வெள்ளிவிழா காணும் தமிழவையை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன்.
புலவரின் தலைமையில் கடந்த கால் நூற்றாண்டாக கவிதைகள், கட்டுரைகள்,
நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் என முத்தமிழும் ஒருங்கே அமைய நிகழ்ச்சிகளை தயார்செய்து அரங்குகளில் மேடையேற்றி தமிழன்னைக்கு சேவையாற்றி வருகின்ற தமிழவையை வாழ்ததுவதில் பேருவகை கொள்கிறேன்!
தமிழருவி எனக்கொட்டும் புலவரின் தீந்தமிழ்க்கவிதைகள்
தமிழவைக்கு அழகு சேர்ப்பன.
புதிய கவிஞர்களையும் அரவணைத்து ஊக்கம் கொடுத்து வளர்க்கும் தமிழவையின் சேவை பாராட்டப்பட வேண்டியதே!
வாழ்க தமிழ் வளர்க தமிழவையின் தொண்டு
எழுதியவர் சத்தியமூர்த்தி

