தமிழவை 25 வெள்ளிவிழா மகிழ்ச்சிப் பெருவிழா
கால்நூற்றாண்டுக்காலம் தடம்பதித்து இவ்வாண்டு-2024இல்
வெள்ளிவிழாக் காணும் தமிழவையின் கலை கவிதை இலக்கியப் பயணம் ஈட்டிய வாழ்த்துரைகளில் ஒரு சில உரைமணிகள்
1. தமிழவையின் நிறுவனர் காப்பாளர் புலவர் நல்லதம்பி சிவநாதன் அவர்களின் அகவுரை
2. தமிழவையின் ஆலோசகர் ‘சைவஞான வித்தகர்’ சூ யோ பற்றிமாகரன் அவர்களின் அணிந்துரை
3. தமிழவையின் தலைமைக் கவிஞர் பாலரவியின் அணியுரை
4. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசலம் அடிகளார் அவர்களின் ஆசியுரை
5. சைவசித்தாந்தப் பெருமன்றத்தலைவர் சென்னைப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைமைப் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் அவர்கள் வழங்கிய ஆசியுரை
6. மேனாட் பாரத சனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்… புலவர்; சிவநாதனின் ‘சத்தியம் சாகாது’ கவிதைத் தொகுப்பிற்கு அனுப்பிய வாழ்த்து மடல்
7. ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிரு~;ணா (தொல்லியல் கண்காhணிப்பாளர் இந்தியத் தொல்லியற்துறை தமிழகம்). அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
8. ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஈலிங் அறக்கட்டளையின் தலைவர் தா யோகநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
9. கலாநிதி க இரகுபரன் ( மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஒலுவில் இலங்கை) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
10. கவிஞர் எழுத்தாளர் தங்க காமராஜ் ( மேனாள் அகரமுதலித் திட்ட இயக்குனர் தமிழியற் செயற்பாட்டாளர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
11. கவிஞர் தமிழாசான் கந்தசாமி மனோகரன் (தமிழ்க் கற்கைநெறி… கல்வி நூல் வெளியீட்டுப் பணியாளர்) அவர்கள் வழங்கிய பாவாரம்
12. தாயகப் பற்றாளர் சமூகத் தொண்டர் வல்தம் போறஸ்ற் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் திரு குகச்சந்திரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
13. இலண்டன் வோல்தம் பொறஸ்ற் தமிழ்ச் சங்கத் தலைவி கீதா இராஜநந்தகுமார் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
14. திருமதி தவமணி மனோகரன் ( தலைமை ஆசிரியை இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
15. இலண்டன் சைவமுன்னேற்றச் சங்கம் வழங்கிய வாழ்த்துச் செய்தி
16. கவிஞர் சுரா (எழுத்தாளர் பாடலாசிரியர் வில்லிபுத்தூர் செந்தமிழ் அறக்கட்டளையின் தலைவர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
17. நாடகநேசர் எம் அரியநாயகம் ( ‘உடல்’ அரங்கியல் இதழ்’ ஆசிரியர் பாரிஸ்) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
18. சாம் பிரதீபன் (மெய்வெளி ஊடக இயக்குனர் மரபுக்கலை அரங்காளர் ) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
19. டாக்டர் திருமதி அனந்தசயனன்
20. திரு வேந்தனார் இளஞ்சேய்
21. ஜோ வில்சன் இருதயானந்தன் ( மூத்த ஊடகவியலாளர் மரபுக்கலை ஆர்வலர் இசைவாத்தியக்கலைஞர் தமிழவையின் மேகாட் தலைவர்) அவர்கள் வழங்கிய அன்புரை
22. பாவலர் க இராஜமனோகரன் ( கவிஞர் இலக்கிய ஆளுமை பேச்சாளர் பட்டிமன்ற உரைஞர்) அவர்கள் வழங்கிய பாவாரம்
23. கோவிலூர் செல்வராஜன் ( கதாசிரியர் பாடகர் பாடலாசிரியர் எழுத்தாளர் நூலாசிரியர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
24. மாணிக்கம் சத்தியமூர்த்தி (‘ஓ! வண்டிக்காரா!’ புகழ் மெல்லிசைப் பாடகர் கலை கவிதை ஆர்வலர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
25. தாயக தேசப்பற்றாளர் எழுத்தாளர் கதாசிரியர் சாவித்திரி அத்துவிதானந்தன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
26. கவிஞர் கதிர் லோகன் (கவிஞர் வில்லிசைக் கலைஞர் பாடலாசிரியர்) அவர்கள் வழங்கிய பாவாரம்
27. யு டீசைன’ள நுலந ஏநைற – Pரடயஎயச ளுiஎயயெவாயn’ள தழரசநெல inஉந 1975 டில ஆச யனெ ஆசள ஊhயனெசயஅழாயn – டுழபௌவயனெiபெ pநநசள ழக Pரடயஎயச ளுiஎயயெவாயn யனெ யுளளழஉயைவநள ழக வுயஅடை யுசவளைவநள புசழரி (வுயுபு) னரசiபெ 1976 வழ 1980.
