என் நண்பர் எழுத்தாளர் இராணி மைந்தன் அவர்கள் ‘சத்தியம் சாகாது” என்ற ஒரு கவிதை நூலைக் கொடுத்தார். அந்த நூலாசிரியர் புலவர் ந. சிவநாதன் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரின் கவிதைகளை படிக்க படிக்க அவர் என் நெஞ்சுக்கு நெருக்கமாகிக் கொண்டிருந்தார்.