இந்நாடகத்தின் மூலமே… தாயகத்தின் பாசையூரைச் சேர்ந்த
இசைநாடக மரபிலும் அச்சூழலிலும் பிறந்து வளர்ந்த குயின்ரஸ் ஜெயம்
சூரி கெனிசியஸ் போன்ற ஒருசில இளைஞர்களையும் அவர்தம் ஆற்றல்கள் ஆளுமைகளையும் முதன்முதலாகச் சந்தித்தேன்!
இதே விழாவிற்றான்..’நவீன தீர்ப்புகள்’ எனும் மழலையர் சிறுவர்கள் பங்குபற்றிய எனது படைப்பில் உருவான நாட்டிய நாடகத்தை சங்கீதவித்துவான் பரதநாட்டிய வித்தகி பதிமினி குணசீலன் அவர்கள் நெறிப்படுத்தி அரங்கேற்றினார்!; இதை;தொடர்ந்து பதிமிஜனி குணசீலன் அவர்கள் எனது பல நாட்டிய நாடகங்களை இந்நாட்டில் அரங்கேற்றி வருகின்றார்!
இக் காலப்பகுதியிலேயே சமூக ஆர்வலரும் தொண்டரும் தாயகப்பற்றாளருமான அமரர் திரு நவநாயகம்.. மற்றும் நாடகக் கலைஞரும் தாயகப் பற்றாளருமான திரு வரதலிங்கம் மற்றும் ‘அலையோசை’ இதழின் ஆசிரியரும் தமிழாசிரியரும் தாயகப்பற்றாளரும் கவிஞருமான பாலரவியையும் அலைஓசையின் இணையாசிரியரும் தாயகப்பற்றாளருமான திரு ஜெயக்குமார் மற்றும் தாயக உணர்வாளரும் செயற்பாட்டாளருமான ஐ ரீ சம்பந்தன் தாயகப்பற்றாளரும் செயற்பாட்டாளருமான திரு குகச்சந்திரன் முதலான பலரைச் சந்தித்து அவர்களோடு இணைந்து மழலையருக்கான பல கூத்து இசை கவிதை நாடக அரங்க நாடக நாட்டிய நாடகப் படைப்புகளைப் படைத்தளிக்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது!
இலண்டனில் முதன்முதலாக… ‘நவீன யமன்தர்பார்’ எனும் கூத்திசை நாடகத்தை வல்தம்ஸ்ரோவின் தமிழ் மழலைச் சிறுவர்களிற்காக எழுதி
இயக்கி அரங்கேற்றிய அனுபவம் மிகவும் அற்புதமானது!
எனது நாற்பத்தைந்து ஆண்டுகாலப் பிரித்தானியப் புலம்பெயர் வாழ்வில் யான் சந்தித்த தமிழாளுமைகள் பலநூறு!
எனது தேடலும் தாகமும் வேகமும் நிறைந்த தொடர்ச்சியன அனுபவமே மேலும் மேலும் என்னை எமது மக்களுக்கான கலை கவிதை இலகியப் படைப்பாக்க வலயத்தினுள் இயங்கவைத்ததோடு பல கலைப் பயிற்சிகளையும் பட்டறைகளையும் நிகழ்த்தும் ஆற்றுகை அனுபவத்தோடு பிரித்தானியா வாழ் தமிழரோடான ஒரு அறிமுகத்தையும்
நெருக்கமான உறவையும் நோக்கிய தமிழ்ச்செல்நெறிக்கு உட்படுத்தியது!
1990களிற்றான் பிரித்தானியாவிற் தமிழ்விழாக்களில் கருத்தரங்கங்கள்.. கவியரங்கங்கள் அதிக அளவில் அரங்கேறின என எம்மால் உறுதியாகக் கூறமுடியும்!
