• ஆன்மிகத் துறையில்… அனைத்து ஆலய அர்ச்சகர்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும் குறிப்பாக என்ஃபீல்ட் நாகபூசணி அம்பாள் இலண்டன் சிவன்கோவில் மற்றும் சைவத்திருக்கோவில் ஒன்றியம் சைவமுன்னேற்றச்சங்கம்… ஈலிங் துர்க்கை அம்மன் கோவில் தர்மகர்த்தாக்களும்அடங்குவர்!
• தேச தேசிய தெய்வ மக்கள் தொண்டுநிறுவனப்… பொதுப்பணித்துறையில்… ‘அநாதைகள் அறக்கட்டளை’ தாபகர் அமரர் தெய்வேந்திரன் அமரர் ‘தமிழர் தகவல் நிலையம்’ வரதகுமார் திருமதி சாந்தா கணேசநாதன் டாக்டர் ஜெயநாதன் டாக்டர் சிறிக்கந்தராஜா… திரு வாமனானந்தன்… திரு ஆனந்ததியாகர்…. திரு ஜெகதீஸ்வரம்பிள்ளை திரு இந்துசேகரன் திரு குகச்சந்திரன் திரு சிவதம்பு திரு கணேசமூர்த்தி திரு உமாச்சந்திரன் என்ப்பலர் அடங்குவர்
• தமிழகத்திற் தமிழ்ப்பேருள்ளங்களுடனான அன்புறவு….
➢ தமிழ்ப் பேராசான் பேரறிஞர் அ ச ஞானசம்பந்தன் அவாகளது இறுதிகாலப் பகுதியில் அப் பெருமகனார் எனக்கு வழ்ங்கிய அருளாசி
➢ நாடகப் பேராசான் பேராசிரியர் தெய்வத்திரு சே இரமானுஜம் அவர்களுடனான சந்திப்புகளும் அனுபவப்பகிர்வுகளும்
➢ அருளாளர் மெய்யறிவாளர் தெய்வத்திரு ‘பொள்ளாச்சி’ ந.மகாலிங்கம் அவர்களுடனான அன்புறவும் சந்திப்புகளும் அனுபவப்பகிர்வும்
➢ தாயகத்தின் இலக்கிய கர்த்தக்களுள் ஒருவரான திரு எஸ் பொன்னுத்துரை (எஸ் பொ) அவர்களுடனான தமிழகச்சந்திப்பும் அனுபவப்பகிர்வும்
• தமிழ் நாடக அரங்கியல் வளர்ச்சிக்கான முனைப்புகளும் முன்னெடுப்புகளும் முயற்சிகளும்…
➢ பிரான்சு ‘உடல்’ அரங்கியல் இதழின் ஆசிரியரும்… உலகத் தமிழ் நாடக விழாவின் பணிப்பாளருமான திரு அரியநாயகம் அவர்களுடனும்.. தமிழகத்தின் நாடகரும் பிரபல திரையுலக நடிகருமான டாக்டர் நாசர்… நாடகரும் நாடகப்பேராசிரியருமான திரு பார்த்திபராஜா ஆகியோருடனும் தமிழவை இணைந்து தொடரவுள்ள தமிழ்நாடகப் பயில்நெறிப் பட்டறைத் திட்டம்
• தமிழ் மொழியின்… மற்றும் தமிழர் தொல்குடியின் வரலாற்று மீட்புப் பற்றிய ஆய்வுகள்.. தேடல்களினை ஊக்குவித்தலிற் தமிழவையின் பங்களிப்புகளும் பணியும்
மேலும் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பாகக் கூறப்புகின்…
1985இலிருந்து 1990வரை…படிப்படியாகப் பல தமிழெழுச்சி விழாக்களும்… கலைவிழரக்களும் பத்திரிகை ஊடகத் தோற்றங்களும் வளர்ச்சிகளும் தமிழ்மொழி மீதான பற்றையும் தாயகத் தமிழ்தக்கள் மீதான அக்கறையையும் அவதானத்தையும் மேலோங்கச் செய்து வந்ததெனலாம்!
