எனது சொந்த பொது வாழ்விலும் தேச தேசிய தெய்வ ஈடுபாடுகள் சார்ந்த அனுபவத்திலும் அறிமுகங்களிலும் ஆற்றுகைகள் அளிக்கைகளிலும் சந்தித்த தாயக ஆளுமைகள் ஆற்றல்கள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு:
மறைந்தாலும் மறக்கமுடியாது எமது நெஞ்சில் நிறைந்து வாழும் பிரித்தானியாவின் தமிழ் மொழி கலை கவிதை இலக்கிய பண்பாட்டு வளர்சிசியிலும் தமிழர் எழுச்சியிலும் தத்தம்வழிகளிலும் வாழ்வுப் பயணத்திலும் தொணடாற்றிய எமது சமகாலப் பெருமக்களான…வித்துவான் தெய்வத்திரு க.ந. வேலன்(வேலனையா) அவர்கள்…தெய்வத்திரு புலவர் அமுது ஐயா அவர்கள்… தமது அறிவாழமிக்க அரங்கஆற்றுகைள் மூலம் தமிழ்மொழிவளர்ச்சிக்கு அணிசேர்த்த பாரதவித்தியபவனின் தமிழ்ப்பேரறிஞர் தெய்வத்திரு மாத்தூர் கிருஸ்ணமூர்த்தி ஐயா அவர்கள் தமிழ்பால் கொண்ட ஈர்பாலும்
இணையிலாக் காதலாலும் தமிழ்மொழியைக ;கற்றுத் தேர்ந்து பாண்டித்தியமடைந்து தமிழ்த்துறைப்பேராசிரியராக விளங்கிய அமரர் மார் ஐயா அவர்கள்…. இசைத்துறையிலும் ஒலியமைப்புத்துறையிலும் தனது அளப்பரும் பணிகளின்மூலம்பங்காற்றிய தமிழ்த் தேச… தேசியப்பற்றாளர் அமரர் யாழ் சீலன்… தமது நேரிய சமுதாயச் சீர்திருத்தக்கொள்கைகள் மூலமும் உளந்திறந்த கருத்தியல் வெளிப்பாடுகள் மூலமும் தமிழுக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் தொண்டாற்றிய தெய்வத்திரு ‘தமிழர்தகவல்’ சிவானந்தஜோதி அவர்கள்… தமது எழுத்தாலும் வானொலிச் சேவை அனுபவத்தாலும் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய ‘இலண்டன் தமிழோசை’ சோ சிவபாத சுந்தரனார் அவர்கள்… சோ சிவபாதசுந்தரனாரின் இறுதிக்காலத்
தோழராகவும் நாடக அரங்காளராகவும் தமிழ்த்தொண்டாற்றிய அமரர் நாடகர் யோகராஜா அவர்கள்…
தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்பிக்கும் நிலைக்கு அப்பால்…இயற்றமிழ் சைவத்தமிழ் கல்வித்தமிழ் மூலம் பணியாற்றிவருகின்ற தமிழறிஞர் எஸ் ஜே பற்றிமாகரன் திருமதி றீற்றா பற்றிமாகரன்… ஊடகராகவும் நாடக அரங்கியல் ஆசானாகவும் மிளிர்ந்து தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர் மேன்மைக்கும் இன்றுவரை உழைத்துவரும் திரு ஏ சி எஸ் தாசீசியஸ் அவர்கள்…’வுயஅடை யேவழைn’ எனும் மின்னிதழ் மூலமும் தமது தமிழர் சார் வரலாற்று… சட்ட சமூக நுண்ணறிவு அனுபவம் மூலமும் இயங்கிவருகின்ற திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள்…தமது பொறியில் கவிதை அறிவியல் ஆளுமைகள் மூலம் தமிழுக்குத் தொண்டாற்றிவருகினற் முன்னாட்பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள்…சன்றைஸ் வானொலியின் தாபகராகவும்… பணிப்பாளராகவும் பணியாற்றியும்… தமிழ்க் கலிவியூடு தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றியும்…
இன்றுவரை’இரத்தினம் அறக்கட்டளை’யின் மூலம் கலை கலவி