28. ‘சாயி மாதா’‘குமார சம்பவம்’‘கவிமகனும் கோமகளும்’‘கோமகனும்குருமகளும்’ ஆகிய புலவர் சிவநாதனின் நாட்டிய நாடகப் படைப்புகளைத் தனது நீண்டகால நாட்டியக் கலை அனுபவச் செழுமையோடு நெறியாள்கை செய்து தனது நூபுர கேந்திரா நாட்டியப் பள்ளி மாணவ மணிகளின் ஆற்றுகைத் திறன்களினூடு தயாரித்து வழங்கி வெற்றி கண்ட நாட்டிய வித்தகி சுபத்திரா சிவதாசன் அவர்கள் புலவர் சிவநாதனின் ஆறு தசாப்தக் கலைப்பயணத்தின் போது உளமார அளித்த வாழ்த்துமடல்!
29. யு hநயசவகநடவ யிpசநஉயைவழைn அநளளயபந கசழஅ முசைதைய ஏயசழவாயலயளiபொயஅஇ ய னயnஉந pநசகழசஅநச யனெ உhழசநழபசயிhநசஇ றாழ hயள உழசனயைடடல றழசமநன றiவா Pரடயஎயச ளுiஎயயெவாயn ழn hளை னயnஉந னசயஅய pசழனரஉவழைளெஇ ‘ளுயவாவாலயயசயஅ’ யனெ ளுயடயபெயi ழுடi’ யள றநடட யள in hளை ளவயபந pடயலஇ ‘Pநசயமமரதெரமயட’.
30. யு கயiவாகரட யனெ வசரவாகரட யிpசநஉயைவழைn அநளளயபந கசழஅ துரனந துநலயசயதஇ ய லழரபெ அரளiஉயைn றாழ hயள றழசமநன றiவா Pரடயஎயச ளுiஎயயெவாயn ழn ய ரெஅடிநச ழக அரளiஉயட pசழதநஉவள in றாiஉh Pரடயஎயச றசழவந வாந டலசiஉள கழச துரனந’ள உசநயவiஎந அநடழனநைள.
31. ‘ஆராதனா நாட்டியப்பள்ளியின்’ ஆண்டுவிழாவில்… அதனது பணிப்பாளர் சுஜந்தினி மகேஸ்வரன் அவர்களின் நெறியாள்கையிலும் பள்ளி மாணவமணிகளின் நர்த்தனக் கலைத்துவத்திலும் அரங்கேறிய புலவர் சிவநாதன் அவர்களின் படைப்பாக்கமான ‘இரவி மைந்தன்’ நாட்டிய நாடகம் குறித்து… அப்படைப்பேடு ஒன்றித்துப் பயணித்த கலாரசிகை அஞ்சு ராமதாஸ் அவர்கள் வரைந்த உரைச்சித்திரம்
32. புலவர் சிவநாதனின் ‘திரிசங்கு சொர்க்கம்’ எனும் நாடகப்படைப்பில் ஒரு நடிகனாக இணைந்து… புலவரின் நாடக அரங்கப் பயணத்தினூடு ஓர் அன்புறவை உருவாக்கிக் கொண்ட தமிழ்ச் செயற்பாட்டாளன்.. ஊடக ஆர்வலன்… சுப்ரம் சுரே~; அவர்கள் வரைந்த உறவுரைச் சித்திரம்!
