கி.அமர்நாத் ராமகிரு~;ணா
தொல்லியல் கண்காணிப்பாளர்,
இந்தியத் தொல்லியல் துறை,
கோவில் ஆய்வு, திட்டம்,
(தென்மண்டலம்)
சென்னை-09
புலவர். நல்லதம்பி சிவநாதன் அவர்கள் இலண்டன் மாநகரத்தில் தமிழவை என்ற ஒரு கலை, பண்பாடு மற்றும் இலக்கிய அமைப்பை தமிழர் மாண்பு, சிறப்புகளை மற்றும் சீரிய பண்புகளை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தி சிறப்புடன் நடத்தி வருகிறார்.
இவர் இலங்கையில் இருந்து 1974 ஆம் ஆண்டில் இலண்டனுக்கு புலம் பெயர்ந்து கல்வி தொழில் என்று நின்று விடாமல் தமிழோடும், தமிழரோடும் தனது வாழ்வினை இணைத்துக் கொண்டவர் புலவர் நல்லதம்பி சிவநாதன் ஆவார். இவர் 1999 இல் தனது நிலத்தின் பின் பகுதியில் ஒரு மண்டபம் அமைத்து ‘’தமிழவை’’ என்னும் பெயர் சூட்டி அதன் நிறுவனராகவும் காப்பாளராகவும் இயங்கி தமிழ் சமூகத்திற்கான நலன்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார். இவ்வயம் பல நூல் வெளியீட்டு விழாக்கள் இணையவழி ஒன்றுகூடல், இலக்கிய வழி சந்திப்புகள் என்ற பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது குறிப்பாக ‘முத்தமிழாரம்’,‘பாவும் நாவும்’,‘தேடலும் கூடலும்’,‘சமுதாய சங்கமம்’, (ஐடீஊ வுயஅடை சுயனழை), கருத்தியல் சங்கமம்’(ஐடுஊ வுயஅடை சுயனழை),‘அகக்கண்’ (ஐடீஊ வுயஅடை வுநடநஎளைழைn) போன்ற நிகழ்வுகள் மூலம் தமது புலம்பெயர் சமூகம் ஓரளவாவது தமிழின் பெருமையை அறிந்துகொள்ள உதவியாக இருந்துள்ளது.
தமிழரது தொன்மை மீதான ஆழமான பற்றோடும் அறம், அன்பு, மரபுசார் நம்பிக்கைகளோடும் இயல், இசை, நாடகம், நாட்டியம் என்னும் நான்கு நலன்களிலும் தேசம், தேசியம், தெய்வம் எனும் முப்பரிமாணங்களிலும் மொழி, கலை, கவிதை, இலக்கியம், வழிபாடு, வரலாறு, ஆழ்கடலியல் மற்றும் தொல்லியல் எனும் பன்முக பரப்பின் தாயாக வாழ்விலும் புலம்பெயர் வாழ்விலும் மேற்குலகச் சூழலில் நான்கு சகாப்தங்களுக்கு மேலான பொறியியல் கட்டிடக்கலை சார்ந்த மேலாண்மை தலைமைத்துவ ஆளுமைகளோடும் அவற்றின் மூலம் ஈட்டிய அனுபவங்களின் மூலம் கிடைத்த அனுபவங்களை வைத்து பல கவிதைகள் நாடகங்கள் நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என பலவற்றை இயற்றியுள்ளார்.
அவற்றுள் அவரின் தமிழின் தொன்மை குறித்த ஈர்ப்பும் ஈடுபாடும் அவரை “ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்” என்ற கட்டுரை தொகுப்பை எழுததூண்டியது இதை தவிர இவர் “சத்தியம் சாகாது”,“காவிய சலங்கைகள்”,“குமுறல்” போன்ற நூல்களும் “பிரபஞ்சலீலை”,“சிவகங்கை செந்தீ” போன்ற நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளார் மேலும் 30 க்கு மேற்பட்ட அரங்க நாடகங்கள் நாடகங்களையும், நாட்டிய நாடகங்களையும் பல பாடல்களையும் தமிழவை மண்டபத்தில் மூலம் உலகெங்கும் ஒலிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
புலவர். நல்லதம்பி சிவநாதன் அவர்கள் மார்ச் மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு வந்திருந்த போது எனது அலுவலகத்தில் அவருடைய துணைவியாருடன் வந்து சந்தித்து கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் தொல்லியலை பற்றியும் தமிழக வரலாற்றைப் பற்றியும் மிக விரிவான கலந்துரையாடல் நிகழ்த்தியபொழுது நான் மேற்க்கொண்ட என்னுடைய கீழடி ஆய்வின் பெருமையை ஒரு கவிதை வடிவில் பாடி பாராட்டியது மிகவும் பெருமையாக கருதுகின்றேன். அவருடன் உரையாடிய தருணம் பல அரிய தகவல்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் பொறியாளராக இருந்து தமிழ் மொழியில் ஆழ்ந்த ஞானத்தை பெற்றுள்ளவர் என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவரின் தமிழ்மொழி தொண்டு மென்மேலும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய சீறிய கருத்தாகும்.
இவ்வாறு “வினையே ஆடவர்க்கு உயிரே” என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவரை உயர்த்தும் பெருமையும் புகழும் சேர்க்கும் அற்பணிப்பு உறுதிபாடு விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மற்றதை எவ்வாறு வழிநடத்த முடியும் என்பதற்கு புலவர் நல்லதம்பி சிவநாதன் அவர்கள் உதாரணமாக திகழ்கிறார் அவரின் கடின உழைப்பானது இன்றைய தலைமுறையினருக்கு புதிய முன் உதாரணத்தையும் புதிய உத்வேகத்தையும் உருவாக்கி உள்ளது. அவர் தோற்றுவித்த தமிழவை மென்மேலும் சிறக்கவும் மேலும் பல சாதனைகள் புரியவும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
கி.அமர்நாத் ராமகிரு~;ணா
தொல்லியல் கண்காணிப்பாளர்