1999இல் எனது தம்பி தங்கையர் சிலருடன் தாபித்து அதன்காப்பாளனாகவும் பணிப்பாளனாகவும் இன்றுவரை பணியாற்றிவருவதை இங்குள்ள பலரும் அறிவர்! இவ்வமைப்பி;ற்கான அன்பினையும் ஆதரவினையும்… ஒத்துழைப்பையும் உறுதுணையையும்… திரு திருமதி பற்றிமாகரன்..திரு பாலரவி… திரு ஜெயகரன்… திரு அருண் மனோகரன் திரு பாபு பாஸ்கரன்.. திரு ஜெயம் அழகையா… திரு தனம் அழகையா திரு விக்டர் சிவகுணம் திரு பரிமேலழகர் திரு வரதலிங்கம் டாக்டர் சிவசின்மயானந்தன் திரு திருமதி ஜோக்கிம் இருதயானந்தன் திரு சண்முகநாதன் டாக்டர் மற்றும் திருமதி அனந்தசயனன் திரு உதயணன்… திரு மணிவண்ணன்…திரு கலாரஞ்சிதன் ஆகியோருடன் திருமதி க சிவநாதனும் புலவர் குடும்பத்தினரும் மற்றும் ஒருசில புலவரின் நணபர்களும் உறவுகளும் வழங்கிவந்துள்ளனர்!
தமிழவையின் படைப்புகள்.. பதிப்பாக்கங்கங்கள்… வெளியீடுகள்… நூலரங்கேற்றங்கள் விழாக்கள் எனத் தமிழவையின் தமிழ் மொழி கலை பண்பாட்டு இலக்கிய இயக்கமும் செயற்பாடுகளும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கினறன!
இன்று வரை யான் தமிழ் மொழி தமிழர் கலை பண்பாட்டு வரலாற்று வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வு நோக்கி எனது சார்பிலும் எமது தமிழவையின் சார்பிலும் வழங்கிய படைப்புகளிலும் அரங்கநிகழ்வுகளிலும் பங்குபற்றியவர்களைப் பட்டியலிடுமளவிறகுத் தரவுகள் என்னிடம் தற்போது இல்லை!
இன்றுவரை அரங்கிலும் அலையிலும் ஒலியிலும் ஓசையிலிமு; நாவிலும் பாவிலும் பதிவாகிய எனது படைப்புகளுள்…
மழலையர்.. சிறுவர்களுக்கான படைப்புகளான…
‘மலையடிவாரத்துப்புயல்’ ‘சுடடது அன்று! புதைத்தது இன்று! ;(நாட்டிய நாடகங்கள்) ‘நவீன யமன்தர்பார்’ (கூத்திசை நாடகம்) ‘பேரப்பிள்ளைகள் வந்தாச்சு’ ‘சிக்கனம்’ ‘உறக்கமும் விழிப்பும்’ ‘எங்கள் தமிழ்’ கலியுகக் கலம்பகம்’ ( அரங்கநாடகங்கள்)…
‘துர்க்காபுத்திரர்கள்’ ‘அக்காவுக்குக் கலயாணம்’ ‘சின்னத்திரைச் சில்லெடுப்பு’ ‘கலையோ கலை’ ‘பொங்கலோ பொங்கல்’ என்ற வரிசையில் இளையோர் சிறுவர்களுக்கான வில்லுப்பாடல்கள்…
மற்றும்
இளையோர் முதியவர்களுக்கான தாயக வலிசொல்லும் படைப்புகளான…
‘இறைதரிசனம்’ ‘விடுதலை விமானங்கள்’ ‘ஊர்க்காத்து’ ‘போலித்துவக்குகள்’ ‘சத்தியாஞ்சலி’ ‘என்ன நடக்கிறது? (கவிதா நிகழ்வு) ‘பாலைவனப்படகு’ ( கவிதா நிகழ்வு) ‘இதுதான எங்கள் நாடு! ( இசை-நவிதா நிகழ்வு) ‘ஏற்றிச் செல்லும் ஓடமே! ( இசை நாடகம்) ‘யாருக்குப் புனர் வாழ்வு? (கவிதா நிகழ்வு) ‘பூவையர் புரட்சி’ (கவிதா நிகழ்வு) எனும் அரங்கநாடகங்கள்..
