வெள்ளிவிழாவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி
தமிழவை தமிழ்மொழி கலை கலாசார பண்பாட்டு தமிழர் தொன்மை வரலாறு இவற்றை தன் உயிர்மூச்சாக மேற்கொண்டு கடந்த இருபத்தைந்து ஆண்டாக எமது எதிர்கால சந்ததினருக்காக செயல்பட்டுவருகின்றது.
தமிழவையுடன் நானும் தனிப்பட்டமுறையிலும் பல்வேறு அமைப்புகளூக்கூடாகவும் இணைத்து செயல்பட்டுவருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
தமிழவையை ஸ்தாபித்த என் அன்பிறகுரிய புலவர் சிவநாதன் அண்ணாவுடன் பொது வாழ்வில் என் உறவு 40 ஆண்டுகளை தாண்டி பயணிப்பதில் மகிழ்ச்சி
தமிழால், இன விடுதலை ,புலம்பெயர்ந்து இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அடுத்த தலைமுறையினர், இன உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உன்னத எண்ணம், இவ்வாறான சிறப்பு காரணங்களுடன் தன்னை அர்ப்பணித்து இயங்கிவரும் புலவர் அண்ணா
இன விடுதலைப்போராட்டம் தாயகத்தில் ஆயுத எழுச்சியுடன முன்னெடுத்த வேளை பிரித்தாணியாவில் இயங்கி வந்த தமிழ் மறுமலர்ச்சி சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வுசுழு, வோல்த்தம் பொறஸ்தமழ்ச்சங்கம் போன்ற சமூக அமைப்புகளூடாக பல்வேறு கலைப்படைப்புகளை எங்கள் அன்பு வேண்டுதலுக்கமையவும் அவரின் இயல்பான இன உணர்வாலும் அவற்றை மேடையேற்றி கலைக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் அளப்பரிய பங்களிப்புகளை செய்து வருகின்றார்
அவரின் படைப்புகளில் எங்கள்(என்னை) அனைவரையும் உச்சத்திற்கு இட்டு செல்வது நர்த்தனாகலாலய இயக்குனரும் வோல்த்தம் பொறஸ்ட் தமிழ் பாடசாலை நாட்டிய ஆசிரியையுமான பத்மினி குணசீலன் ஆசிரியருடன் புலவர் அண்ணா மேடையேற்றும் நாட்டிய நாடகங்கள்கலை உலகில் இவை அதியுயர் படைப்புகள்
எழு வருடங்களுக்கு முன் தைப்பொங்கல் தமிழர்களின் விழா மத வேறுபாடற்ற தமிழர அனைவரும் கொண்டாட வேண்டிய தமிழர் விழாவாக வோல்த்தம் பொறஸ்ட் தமிழ் மக்களால் எடுத்த விழாவில் எம்மால் அறிமுகபடுத்திய பல புதிய இளம் கலைஞ்ஞர்களை உள்வாங்கி நாடகம் ஒன்றை மேடையேற்றிய பெருமை தமிழவைக்கே
இவை அனத்தும் உயிர்துடிப்புடன் இயங்குவதற்கு அவரின உயர பண்பான தன்னலமற்ற அன்பு இன விடுதலை கலை உணர்வே அடிப்படை காரணம் ஆகும்.
புலவர் அண்ணாவின் கலைத்துறை வரலாற்றில் என் குடும்ப துணைவியார் அண்ணா என்றும் தன் தங்கை என அன்பாக விழிக்கும் ஆனந்தி குகச்சந்திரன், அண்ணாவின் நெறியாள்கையில் வெளிவந்த பல சமூக நாடகங்களில் பல வித கதாபாத்திரங்களில் நடித்து எமது குடும்பமும் தமிழவையின் கலை குடும்ப அங்கத்தவராகியது பெருமைக்குரியது.
தொடரட்டும் தமிழவையின் தமிழ் கலைப்பயணம் நாமும் பயணத்தை தொடருவோம்
குகன் குகச்சந்திரன்
சமூக சேவை தொண்டன்