இலக்கியப்பணிகளை ஆற்றியும் வருகின்ற கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அவர்கள்…சன்றைஸ் மற்றும் கானக்குயில் வானொலிகள் மூலமும்… ‘கானக்குயில் பாட்டுப் போட்டிகளின்மூலமும் வானொலி நாடகங்கள் மூலமும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் கலை வளர்ச்சிக்கும் பணியாற்றி வருகின்ற திருமதி யோகா தில்லைநாதன் அவர்கள்…‘அலையோசை’ இதழின் ஆசிரியனாக ஆரம்பித்து… தமிழாசானாகவும்… தமிழ் அச்சகப் பதிப்பாளனாகவும்…’தமிழ் நிலா’ எனும் தொலைக்காட்சியின் தாகனாகவும் ஒரு தேசப்பற்றாளனாகவும்
இயங்கிரும் கவிஞர் பாலரவி… மற்றும் ‘வேலன் இலக்கிய வட்டத்தின்’
மூலமும் தமது கவிதை கட்டுரை இலக்கிய அரங்க ஆற்றுகைகள்
மூலமும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிவரும் தமிழறிஞர் சட்டத்தரணி திரு சிறீக்கந்தராசா அவர்கள்..… தமிழ்பத்திரிகையுலகிற் தனது தொடர்ந் ஈடுபாட்டின் மூலம்தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தம் பங்கினை ஆற்றிவருகின்ற திரு ராஜகோபால் அவர்கள்..’சன்றைஸ்’ வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றியவரும்… தொடர்ச்சியான அர்ப்பணிப்போடும் ஆளுமையோடும் வானொலியிலும் அரங்கிலும் தமிழ் மொழிக்குப் பணியாற்றிவருகின்ற திரு நடா மோகன் அவர்கள்… கணனித் தமிழ்மூலம் தமிழ்மொழிக்கு தன் பணிகளையாற்றும் திரு
சிவாப்பிள்ளை அவர்கள் தமிழ் மொழியை நாடக அரங்கியல் மூலம்
இளையோர் மத்தியிற் கொண்டு செல்லும் பெருமுயற்சிகளில் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற ‘தமிழவைக்காற்றுக் கழகத்தின்’ நாடகர் இயக்குநர் திரு பாலேந்திரா அவரோடு இணைந்து கலைப்பணியாற்றி வருகின்ற திருமதி ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோர்… நாடகத்மிழ் மூலம் எமது நாளைய சந்ததிக்குத் தமிழ் மொழியின் ஓசையைக் கையளிக்கத் தமது மெய்வெளி கூத்து நாடக அரங்கின் மூலம் பணியாற்றும் திரு சாம் பிரிதீபன் திருமதி ரஜிதா பிரதீபன்…. மற்றும் யான் ஆசிரியராக இருந்து நடத்திய ‘நம் நாடு’ பத்திரிகையாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் உறுதுணையாக நின்று செயலாற்றியவரும். இன்று குறும்படப் போட்டிகளின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றிவருபவருமான ‘விம்பம்’ கிருஸ்ணகுமார் அவர்கள்…. எமது இலண்டன் தமிழவையின் தமிழ்ப்பணிகளிலும் கலை கவிதை இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளிலும் அன்றிலிருந்து
இன்றுவரை பங்காற்றிவருகின்ற தம்பி தங்கைகள் மற்றும் ‘அ ஆ இ’ எனும் தமிழ் மொழிக்கான ஒரு பாடநூலை யாத்தவரும் தனிநாயகம் தமிழ்ப்பள்ளியைத் தாபித்து இயக்கிவருபவருமான கவிஞர் துரைசிவபாலன் அவர்கள்… தாயகத்தின் பெருங்கவிஞர் சைவத்தமிழ்வித்தகர் வித்துவான் வேந்தனார் அவர்களின் மகனும் தமிழ்மொழிக்கும் தமிழ்கல்வி கலைகளுக்கும் பெரும்பணியாற்றி வருகின்ற திரு இளஞசேய்…அவர்கள் தமிழறிஞர் திரு சிவச்சந்திரன்
அவர்கள்… ‘ஓ வண்டிக்காரா’ புகழ் சத்தியமூர்த்தி அவர்கள்…
தமிழ்கல்வியூடு தமிழ்வளர்ச்சிக்கும் எமது தமிழவையின்