33. புலவர் சிவநாதனின் கவிவண்ணத்திலும்… இலண்டன் நர்த்தன கலாலயாவின் நிறுவனர் பணிப்பாளரும் புலவர் சிவாநாதனின் பல படைப்புகளுக்கு நாட்டியவடிவம் கொடுத்தவருமான ‘நர்த்தன கலாவித்தகி’ ‘சங்கீதவித்துவான்’ பத்மினி குணசீலன் அவர்களின் கலை வண்ணத்திலும்.. நர்த்தன கலாலயாவின் மாணவமணிகளின் நர்த்தன ஆற்றுகைத் திறனிலும் தமிழகத்தின் மூவரங்குகளில் அரங்கேறி வெற்றி கண்ட.. வரலாறு தழுவிய படைப்பான ‘சிவகங்கைச் செந்தீ’ நாட்டிய நாடகத்தின் பார்வையாளராகப் பங்குகொணட தமிழகத்தின் கவிஞர் எழுத்தாளர் அகர முதலித் திட்ட மேனாள் இயக்குனர் தமிழ்ச செயற்பாட்டாளர் தங்க காமராஜ் அவர்கள் அளித்த பின்னூட்டப் பதிவுகளுள் ஒன்று
34. தமிழவையின் நிறுவனர் காப்பாளர் புலவர் நல்லதம்பிசிவநாதன் அவர்களின் அகவுரை
05-10-2024
என் பாசத்திறகும் நேசத்திற்கும் பெருமதிப்பிற்குமுரிய என்னன்புறவுகளுக்கு!
எனது நெஞ்சங்கனிந்த வணக்கங்களையும் வாழ்த்துகளையும் மகிழ்வோடும் நெகிழ்வோடும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்!
எமது தமிழவையின் வெள்ளிவிழாவினை முன்னிட்டு இந்த அன்பு மடலை வரைய விழைகின்றேன்!
தமிழவையின் தோற்றக் காலத்திலிருந்து.. அதனது படிப்படியான வளர்;ச்சிக்காலங்களிலெல்லாம்… தொடர்ச்சியாக எனது அடிவளவில் நாம் அமைத்துள்ள மண்டபத்திலிருங்தும் நமது விழா அரங்குகளிலும் அரங்கேற்றங்களிலும் எமது அவைக்கூடல்கள்.. அறிவுத் தேடல்களிலும் அன்புக் கலநகுழு;துரையாடல்களிலும் பேசாத எதனையும் பகிராத எதனையும் நான் இங்கு புதிதாக எழுதப்போவதில்லை!
தமிழவையின் பத்தாவது அகவையிலும் பதினைந்தாவது அகவையிலும் இருபதாவது அகவையிலும் எங்கள் இல்லத்திலும் தமிழவை மண்டபத்திலும் நாம் ஒன்றாகக் கூடிக் குலவி… ஒக்கலித்து மகிழ்ந்த நிகழ்ச்சிகளை உங்களில் ஒருசிலர் நிச்சயம் மறந்திருக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்!
தேசம் தேசியம் தெய்வம் சார்ந்த தமிழவையின் நம்பிக்கைகள் நோக்குகள் இலக்குகள் பற்றி… அதன் நிறுவனனாகவும் அதன் காப்பாளனாகவும் இவை சார்ந்து பொறுப்புணர்போடும்.. அறநெறி.. அன்பு நெறி.. அருள் நெறிக் கொள்கைகளோடும்… நான் பல தடவைகள்.. வாய்ப்புகள் வருகின்ற போதெல்லாம் வரையறுத்தும் வலியுறுத்தியும் வந்துள்ளதை எம்மோடு 1999இலிருந்தும் அதற்கு முன்பும் இணைந்து பயணித்தவர்கள் பணியாற்றியவர்கள் பங்களிதவர்கள்.. நன்கறிவர்!
