இனி எனது உரைக்கு வருகின்றேன்! 70களில்…யாம் இலண்டன் வந்த காலத்தில்..
இலண்டனிற் தெருக்கள் வீதிகளிற் தமிழர்களைச்
சந்திப்பதென்பது…அத்தி பூத்தாற்போல இருந்தது!
எங்காவது அவ்வப்போது ஓரிரு பலசரக்குக்கடைகளில்… யாராவது ஓரிரு தமிழரைக் கண்டுவிட்டுhல் ஆனந்தம் அத்துமீறிக் கொப்பளிக்கும்!
தமிழிற் பேசுவதில்… உரையாடுவதில்.. ஒரு பேரின்பம் பிறக்கும்!
எனினும் எமது காலத்திற்கு முன்வந்து குடியேறிய தமிழர்களைப்பொறுத்த வரையில்.. எவ்வாறு தமது கல்வி தொழில் நிலை வாழ்வைத் தக்கவைலத்துக்கொள்வது என்ற ஒரு பார்வையே அவர்களிடமிருந்ததெனற் அவதானமே எமக்குத் தென்பட்டதெனவே நான் நம்புகின்றேன்!
ஆங்கில மொழியே அவர்தம் வாழ்வாதார மொழியாகவும் வாழ்வியல் விருத்திக்கான திறனியக்க சக்தியாகவும் இருந்த நிலையினை எம்;மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது!
அக்காலத்தில்…ரேசளiபெ ளுவரனநைளஇ வுநஒவடைநஇ நுபெiநெநசiபெ யனெ ழவாநச ர்iபாநச ளுவரனநைள எனும் நோக்கங்களிற்காக ஐக்கியராச்சியத்திலுள்ள உயர்கல்வி பல்கலைக்கழக… மருத்துவ நிறுவனங்களிற்கு வந்த மாணவர்கள்… நுஒஉயாயபந ஆழநெல அதாவது பணமாற்றீட்டு வழிமூலம் ஈழத்தில் தாயகங்களில் வாழும் தமது பெற்றோரின் ஆதரவினைப் பெற்றே தமது வாழ்க்கையை நடத்திவந்துள்ளனர்!
ஆகையால்…
ஆங்கிலப் புலமையே அவர்களது கல்வி தொழில் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் மூலகாரணிகளாகவும் இருந்திருக்குமோ எனவும் எண்ணத் தூண்டியது!
அத்தோடு தோல்நிறம் சார் துவேசம் தலைதூக்கிநின்ற காலமாகவும்
இக்காலத்தை நாம் காணமுடியும்!
பொது இடங்களிற்.. போக்குவரத்துப் பயணங்களில்.. தோல்வெறியின் தோற்ற வெளிப்பாடுகளை நாம் ஆங்காங்கே நாம் சந்தித்துத்தான் வந்திருக்கிறோமென்பதை யாரும் மறுக்கமாட்டார்களென நம்புகின்றேன்!
தமிழ் மொழியைச் சரளமாகப் பயன்படுத்தும் வாழ்வியல் வழமைகளும் பெரிய அளவில் எமது கண்களுக்குப் புலப்படவில்லை!
அக்காலங்களில்…மாணவர்களாகிய யாம் கல்வி கற்றுக்கொண்டிருந்த கல்வி வளாகங்களுக்குள்ளேயே… எமது தமிழ் மொழி கலை அரசியல் சார்ந்த உரையாடல்களும் ஒன்று கூடல்களும் உணர்வுப்பரிமறல்களும்
இடப்பெற்றுவந்தன எனலாம்! முக்கயிமாக எமது தாயகம் பற்றிய எமது வலிகளும் வேதனைகளும் எமது தாய்மொழி மீதான பற்றும் எமது ஊhமியக் கிராமியப் பள்ளிக்காலப் பாடசாலைக் கால அனுபவங்களுமே
எமது உரையாடல்கள்
விருந்தாடல்கள்…ஒன்றுகூடல்கள்…சந்திப்புகளின் மையக்கருக்களாக
இருந்தன!
பொதுநிகழ்வுகள் கூட எப்போதாவது மிகக் குறைந்த கூட்டத்துடனேயே நடக்கும்!
இலண்டனைப் பொறுத்தவரை…ஐனெயைn லுஆஊயு யிலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்திலும் விம்பிள்டன் பகுதியிலுள்ள டுவைவடந ர்யடட எனும் சிறுமண்டபத்திலும் தான் அநேகமான ஒன்றுகூடல்கள் நடப்பதுண்டு!
காரணம்… அக்காலச் சூழலில்… விம்பிள்டன் ரூற்றிங் எனும்
பகுதிகளிற்றான் அநேகமன தமிழர்கள் குடும்பமாக…
வசித்துவந்தார்கள்! இதற்கு அப்பால் நுயடiபெஇ நுயளவாயஅ ஆகிய பகுதிகளிலும் தமிழ்மக்கள் குடும்பங்களாக வசித்துவந்தார்கள்! எனது கணிப்பின்படி… அண்ணளவாக ஒரு 500 அல்லது 600 குடும்பங்களே யாமறியப் பிரித்தனியாவில் வாழ்ந்துவந்திருக்கலாமென எண்ணத்தோன்றுகிறது!