எமது தாயக மக்களின் வலியையும் அவர்தம் உரிமைப்போராட்டத்திற்கான நியாயப்பாட்டினையும் பேசுபொருளாகவும் பாடுபொருளாகவும் கொண்டு… பல நாடக… நாட்டிய… நாட்டிய நாடகப்படைப்புகள் கவிதை கட்டுரைகளும் மக்கள் மத்தியிற் தமிழுணர்வையும் தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சாதகமான சூழலையும் தோற்றுவித்தன!
இக்காலகட்டத்தில்…அன்றையகாலங்களில் தமிழர் தாயக மக்களின் தாகத்தையும் தவிப்பையும் தரணியின் செவிகட்குத் தரும் நோக்கோடு
இயங்கிவந்த தமிழர் முன்னேற்றச்சங்கமும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் மற்றும் தமிழ்க்கலவி கலை பண்பாட்டு விழுமியங்களை எமது மழலையருக்குப் புகட்டி நின்ற வல்தம்ஸ்ரோ வல்தம்பொறஸ்ற் தமிழ்ச்சங்கமும் மற்றும் ஒருசில தனிப்பட்ட கலை கவிதை இலக்கியம் சார் ஆளுமைகளும் தமிழ் மொழிக்கல்வி கலைவளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதெனவே உறுதியாகக்
கூறமுடியும்!
1990இற்குப்பின்னர் பிரித்தானியாவைப்பொறுத்தவரை தமிழ் மொழி வளர்ச்சிகானதொரு பொற்காலம் உதயமானதாகவே கூறமுடியும்!
இயல் இசை நாடகம் நாட்டியம் ஊடகம் எனும் அனைத்துத்துறைகளைச்சார்ந்த தாயக ஆளுமைகளும் ஆற்றல்களும் அனுபவங்களும் பிரித்தானிய மண்ணில் அணிவகுக்கும் காலம் உருவாகியதோடு… தாயக தேசங்களிற்கும் பிரித்தானியா வாழ் தமிழர்களுக்குமான தமிழ்ப்பாலமும் பலப்படுத்தப்பட்டு வளப்படுத்தப்பட்டு எமது அடுத்த சந்ததிக்கும் கையளிக்கப்படும் காண்டம் மலரலானது!
தமிழகத்திலிருந்தும் ஈழத்தாயகத்திலிருந்தும்… தமிழ் மொழி கலை கவிதை இலக்கிய பண்பாட்டு வரலாற்று ஆளுமைகளும் ஆற்றல்களும் வித்துவங்களும் பரித்தானியாவைநோக்கிப் படையெடுக்கத் தொடங்கின!
கலை அரங்கேற்றங்களின் பிரதம சிறப்பு விருந்தினர்களாகவும் அரங்க ஆற்றுகையாளர்களாகவும் பயில்நெறிப் பட்;டறை நடத்துநர்களாகவும் பலர் பிரித்தானியாவிற்கு வரத்தொடங்கினர்!
திரைப் பின்னணிப்பாட்கர்களின் வருகையும் இசைக்கச்சேரிகளின் பெருக்கமும் பக்தி இலக்கியச் சொற்பொழிவுகளும் பண்ணிசை வகுப்புகளுமெனத் தேமதுரத்தமிழோசை பரவும் நிலைக்கான சூழல் பரவத் தொடங்கியது!
காலப்போக்கில்…
திரும்பும் திசையெல்லாம் தமிழர் முகங்களும் தமிழர் குரலுமெனும் ஒரு
சூழல் உண்டானது!
ஓன்று கூடல்களும் விழாக்கள் சடங்குகள் அரங்கேற்றங்கள் வைபவங்களும் வாரத்தில் ஏழுநாட்களும் நிகழும் நிலை உருவாகியது!
பிரித்தானியாவில்கல்வியினூடு தமிழ்! கலையின}டு தமிழ்!