தாயக மக்களின் வலியையும் வலிமையையும் தேசத்தின் தாகத்தையும் தவிப்பையும் தகிப்பையும் வெளிப்படுத்திய நாட்டிய நாடகங்களான…
‘பூந்தென்றல் புயலானது’ ‘களங்கண்ட காதலி’ ‘தர்மகீதங்கள்’ ‘கொடியேற்றம்’ ஆகியவையும்…
காவிய… இலக்கிய…இதிகாசப் படைப்புகளான…
‘குடிமறந்த குறள்’ (ஒரு குறளை மையப்படுத்தி எழுதப்பெற்ற நாட்டிய நாடகம்) ‘கவிமகனும் கோமகளும்’ (அம்பிகாபதி அமரபதி) ‘குருமகளும் கோமகனும்’ ( சகுந்தலை காவியம்) ‘சிலம்புத்தீ’ (சிலப்பதிகாரக் காண்டம்) ‘சத்தியாரம்’ ( அரிச்சந்திர காவியம்) ‘கண்ணன் வந்தான்’ ( குசேல காவியம்) ‘பிரபஞ்சலீலை’(அறிவியல்-
இலக்கிய நாட்டிய நாடகம்) ‘தில்லைத்தரிசனம்’ (நந்தன் சரிதம்- நாட்டிய நாடகம்) ‘இறைமகன்’ ( இயேசு குறுங்காவியம்) ‘இரவி
மைந்தன்’ (கர்ணன் கதை) ‘பாதவந்தனம்’ (ராம பாதுகாபிசேகம)
‘கலைமகள் கவிப்பொருள்’ (கம்பன் கதை)
புலம்பெயர்தமிழர்களின் வாழ்வியல் நிலையைப் பாடுபொருளாகக் கொண்ட அரங்கநாடகங்களான…
‘சந்ததிகள்’ ‘என்னை ஊருக்குக்கொண்டு போ’ ‘விழிப்பு’ ‘யாதும்
ஊரே!’ ‘தமிழ் மணம் டொற்கொம்’ ‘திரிசங்கு சொர்க்கம்’ ‘அம்மா’ ‘பேரக்குஞ்சுகள்’ ‘ உயில்’ ஆகியவை…
சன்றைஸ் வானொலியில் ஒரு தொடராக ஒலிபரப்பாகிய… ‘சந்ததிகள்’
மற்றும் கானக்குயில்
‘வீட்டுக்கு வீடு’ எனும் வானொலியில் ஒரு தொடராக
ஒலிச்சித்திர நாடகங்கள்… ஒலிபரப்பாகிய
அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து வரை சென்று… அரங்கேறியுள்ள எனது
ஒருசில அரங்க நாடகங்கள்…
அநாதைகள் அறக்கட்டளைக்காக எழுதப்பெற்ற ‘பூமித்தாயின்
குழ்நதைகளே!’ எனும் பாடல்…
இங்குள்ள ஒருசில பாடசாலைகளுக்காக என்னால் எழுதப்பெற்று
இன்றுவரை இசைக்கப்பெற்றுவரும் பள்ளிக்4ட கீதங்கள்..
பக்தியோசையாக ஒலிக்கும்… ‘சங்கரியே பதில் சொல்லு’’ சாயி கீர்த்தனா’ ‘ஓங்கார ஒலியில்’ என்பது போன்ற பல ஒலிப்பேழைகளிற் பதிவாகிய பாடல்கள்…
தாயக ஓசையாக ஒலிக்கும்.. ‘கார் மழை மேகங்கள் மொழியவில்லை! அங்கே… கண்கள் பொழிகின்றன!’ ‘ஊர்க்காத்து வீசுது’ போனற் பாடல்கள்…
உலக ஒருமைப்பாட்டினையும் அமைதியையும் வேண்டிநிறிகும்… ‘போரிலா உலகம் வேண்டும்!’ எனும் பாடல்..
போரின் ரணங்களால்.. வடுக்களாற் தாய் தந்தையரை இழந்து வாடும்
சேய்களின் உளநிலையை ஓங்கிஒலிக்கும்… ‘பூமித்தாயின்
குழ்நதைகளே’ எனும் பாடல்….
1983 ஜுலைப் பேரவலத்தினையொட்டிய எனது தாயகப் பயணத்தின் எதிரொலியாக யான் தமிழகத்திற் பதிப்பிட்டு வெளியிட்ட… ‘எமது பயணம்’… ;குமுறல்’ எனும் சிறு நூல்கள்…