என்னை இலண்டனிற்கு மேற்படிப்பிற்காக அழைத்த எனது அண்ணன் திரு விவேகானந்தன் அவர்களும் அவர்தம் நண்பர் விம்பிள்டன் ஆலயத்தின் தாபகரும் தர்மகர்த்தாகவுமிருந்த அமரர் இரத்தினசிங்கம் ஆகியோரும் கூட றுiஅடிடநனழnஃ நேற ஆயடனநn ஆகிய பகுதிகளில் வாழ்நத காரணத்தினால்… நானும் இங்குதான் எனது இலண்டன் வாழ்க்கையை ஆரம்பித்தேன்!
அப்போதெல்லாம்…தமிழ்த்திரைப்படங்களே… இலண்டன் தமிழர்களை
இணைக்கும் மையக்களமாக இருந்ததெனலாம்! எனது ஞாபகப்படி… மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ… டுழனெழn முநளெiபெவழn இற்கு அண்மையிலுள்ள ஊழஅஅழறெநயடவா ஐளெவவைரந டீரடைனiபெ இற்தான்… திரைப்படங்கள் திரையிடப்படுவதைப் பார்க்க யாம் சென்றோமென நினைக்கிறேன்!
தமிழுணவுப் பொருட்கள் வாங்குவது அவ்வளவு சுலபமானதாக அப்போது இருப்பதில்லை!
எனினும் இவ்வாழ்வுச் சூழலிலும்… தமிழோடும் தமிழர்தம் தாயகப் பிரச்சனைகளோடும் தம்மை ஈடுபடுத்தி இயங்கிய ஒருசிலர் ஆங்காங்கே தென்படத் தொடங்கினர்!
யுசஉhறயல ர்iபாபயவந உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தை நிறுவிய அமரர் சபாபதிப்பிள்ளை ஐயா அவர்கள்…இலண்டன் முரசு சதானந்தன் அவர்களின் தந்தையார், 1966இலிருந்தே பஜனைகளையும பிரார்த்தனைகள் பூசைகளையும் நடத்தியும் திருமணங்கள்
ஈமக்கிரியைகள் எனும் சடங்குகளை நிகழ்த்தியும். சைவமும் தமிழும்
இணைந்த ஒரு வாழ்வியற் போக்குக்கு வித்திட்டதாக யான் அறிகிறேன்!
விம்பிள்டன் கணபதி கோவிலின் தாபகர் அமரர் இரத்தினசிங்கம், தமிழ்ப்பாடசாலை மற்றும் வுயஅடை றுசவைநசள புரடைன அதாவது தமிழ் எழுத்தாளர் ஆயம் என்பவற்றின் தாபகருமான அமரர் ஊ து வுhயஅழவாயசயஅ அவர்கள்.. ஈழத்தமிழர் தாயகப்பற்றாளரும் செயற்பாட்டாளருமான அமரர் திரு மகரசிங்கம் ஐயா அவர்கள் சன்றைஸ் வானொலியின் தாபகரும் தமிழ்ப்பற்றாளரும் இலண்டன்
இரத்தினம் அறக்கட்டளையின் பணிப்பாளரும் தமிழ்ப்பாடசாலையின்
முன்னாள் அதிபருமான கலாநிதி நித்தியானந்தன்…
அமரர் ‘ஐ.நா’ வைகுந்தவாசன் ஐயா அவர்கள்… இவரது சகோதரர் எழுத்தாளர் அமரர் ஞானசூரியன் அவர்கள்.. அமரர் கலாநிதி ஆறுமுகம் திரு வைரவமூர்த்தி அமரர் வாமதேவன் அமார் திரு பேரின்பநாயகம் திருமதி பத்மா பேரின்பநாயகம் ஆகியோர் தாயகத் தமிழரின் இன்னல் துடைக்கும் பணிகளிற் தம்மை ஈடுபடுத்தியதோடு தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றிய தூரநோக்குடையவர்களாகவும் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது!
எனது அறிவுக்கு எட்டியவரையில்… தமிழ்ப்பாடசாலையின் தோற்றம்
இலண்டனில்.. விம்பிள்டனிலும் ஈஸ்ற்றாமிலுமே தொடங்கியிருக்கவேண்டுமென நம்புகின்றேன்!
விம்பிள்டனில்… திரு ஆனந்தராஜா எனும் பொறியியலாளர் 1973இல் ஆரம்பித்து நடத்திப் பின்னர் தமிழ்ப் பற்றாளர் எனது அன்பிற்குரிய நண்பர் அமரர் திரு திருச்செல்வம் அவர்கள் 1977-78 மட்டில்
;நடத்திவந்த தமிழ்ப்பாடசாலையே யான் முதன்முதலாக நேரிற் சென்று பார்த்த தமிழ்ப் பள்ளிக்கூடமாகும்!