இவர்களில் ஒருசிலர் 1970களின் பிற்பகுதியில் நான் உருவாக்கி இயக்கி வந்த ‘தமிழ்க்கலைஞர் குழு’ (வுயஅடை யுசவளைவநள புசழரி’ இலிருந்தே என்னையும் எனது தமிழ் வாழ்வையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளைமை எனக்கு ஊக்கமும் உந்துசக்தியும் தந்த விடயமாகும்!
என்னோடு இணைந்து என்னோடு பயணித்த எனது துணைவியார் எனது பிள்ளைகளின் பங்களிப்பினை விபரிக்க என்னிடம் வார்த்தைகளேயில்லை என்பேன்! இவர்கள் எனது தமிழப் பயணத்திற்காகச் செய்துவரும் விட்டுக்கொடுப்புகள் எழுத்திழலடங்காதவை என்பேன்!
மேலாக…எமது தமிழவையின் வளத்திலும் வளர்ச்சியிலும் என்னோடு தொள்கொடுத்து நின்ற.. இன்றுவரையும் என்னோடு நிற்கின்ற… எனது பாசத்திற்குரிய தம்பி தங்கையர்கள்.. அண்ணன் அக்காமார்களை நான் என்றும் மறப்பதற்கில்லை!
1997-1998களில் தமிழவைக்கான கட்டடத்தைக் கட்டி… அதன் கட்டட வேலைகளை 1999இல் நிறைவு செய்தபின்னர்… 1999இல்.. கோடைப் பருவகாலத்தில்.. தமிழவைக்கான அங்குரார்ப்பண நிகழ்வை நடத்தியிருந்தோம்!
ஏதோ ஒரு தெய்வ வாக்காக.. என்னுள் இக்கால இடைவெளியில் உதித்த விருது வாக்கியமே..
‘ஆன்றோர் அறிவும் சான்றோர் சால்பும்…
தோன்றாத் துணையாய்க் கொண்டது’ எனும் சொற்கோர்வையாகும்!
இதே எண்ண ஓட்டத்தில் உதித்த பெயரே ‘தமிழவை’ எனும் திருநாமமுமாகும்!
.இவையெல்லாம் திட்டமிடப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட காரியங்களல்ல!
தமிழவை உயிர்த்ததும் உதித்ததும் உலவியதும் ஒரு கனவுக் காட்சியாகவே எனக்கு இன்றும் தோற்றமளிக்கிறது!
தமிழவை மண்டபத்தில் நாம் கூடியதும்.. இறைவழிபாட்டுடன் குலவியதும் கலந்துரையாடியதும் ஒரு நீண்ட கனவின் நிலைத்த விம்பங்களாகவே தோன்றுகின்றன!
புறப்பொருள் நோக்காது முகத்துதி பார்க்காது அகப்பொருள் போற்றும் வியத்தகு அமைப்பாகத் தமிழவை வளம் பெற்று வளரவேண்டுமென்ற தமிழ்மரபுக் கொள்கையோடு எமது பயணம் தொடங்கியது!
எங்கள் தமிழவை…
என் அன்புத்தம்பி ‘சைவஞான வித்தகர்’ சூ யோ பற்றிமாகரன் அவர்கள் வாழ்ந்து வருகின்ற ‘ஒக்ஸ்ஃபாட்’ இல் அங்குள்ள உலகப் பிரசித்திபெற்ற பல்கலைக்கழக வளாகப் பகுதியிலுள்ள நதிக்கரையோரம் நங்கள் ஒரு சிலர் மட்டும்.. அமர்ந்து தமிழவைக்கான இலக்குகள் நோக்குகள்… நியமங்கள் நிலைப்டபாடுகள் பற்றி ஆராய்ந்து தீர்மானங்களை நிறுவினோம்! முத்தமிழாரமும் நர்த்தனக் கோலமும் வித்திடப்பட்டது!