இலக்கியத்தினூடு தமிழ்! சமயத்தினூடு தமிழ்! வர்த்தகத்தினூடு தமிழ்! எனத் தமிழ் மொழியின் வளர்ச்சி பிரித்தானியாவின் நகரங்கள் தெருக்களையெல்லாம் தொட்டணைக்கத் தொடங்கியதெனலாம்!
1970களிலும் 1980களின் முதற்பகுதியிலும் சிறுமண்டபங்களிலும் பள்ளிக்கூடங்களி;லும் நிகழ்ந்த ஒன்றுகூடல்களும் விழாக்களும்
அரங்கேற்றங்களும்… மௌ;ள மௌ;ளப் பிரித்தானியாவின் முதன்மை நாடக… கலை… களியாட்ட அரங்குகளை நோக்கிப் பயணிக்கும் நிலையேற்பட்டது!
தாயக மக்களின் இன்னல்துடைக்கும் நிகழ்வுகளும் தாய்மொழிக்காகவும் தாயகவிடுதலைக்காகவும் உயிர்களை ஈகம் செய்தோர் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களின் திரட்சியோடு மாபெரும் மண்டபங்களிலும் திறந்த வெளியரங்குகளிலு;ம் நிகழத் தொடங்கின! பெருவெளிகளில் நிகழ்ந்த விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாக்கள் தாயகப் பாடசாலைகள் கல்லூரிகள் பலகலைக்கழகங்களின் பழைய மாணவர் சங்கங்களாலும் கழகங்களாலும் நிகழ்த்தப்பட்டுத் தாயகமக்களுக்கான உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டன!
தாயகம் நோக்கிய தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் பிரித்தானியத் தமிழ் இளையோரையும் மழலையர் சிறுவர்கள் மாணவர்களையும் தமிழ் மொழி தமிழர் வரலாறு நோக்கிய விழப்புணர்வுச் செல்நெறியை நோக்கிப் பயணிக்கச் செய்தன!
இந்நிலையில்…
நேறஆயடனநn டுவைவடந ர்யடடஇ ஐனெயைn லுஆஊயுஇ டீhயசயவாய ஏனைலய டீhயஎயnஇ ஊயஅனநn ர்யடடஇ யுஉவழn ர்யடடஇ றுiஅடிடநனழn ர்யடட றுயடவாயஅளவழற யுளளநஅடிடல ர்யடடஇ டுடழலனள Pயசம வுhநயவசந எனும் மண்டபங்களில் யாம் ஆரம்பகாலங்களில் நிகழ்வுகளை நடத்திய காலம் மாறி… … றுiளெவழn ஊhரசஉhடை ர்யடடஇ டீநஉம வுhநயவசந (ர்யலள)இ புசநநகெழசன ர்யடடஇ யுளாஉசழகவ வுhநயவசந யனெ குயசைகநைடன ர்யடட (ஊசழலனழn)இ டுழனெழn நுஒஉநட நுஒhiடிவைழைn ஊநவெசநஇ ஞரநநளெ வுhநயவசநஇ ர்யசசழற டுநளைரசந ஊநவெசநஇ டுநயவாநசாநயன வுhநயவசந சுழலயட யுடடிநசவ ர்யடடஇ ளுழரவாடியமெ யேவழையெட வுhநயவசந எனப் பெருமண்டபங்கள்… ஆங்கிலக் கலை நாடக அரங்குகளுக்கு
இடமாற்றம் பெற்றுப் பிரமாண்டடமன நிகழ்வுகளுக்கு எமது மொழி கலை பண்பாட்டு இயக்கத்தை எடுத்துச்சென்றது!
இசை நாடக அரங்குகளில் அதியுயர் தொழில் நுட்ப சாதனங்கள் கருவிகள் நிபுணத்துவங்களோடு கூடிய நிகழ்வுகளாக எமது
இளையசந்ததியினரின் பங்களிப்புகளோடு பல நிகழ்வுகளை யாம் கண்டும் கேட்டும் நுகரக்கூடிய வாய்ப்பு மெய்ப்படும் நிலையேற்பட்டது!
வானொலி மற்றும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத் தலங்களின்
இயக்கமும் ஈடுபாடும் இவ்வளர்ச்சிக்கும் விருத்திக்கும் உறுதுணையாக நின்று வருகின்றன!
