ஆன்றோர் அறிவும் சான்றோர் சால்பும் தோன்றாத் துணையெனக் கொண்டு, தமிழ் எனும் இன் சுவையைத் தனி அடையாளமாகக் கொண்டதாகிய அரும் பெரும் அவையாகிய லண்டன் தமிழாவை, தன்னுடைய அழகான தமிழ்ப்பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடந்து வெற்றிப் பெருமிதத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இது, உலகெங்கிலும் பரந்து வாழுகின்ற அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் உவகை தரக்கூடிய ஒரு நற்செய்தி.
இந்தக் கால் நூற்றாண்டுப் பயணத்தில், தமிழவை பதிவு செய்திருக்கக்கூடிய களிப்பான தருணங்களை விட, களைப்பான தருணங்கள் தான் அதிகமாக இருந்திருக்கும் என்பாத. யாரும் எளிதில் புறிந்து கொள்ள முடியும். ஏனெனில், புலம் பெயர் தேசமொன்றில், இது போன்றதொடு சவால் நிறைந்த பணியை முன்னெடுக்கும் போது, சாதனைகளை விட சோதனைகளுக்கான சாத்தியம்தான் அதிகமாக இருக்கும் என்பதே யதார்த்த நிலை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழின் தொன்மை. பரப்புகின்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதற்குத் தமிழவை என்றொரு அழகான பெயர் வைத்து, அன்பாகிய தமிழிலே அமிழ்ந்து,
சங்கம் வளர்த்த தமிழ் போல, இங்கே கடந்த 25 வருடங்களாக இந்த, ஸ்தாபனத்தைக் கட்டிக் காத்து எங்கள் தாய் மொழியாம் தமிழை வளர்த்தெடுத்த பெருமை,
எல்லோரதும் பெருமதிப்புக்குறிய திரு. நல்லதம்பி சிவநாதன் ஆகிய எங்கள் புலவர் ஐயாவையும், ஆரம்ப முதலே அவருடன் சேர்ந்து பயணித்த ஆசான் திரு பற்றிமாகரன் அவர்களையும், முதன்மைக் கவிஞர் தம்பி பாலரவி அவர்களையும் – இவர்களைப் போலவே இன்றும் பல பெயர் தெரியாத உணர்வாளர்களையுமே சாரும் என்பதைப் பெருமையுடன் கூறி, அவர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