எமது சமூகத்திடையே ‘ஒளிரும்’ கலை கவிதை கலை இலக்கிய ஆளுமைகள் ஆற்றல்கள்… அனுபவங்களையும்… எம்மிடையே இலைமறைகாயாக ‘ஒளிந்து’ வாழும் ஆளுமைகள் ஆற்றல்களையும் அரங்கிற்கும் அவைக்கும் அழைத்து வருகின்ற ஓர் அன்பும் அறமும் பண்பும் பணியும் சால் அமைப்பாகத் தமிழவை இயங்கத் தலைப்பட்டது!
இவற்றிற்கெல்லாம் ஆதாரநாதமாக எமக்கு அப்பாற்பட்ட ஓர் உந்துசக்தி எம்மை இயக்கியதென்பேன்!
எனது தனிப்பட்ட பார்வையில்…
தமிழவையுடனான எனது உயிருறவு…
எங்கள் ஈழத்துச் சித்தர்கள்.. செல்லப்ப சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் அருளிச்சென்ற..
• ‘எப்பவோ முடிந்த காரியம்’
• ‘நாமறியோம்!’
எனும் அருள்வாக்கியங்களை எனக்கு அறிவுறுத்தும் அனுபவங்களெனவே நான் ஆழமாக நம்புகின்றேன்!
எமது முன்னோர் எமக்கு விட்டுச் சென்ற விறல்கள் விழுமியங்களை எமது சமகால மற்றும் நாளைய சந்தியினரிடம் கையளிக்கின்ற பொறுப்பும் புரிந்துணர்வும் அவாவும் ஆர்வமும் வேணவாவும வேட்டலும் கொண்டவர்களாக நம்முள் ஒரு சிலர் பூமியில் வந்து பிறக்கிறோமோ என்ற ஒரு கேள்வி எமது அகவெளியில் உதிக்கும் கணங்கள் வந்து பொக முடியும்!
வேடிக்கையென்னவென்றால்.. எமது பிறவியோடு மட்டுமன்றி.. எமக்கான வாழக்கைச் சூழமைவுகளையும் அனுபவச் செல்நெறி வாய்ப்புகளையும் கூட.. நமக்கும் மேலான ஒரு மகாசக்தி ஓர் ஒழுக்கு வழிப்பட்ட பாதையில் அமைத்துக் கொடுக்கிறதோ என்ற சிந்தனைக் கீறலும் அவ்வப்போது வந்து செல்லத்தான் செய்கிறது!
இங்குதான் எங்கள் கணியன் பூங்கன்றனும் வள்ளுவனும் வந்து தங்கள் அகதரிசனங்களை எமக்குத் தந்து செல்லக்காண்கிறோம்!
எனவே…
நாம் வாழும் காலத்தின் தேவைகருதியோ.. இல்லை வழி வழி வந்த வரலாற்றின் வேண்டுதல் கருதியோ… இறையருள் நம்மொவ்வொருவருக்குமான கடமைகளையும் கருத்தியல்களையும் கட்டமைத்துக் கொண்டு எம்மை அந்த மகாசக்தி எம்மை வழிநடத்தி வருகிறதோ என்ற எண்ணமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு!