இன்றைய தமிழர் சமூகத்தைப்பொறுத்தவரையில்… நாடி நரம்பெல்லாம் தமிழ்!
கூடிக் குலவவும் தமிழ்! பாடிக் களிக்கத் தமிழ்! பாலர் குதிக்கத் தமிழ்!
பொங்கு தமிழ்! பொங்கற்; தமிழ்! போற்றத் தமிழ்! புகழத் தமிழ்! காற்றிற் தமிழ்! காரிற் தமிழ்!
ஆற்றத் தமிழ்! ஆடத் தமிழ்!
மூச்சிற் தமிழ்! முழங்கத் தமிழ்! பேச்சிற் தமிழ்! பழகத் தமிழ்! கவிதைத் தமிழ்! கணனித் தமிழ்! செவியிற் பொழி கானத் தமிழ்!
திரும்பும் திசையெல்லாம் தமிழ்க் கல்விக் கூடங்கள்! தெருக்கள் தோறும் கலைசொல் மாடங்கள்! நெருக்கம் தாங்காத அரங்கேற்ற வைபவங்கள்! அரங்க ஆற்றுகைகள்!
அவைக் காற்று கழகங்கள்! பண்ணிசையும் இன்னிசையும் பாட்டிசையும் வாத்தியமும் எண்ணிக்கை கடந்த எத்தனையோ தமிழ் விழாக்கள்! வள்ளுவனார் வாழ்த்துகிறார்! பாரதியார் வாழுகிறார்! தொல்காப்பியனும்
தோளிருந்து ஓதுகிறான்! தமிழகத்து அறிஞர்களும் தாயீழத் தறிஞர்களும் நமதரங்கு தோறும் நாவசைத்து மீளுகிறார்! திரைமுகங்கள் கூடத் வானேறி வந்திங்கு தரையிறங்கி யெமது தமிழோடு இணைகிறது!
ஊடகத்தின் இயக்கமோ உச்சத்தில் நிற்கிறது! நடகமும் நாட்டியமும் நலம் பெற்று வளர்கிறது! மானிடத்தின் இயக்கங்கள்
தான தர்மம் இயற்றுகின்றார்! ஆன்மிகமும் ஆலயமும்
அந்தணரின் கிரியைகளும் மேன்மை மிகு சைவநெறி தழைத்தோங்கி வளர்கிறது!
தமிழ்ப் பள்ளிகள்! கலைப்பள்ளிகள்! பத்திரிகைகள் வானொலிகள்1
இலக்கிய இயக்கம்! கவிதை இயக்கம்! நாடக இயக்கம்! நாட்டிய
இயக்கம்! நாட்டிய நாடக இயக்கம்! தொலைக்காட்சிகள்! குறும் படங்கள்! சமூக வலைதலங்களில் கணத்திற்குக்கணம் வெளியாகும் படைப்பாக்கங்கள்!
இவ்விடத்தில்…ஒக்ஸ்ஃபோட்டில்…உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின்..
திரமந்திரப்பட்டயம் பெற்ற 25பேர்கள் இன்றுள்ளனர் என்பது ஓர்
குறிப்பிடத்தக்க விடயமாகும்! இதேபோல.. இன்று பல
சைவசித்தந்தப்புலவர்களையும் பிரித்தானியா உருவாக்கிவருவது சைவத்தமிழின் வளர்ச்சியை வலுப்படுத்திவருகிறது எனலாம்!
இதன்பின்னணியில் நின்று சைவசித்தந்தத் தொண்டாற்றும் தமிழறிஞர் பற்றிமாகரன் அவர்கள் போற்றுதற்குரியவராவார்!
குத்துமதிப்பாக 40 இற்கு மேற்பட்ட தமிழ்க் கல்விக்கான பள்ளிகளும் 30இற்கும் மேற்பட்ட தமிழ்க்கலைகளுக்கான கலைப்பள்ளிக்கூடங்களும்
இயங்கிவருவதாக அறிகிறேன்!

