேற்றப்பட்ட பாலேந்திராவின் புகழ்பெற்ற நாடகமான “கண்ணாடி வார்ப்புகள்” (இது முதலில் 1978ல் மேடையேறியது) நாடகத்தில் நான்கு கதாபாத்திரங்களில் தாய் பாத்திரம் தவிர (நான் தாயாக நடித்தேன்) மற்றைய அனைத்து பாத்திரங்களிலும் இந்த இளையவர்கள் என்னுடன் இணைந்து நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார்கள். இது ஒன்றரை மணிநேர நாடகம். தமிழில் அனைத்து வசனங்களையும் அழகாகப் பேசியிருந்தார்கள்.
இதற்கு பிறகாக பாரதியின் “பாஞ்சாலி சபதம்” கவிதையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கவிதை நாடக நிகழ்வாக நிகழ்த்தினர். நாம் 1992ல் இருந்து லண்டனில் தமிழர் இருப்பும்இ எமது மொழிஇ கலாச்சார தனித்துவத்தை பேணும் முயற்சிகள் பற்றியும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்துள்ளோம்.
‘நாங்கள் எங்கள் வரலாற்றை எழுதவில்லை. பாரம்பரியம் என்பது பேச்சோடு நின்று விடுகிறது. நாங்கள் எதையுமே பேணிப்பாதுகாப்பதில்லை. மன்னன் சாஜஹான் காலையில் என்ன உணவு அருந்தினான் என்று தொடங்கி அத்தனையும் பதிவு செய்யப்பட்டன என்று ஒரு பத்திரிகையாளரான நண்பர் சொன்னார். அந்தளவு இல்லையென்றாலும் எங்கள் வாழ்வு, எங்கள் மக்கள், எங்கள் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவேண்டும். பதிவு செய்யப்படவேண்டும். இந்த நோக்குடன் “தாய்வீடு” பத்திரிகை எங்கள் ஊர்களில் வாழ்ந்த பிரபலமடைந்தவர்களுடன், தெரியப்படாமல் போய்விட்ட எங்கள் கலைஞர்களைப் பற்றியும் எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறது. கட்டுரைகளை சுருக்கமாக, எழுதி அனுப்புங்கள். களம், ‘தாய்வீடு’ தரக் காத்திருக்கிறது. கருத்து உங்களுடையது. கட்டுரைகளை செதுக்கி சொற்சித்திரங்களாக்கும் பொறுப்பு எங்களுடையது.’ மு.ளு. பாலச்சந்திரன்
தாய்வீடு • செப்ரெம்பர் 2010 – 101 –
தமிழ் நாடகம் உலகத் தரத்திற்கு உயரவேண்டும் என்றும், தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும் கடந்த 37 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றங்கள் செய்து வரும் ஒரு நாடக
இயக்கம் க. பாலேந்திரா அவர்களைப் பதிவு செய்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தன் கல்வி சார்ந்த பொறியியல் துறையில் முழு நேரத் தொழில் செய்துகொண்டு, எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை பெற்றுக் கொள்ளாமல், நாடகமே மூச்சாக இயங்கி,
இத்தனை வருட காலம் இடைவிடாது நாடகங்களை நிகழ்த்துவது உலகத் தமிழ் நாடக அரங்கில் நான் அறிந்தவரை இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும். யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திராவிற்கு அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்களே ஆரம்ப அனுபவங்களாக இருந்தன.
ஆயினும், 1972 கட்டுப்பெத்தை பல்கலைக் களகத்தில் பயிலும் நாட்களில், பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும், சங்கத் தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர் களுடன் ஏற்பட்ட தொடர்புகள் ஒரு சீரிய நாடகக்
கலைப் பயணத்துக்கு அடிகோலின. இவரை, முதன் முதல் அறியச் செய்தது இவர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சுகைர் ஹமீட் அவர்களின் ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமாகும். அப்போதைய அரசியல்
கூட்டணிகளின் எதிர் பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் வெளிப்படுத்தியது. 01.07.1973ல் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறிய இந்நாடகம் 74ல் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மேடையேற்றப்பட்டது குறிப்- பிடத்தக்கது. 74ல் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் அலெக்சி அபுசோவின் ‘பிச்சை வேண்டாம்’, மற்றும் ‘கந்தன்கருணை’ போன்ற நாடகங்- களில் பங்குகொண்ட இவர் கலைவிழா நாடகங்களாக ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்றவற்றின் பிரதிகளை ஆக்கி நெறியாள்- கையும் செய்திருந்தார். ஆயினும் 27.10.1976ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகமாகும். இதில் இவரும் ஆனந்தராணி அவர்களும் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும், உலகில் மூன்றாம் அரங்கு ஆதரவில் சென்னையில் மேடையேறியது நினைவு கொள்ளத்தக்கது. இம் மேடையேற்றத்திலும் பாலேந்திரா. ஆனந்தராணி ஆகியோர் அதேபாத்திரங்களை ஏற்று நடித் தமை அவர்களது கலைவாழ்வின் அர்ப்பணிப்பைச் சிறப்பாகச் சொல்லும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள் போன்றவற்றிற்காக நாடகங்களை மேடையேற்றி வந்த இவர், தொடர்ந்து நாடக இயக்கத்துக்கு ஒரு அமைப்புத் தேவையெனக் கருதி தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தை 1978இல் ஆரம்பித்தார். இதன்
மூலமாக தமிழகத்து, மற்றும் இந்தியப் பிறமொழி நாடகாசிரியர்கள், மேலும் பல நல்ல மேற்குலக நாடகாசிரியர்களின் நாடகங்களையும் நேர்த்தியாக மேடையேற்றி வருகிறார். குறிப்பாக மாவை நித்தியானந்தன், சி.சிவசேகரம், சி.மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச.வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களையும், தமிழக நாடகாசிரியர்கள்
இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘பசி’, ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘சுவரொட்டிகள்’ ஞான ராஜசேகரனின் ‘மரபு’ அம்பையின் ‘ஆற்றைக்கடத்தல்’, மற்றும் பாதல் சர்க்காரின் ‘ஏவம்
இந்திரஜித்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, ரஞ்சித்ராய் சௌத்திரியின் ‘பாரத தர்மம்’ போன்ற நாடகங்களை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து நெறிப்படுத்தியுள்ளர். இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் ‘கண்ணாடி
வார்ப்புகள்’இ பிரெக்டின் ‘யுகதர்மம்’, கார்சியா லோர்காவின் ‘ஒரு பாலை வீடு’, செக்கோவின் ‘சம்பந்தம்’இ வஸ்லோ காவலின் ‘பிரத்தியேகக் காட்சி ூ தரிசனம்’, பெக்கற்றின் ‘எப்போ வருவாரோ’ ஏரியல் டோப்மனின் ‘மரணத்துள் வாழ்வு’, இயூன் ஐயனஸ்கோவின் ‘இடைவெளி’, ஹரோல் பின்டரின் ‘போகிற வழிக்கு ஒன்று’ என்பவற்றை பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார். பாலேந்திராவின் நாடகங்களில், மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் யாழ்.கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும் மற்றும் கூத்துவகை ஆட்டத்துடனும் கூடியது. இந்நாடகம் 79 – 80இல் இலங்கையில் மட்டும்