ஒரு பெரும்புலவனாய் வாழ்ந்து நிலைத்த.. தந்தையை மழலைப் பருவத்திலேயே இழந்து… தாயையும் இளமைப்பருவத்திலேயே இழந்து… சகோதர சகோதரிகளின் ஒட்டுறவினையும் ஒக்கலிப்பினையும் இளமையிலிருந்து முதுமைக்காலம் வரை இழந்து… சொந்த மனைவி பிள்ளைகளுக்கு அப்பால்.. ஓரு சமூக நிலைப்பட்ட.. தாயக உணர்வு தழுவிய ஒரு வாழ்க்கைச் சூழலிற்குட்தள்ளப்பட்டு.. தொழில் வாழ்விலும் தமிழர் தொல்குடித் தொன்மை பற்றி ஆராயக்கூடிய அறிவியல் அரங்கில் உலவவிடப்பட்டதன் விளைவே.. எனக்கும் எனது தமிழ் வாழ்வுக்கும் எமது தமிழவையின் தோற்றத்திறகும் தொடர்ச்சிக்குமான இணைப்பு நீரோட்டமென நான் உறுதியாக நம்புகின்றேன்!
அந்த மகா சக்தியே.. என்னையும் என்னோடு தமிழவையிற் சேர்ந்தியங்கும் சகோதர சகோதரிகளையும் இணைத்துப் பிணைத்து வழிநடத்தி வருகிறதென நான் எண்ணி வருகின்றேன்!
நாம்… எமது தமிழவையின் செல்நெறிச் செம்மாப்போடு.. தாயகத்திலும் தமிழகத்திலும் இயங்கி வருகின்ற கலை கல்வி சமூக மனிதநேய மற்றும் இறையியல் நிறுவனங்களோடும் இணைந்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பினையும் அந்த மகாசக்தியே அருளியதென்பேன்!
எமது மண்மீதும் மக்கள் மீதும் அவர்களுக்கான விடுதலையின் மீதும் எமது தாயக நிலத்தின் தாய்மொழி இறைமை மீட்பின் மீதும் அதற்கான தலைமை மீதும் அவற்றினூடு நாம் கண்ட ஈகங்கள் தியாகங்கள் மீதும் நாம் கொண்ட அக்கறையும் கொண்ட பற்றும் பக்தியுமே எம்மை ஒரு அடர்த்தியான பயணத்தில் இணைத்துக் கொணடதெனலாம்!
‘புலம் பெயர்ந்தாலும் உளம்பெயராத’ ஒரு மக்களாக நாம் ஒன்றுதிரளவேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயம் எம்மை வளைத்துக்கொண்டது!
தாயகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த ‘கேட்பாரற்ற’ இன அழிப்பு நடவடிக்கைகளே எமது உளவியலை எலுப்பிய வண்ணம் இருந்தன! இந்த நியாயப்பாடே..எமது கலை வாழ்வை.. கவிதை இயக்கத்தினை.. இலக்கிய வெளியை இயக்கயிவாறிருந்தது!
இச்சூழலில்.. உருவாக்கம் பெற்ற எனது எண்ணமும் எழுத்தும் கலையும் கவிதையும் உரம் பெற்று ஒலித்தது!
‘சத்தியம் சாகாது’‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்’ ஆகிய எனது இரு நூலாக்கங்களும் எமது தமிழார்வலர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பினைப்பெற்றமை எனது இலக்கிய உறவினை விசாலப்படுத்திதென்றால் அது மிகையாகாது!
எனது நாட்டிய நாடகப் படைப்பாக்கப் பயணமும் எமது தமிழவைக்கான ஓர் அங்கீகாரத்தினை விரிவுபடுத்தியுள்ளதென்பது எனது கண்ணியமான கணிப்பாகும்! ‘காவியச் சலங்கைகள்’ நாட்டிய நாடகத் தொகுப்பு இதற்கான ஒரு ஆவணப்பதிவாக நிற்கின்றதெனலாம்!
தமிழவை பற்றிய எண்ணக்கரு எங்கு தோன்றியது… எப்போது தோன்றியது என்பது பற்றி நான் பல நிகழ்வுகளில்; பல பதிவுகளில் பல ஊடக நேர்காணல்களில்.. உரையாடலகளில் உளத்தூய்மையோடு எந்தவித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்!