இங்கு தான்… எனது தமிழ் அமைச்சூர்க் கலைஞர் கழகத்தின் நண்பர்கள் அமரர்கள் பேரின்பநாயகம், அலோசியஸ், சதானந்தன் மற்றும் பத்மா பேரின்ப நாயகம் திரு திருமதி சந்திரமோகன் ஆகியோரின் உறவு வலுப்பெற்று வளரலுற்றது என்க்கூறுவேன்!
அமைச்சூர்த் தமிழ்க் கலைஞர் கழகம் விம்பிள்டன் நகரமண்டபத்தில் நிகழ்த்திய கலை விழாவும் ஐனெயைn லுஆஊயுஇல் பாரதவித்தியாபவனின் அன்றைய தலைவர்ம் காப்பாளருமான திருமிகு மாத்தூர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு… எமது தாயகத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் பத்மநாதன் அவர்களின் இசைக்கச்சேரி அரங்கேறிய நிகழ்வும்..… மேலும் எனது வில்லுப்பாடல்கள் அரங்கக் கவியாற்றுகைகள் நிகழ்ந்ததும்
இக்காலப்பகுதியிலேயே!
இக்காலத்திற்றான்… தாயகத்திலிருந்து இயங்கிவந்த அமரர் மு ஊ Niவாலயயெவாய அவாகளது மக்கள் தொண்டுப் பணியில் எமது அமைச்சூர்த்தமிழ்க் கலைஞர் கழகமும் இணைந்து இலண்டனிலிருந்து தமிழ்க் கலைவிழாக்களின் மூலம்.. எமது தொண்டினை ஆற்றும் வாய்ப்பு வந்தமைந்தது! இந்நிகழ்வுகளில் தமிழ் ஆhவலர்களும் மழலைகள் சிறுவர்களும் ஆரவத்துடனும் உயிர்ப்புடனும் இயங்கியமை தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஓர எழுச்சியை அளித்தது!
இக்காலகட.;டத்தில்… ஈஸ்ற்றாம் பகுதியிலும்… இலண்டன் தமிழ்ச் சங்கமும் திருவள்ளுவர் பாடசாலையும் தமிழகத்தைச் சேர்ந்த எமது தமிழுறவுகளால் நடாத்தப்பட்டிருக்கலாமென நம்புகின்றேன்!
இலண்டனில் முதலாவது தமிழ்ச் சங்கம் 1936இல் டாக்டர் ஆர் கே சண்முகம் செட்டியார் அவர்களால் தாபிக்கப்பட்ட இலண்டன் தமிழ்ச்சங்கம் என அறியப்படுகிறது! அது இன்றும் உயிர்ப்போடும் உற்சாகத்தோடும் இலண்டன் ஈஸ்ற்றாம் பகுதியில்.. இயங்கிவருவது மகிழ்ச்சியைத்தருகிறது! 1974இல் இந்நாட்டிற்கு வந்த யான் முதன்முதலாக ஆற்றிய அரங்கக். கவிதை இந்தத் தமிழ்ச் சங்கத்திற்றான்! அப்போது திரு முத்துக்குமாரசாமி அவர்கள்
இச்சங்கத்திற்குத் தலைமை வகித்து வந்தார்!
அக்காலத்தில்… ஒரேயொரு வானெலிச்சேவைபற்றித் தான் யாமறிவோம்! டீடீஊ டுழனெழn தமிழோசை வானொலி தான் முதற்தமிழ் வானொலிச் சேவையாக அப்போது இயங்கிவந்தது!
இது பெருமதிப்பிற்குரிய ஐயா சோ சிவபாதசுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அரசினர் தமிழ்ச் சேவையென நம்புகின்றேன்!
பிற்காலத்தில் கவிஞரும் ஊடகவியலாளருமான ஐயா சங்கர் அவர்களின் தலைமையில் அறிவிப்பாளர்களாக திருமதி ஆனந்தி
சூரியப்பிரகாசம் விமல் சொக்கநாதன் மற்றும் ஈழத்தின் பிரபல நாடகர் ஊடகர் தாசிசியஸ் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்புகளோடு இச்சேவை தொடர்ந்து… பின்னர் தற்போதும்
இயங்கிவருவதாக அறிகிறோம!
பத்திரிகை சஞ்சிகை என்று பார்ப்போமாயின்…
1970களின் பிற்பகுதிகளில்…அக்காலத்தில்… இலண்டனில்.. திருமிகு சதானந்தன் அவர்களின் உழைப்பிலும் உணர்விலும் அவர் தலைமையிலும் விம்பிள்டனிலிருந்து வெளிவந்த ‘இலண்டன் முரசே நானிறிய முதன்முதலாக ஓர் ஒழுங்கு முறையில் வெளிவந்த தமிழிதழென எண்ணுகின்றேன்!
திரு சதானந்தன் அவர்களின் நட்புடன் இவ்விதழிற் தொடர்ந்தெழுதிய அனுபவம் எனக்குண்டு!
எனது வில்லுப்பாட்டுப் படத்தினை அட்டைப்படமாகப் போட்டு வெளியிட்டு என்னை ஊக்குவித்தவர் ஐயா சதானந்தன் ஆவார்!