வளர்ச்சிக்கும்;… எனது தமிழ் கலை கவிதைப் பணிக்கும் அன்பும் ஆதரவும் வழங்கி வருகின்ற திரு மனோகரன் அவர்கள்… சிறுகதை.. எழுத்தாக்கம்… ஊடகம்…பாடல்..இசை எனும் துறைகள்ற் தனது ஆளுமைகள் மூலம் தமிழ் மொழி கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றி வருகின்ற கோவிலூர் செல்வராஜன்..தனது பேச்சாற்றல் கவியாற்றல் எழுத்தாற்றல் வழி சைவத்தமிழுக்கும் தமிழ்மொழி கல்வி
இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும்பண்யாற்றி வருகின்ற திரு ராஜமனோகரன் அவர்கள்… நாடகக்கலை மூலம் தமிழுக்கும் தொண்டாற்றி வரும் நாடகர் ‘ளுவ யுடடியளெ’ மனோகரன் அவர்கள்…
இலக்கியப் படைப்பாக்கங்களின் மூலம் தமிழ்மொழியின் படைப்புருவாக்கத்திற்குத் தமது பங்களிப்பை நல்கும் எழுத்தாளர்களின்
இலக்கியப் பதிவுகளைச் செய்து வரும் ‘காற்றுவெளி’ முல்லை
அமுதன அவர்கள்… எமது படைப்பாளர்கள் எழுத்தாளர்கள்
இலக்கியகர்த்தக்களின் ஆக்கங்கள் அளிக்கைகளைஆவணப்படுத்தும்’ பணிக்ளில் அயராது உழைத்துவரும் ‘நூலகம்’ பத்மநாப ஐயர் அவர்கள்…பாரதவித்தியபவனில் தமிழசையைக்கற்பித்தும் எங்கள் தாயத்தின் பேராளுமையான… ‘யாழ்ப்பாணம் வீரமணி ஐயா’வின் படைப்புகளுக்கு உயிர்கொடுத்துப் பேணி வரும் திருமதி சிவசக்தி சிவநேசன் அவர்கள்…
என இவர்களது தமிழ்மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகளையும்…. பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழர் சங்கங்கள் கழகங்கள்..தமிழ்ப்பள்ளிகள்;;;… தமிழ்க் கல்வி.. கலைக்கூடங்கள…; ஊடகங்கள்… ஏடுகள்… இதழ்கள்…; புதினங்கள்…சஞ்சிகைகள்
இவற்றின் நிறுவனர்கள் நிர்வாகிகள் தமிழுக்கும் தமிழர் தேச தேசிய
நலன்களுக்கும் பணியாற்றி வருகின்ற தேசத் தொண்டர்கள்..
அனைவரையும் ஈண்டு நினைவு கூர்ந்துகொள்கிறேன்!
அவ்வப்போது என்னாலியன்றவரை… இவ்வுரை குறித்து எனக்குத் தரப்பட்ட மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் என்னாற் திரட்டப்பட்ட தகவல்களை உங்களோடு இவ்வுரையின் இறுதியிற் பகிரவுள்ளேன்!
இன்p யானறிந்த வரையில்… 1985இலிருந்து தமிழ்மொழி வளர்ச்சியின் ஓர் ஒழுக்கினைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்!
1983இன் கலவரத்தையொட்டி நிகழ்ந்த ஆர்பாட்ட ஊhவலங்களையும் பேரணிகளையும் கண்டனக் கூட்டங்களையும் தொடர்ந்து 1985இல் தமிழர் முன்னேற்றச் சந்தினரால் முiபௌஉசழளள –டீசவைiளா டுiடிசயசல இற்கு அண்மையிலுள்ள ஊயஅனநn ர்யடட இல் தமிழர் முன்னேற்றச் சந்தினரால் அரங்கேற்றப்பட்ட விழாவே இலண்டனில் நிகழ்ந்த முதலாவது எழுச்சிவிழா என நம்புகின்றேன்!
மண்டபம் நிரம்பிய இவ்விழாவில்… ‘நிஜத்தின் நிழல்’ எனும் நாடகத்தை எழுதி இயக்கிப் படைத்தளித்தேன்!
இந்நாடகம்… தாயகத்தில் அன்று நிகழ்ந்து கொணடிருந்த தமிழின அடக்குமுறைகளையும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுவந்த அராஜக இராணுவ காவற்றுறை நடவடிக்கைகளையும் அதே வேளை தமிழர் சமுதாயத்தில் அன்று
புரையோடிக்கிடந்த சாதி சமய இட ஏற்றத்தாழ்வுகளையும் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்திநுந்தது!