இவற்றிற்கும் மேலாக.. எனது கவிதைகளாக இருக்கலாம்.. கலைப்படைப்புகளாக இருக்கலாம் இலக்கியப் பனுவல்களாக இருக்கலாம்.. அவற்றினூடெல்லாம் எமது மொழி கலை கல்வி கவிதை இலக்கியம் பண்பாடு வரலாறு வழிபாடு வாழ்வியல் பற்றிய எனது தனிப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும்.. எமது தமிழவையின் நிலைப்பாடு குறித்தும் மிகவும் உரமான உறுதியான கருத்தியல் செறிந்த பதிவுகளையே செய்து வந்திருக்கிறேன்!
அதன்காரணமாகவே.. எனது அன்பின் செழிப்பையும் அறச்சீற்றத்தின் தகிப்பையும் அவர்களாற் தாங்கி.. எனது தவறுகளைத் தாண்டி என்னோடு இணைந்து…
‘தமிழ் செய்ய முடிகிறது’ என்பது எனது முடிவாகும்!
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’
-என ஒலிக்கும் திருமந்திர சுலோகத்திற்
‘தமிழ் செய்தல்’ எனும் பதம்…‘தமிழ் களவு நுதலிற்று’ எனும் அன்பினைந்திணையுரையின் இணையோசையெனவே நாம் நம்புவதன் காரணமாகத் ‘தமிழ் செய்தலையே’ தமிழவை தனது தலைமேற் கொண்ட தவமாக ஏற்று இயங்கிவருவதாக எண்ணுகின்றேன்! அன்பினை மையப்பொருளாகவும் அறத்தினை வையப்பொருளாகவும் கொண்டு…‘முரண்களையும் அரண்காளாக்கி முனனேறவல்ல ஒரு புதிய சமூகத்தினைக் கட்டமைக்கும் பயணத்தையே தமிழவை எனும் எமது அமைப்டபானது ஆற்றவல்லது’ என்பதே.. அதனது நிறுவனனாகவமு; காப்பாளனாகவும் கடந்த கால்நூற்றாண்டுகளாக இயங்கிவருகின்ற எனது அகப்பார்வையாகும்!
இப்பார்வையின் அகவிருத்தியே ‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!’ எனும் அற்புத பதங்களுக்கான அகவோசையை எழுப்பியதென நம்புகின்றேன்!
எனவேதான்…
எனது அகப்பார்வையையும் அகிலப் பார்வையையும் ஆழ்ந்த அன்புறவையும் புரிந்துகொண்ட காரணத்தாலேயே…
1999இற் தமிழவையின் தோறறத்தின்போது இணைந்து இத்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தவர்களும்… இடையில் வந்து இத்தமிழ்த் தேரின் வடத்தைப் பிடித்துத் தொடர்ந்தும் இழுத்துக்கொணடு வருபவார்களும் எனது உயிருக்கும் உள்ளத்திற்கும் ஊட்டமளித்தவாறு என்னை இன்றுவரை ஊக்குவித்துக்கொண்டு வருகின்றார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்!
உண்மையை வெளிப்படையாகக் கூறப்போனால்.. தமிழவை என்பது ஒரு பாசம் பகிரும் குடும்பமாவே எனக்கு எப்போதும் தோற்றமளித்து வருகின்றது! நான் துணிவோடும் தூய்மையோடும் தூர நோக்கோடும் சமுதாய இலக்கோடும் அன்புரிமையுடன் ஒருமையில் அழைத்து உறவு கொண்டாடுவதற்கான ஒரு களமாகவும் தளமாகவுமே.. தமிழவையை நான் கண்டுவருகின்றேன்!குறிப்பாக.. அண்மையில் எனக்கு ஏற்பட்ட பாரிய புற்றுநோய்க் காலத்தில்.. என தம்பி தங்கைகள்.. அக்கா அண்ணன்கள் தாய்மார்கள் தந்தைமார்களை எனக்கும் எனது துணைவியார் பிள்ளைகளுக்கும் அளித்த அன்பும் ஆதரவும் எம்மீது இவர்கள் காட்டிய பாசமும் பரிவும் என்னுள் ஏற்படுத்திய நேரிய தாக்கங்கள் வர்ணிக்கும் எல்;லைகள் கடந்தவை!
