சங்கங்கள் தமிழாய்ந்த
கதைகள் பல கேட்டோம்
இங்கேயும் இலண்டனிலே
இன் தமிழை ஆயும்
அவை ஒன்று தூங்காது
அரை நூற்றாண்டாக
இயங்குவது கண்டேயாம்
இறும்பூது கொண்டோம்.
……………………
இலண்டனிலே இலங்கிவரும்
இனிதான தமிழவைதான்
எண்டிசையும் தமிழ்பரப்பும்
எழுச்சி மிகு பணியை
தொண்டாகக் கொண்டு -தமிழ்
மூன்றிலுமேஆற்றிவரும்
கண்டான நற்பணிக்கு
ஈடேது காண்போம்
……………
சிவநாதப்புலவனவன்
சிந்தனையில் முந்திவந்த
தவப்பயனாம் தமிழவையைத்
தரமாக வாழ்த்திடற்கு
உவமான வார்த்தைகளால்
முடியாதையே! -முடிந்தமட்டில்
நவமான சொற்கொண்டு
வாழ்த்திடுவம் யாம் !