எனது அன்புறவுகளே!
இந்த இடத்தில் ஒரு முக்கியமான செய்தியையும் பதிவு செய்வது எனது தலையாய கடன்களுள் ஒன்றென நினைக்கின்றேன்!
எனக்கும் எமது தமிழவைக்கும் சமகால ஆன்றோர் சான்றோர்களுக்குமான உறவுநிலை என்பது எமது அமைப்புக்கான ஒரு மிகப்பாரிய பலமாகவே நான் கருதுகின்றேன்!
தமிழீழம் தமிழகம் ஆகிய எமது தாயக தேசங்களிலும்.. மற்றும் இன்றைய கால கட்டத்தில்.. உலகப்பரப்பிலும் வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது அனுபவமிக்க ஆளுமைகளை நேரிற் சந்தித்த வாய்ப்புகளின் மூலம் நானும் நமது தமிழவையும் இதுவரை அல்லது இன்றும் அடைகின்ற அனுபவச் செம்மாப்புகளை நான் ஒரு பெருவரமாகவே உள்வாங்கி வருகின்றேன்!
அன்பியல் அருளியல் அறவியல் அருளியல் பொருளியல் தமிழியல் தொல்லில் உலகியல் உறவியல் என பல அயல்களைப் பயிலும் ஒரு பள்ளி மாணவனாகவே நான் பயணித்து வருகின்றேன்!
பாரதி வாழ்ந்து வலம் வந்த பகுதிகளையும் புத்தர் காந்தி போன்ற பெருமக்கள் வாழ்ந்ததாக வரையப்படும் பகுதிகளையும் இந்தியா மத்தியகிழக்கு அவுஸ்திரேலியா நியூசிலாந்து தாய்லாந்து கம்போடியா இந்தோனேசியா மலேசியா ஜப்பான் ஆகிய தேசங்களின் தொல்ல்pயற் தடங்களையும் கூட…நான் தரிசித்து வருவதன் மூலம்.. இந்த உலக சமுதாயத்தின் தொன்மைச் சிறப்பையும் அதன் தொடர்ச்சித் தரத்தையும் ஒப்பீடுசெய்யக் கூடிய பெருவாய்ப்பினைப் பெற்று வந்துள்ளேன்! இவ்வாறான அனுபவங்களே..எனக்குள் ஓர் ஆய்வு வேட்கையை வலுப்படுத்தி வந்துள்ளதெனலாம்!
இப்பின்னணியில்..
எமது சமகால மற்றும் இளைய சந்ததியினரின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் களமாகவே ‘தேடலும் கூடலும்’ எனும் ஒரு மெய்நிகர் இணையவழிக் களத்தினை.. கோவிட் 19 கோரோனா நோய்தட தொற்றுக் காலத்தில் எமது தமிழவையில்.. வாராவாரம்.. சனிக்கிழமைகளில் நாம் தொடர்ச்சியாக நடத்தியதோடு.. அதனைத் தொடர்ந்தும் இணையவழி ஒன்றுகூடல்கள் மூலம்.. ‘தமிழவை முற்றம்’ பாவும் நாவும்’‘இலக்கிய உலா’‘ஒளி விழா’ வாணி விழா’‘தாயகவிடுதலை சார்ந்த நிகழ்வுகள்’ எனப் பல நிகழ்ச்சிகளை நடாத்தி வந்துள்ளோம்! ‘சுழற்சித் தலைமை’ மூலமாக… ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒவ்வொருவர் தலைமையேற்றுப் பொறுப்பேற்று நடத்தக்கூடிய ஒரு நிலைப்பாட்டை ஓர் ஒழுங்கமைவினை நாம் ஏற்றுக்கொண்டு இயங்கும் வாய்ப்புகள் உருவாகின!
தன்னகத்தே பற்பல துறைகளில்.. ஆழ்ந்த அனுபவமும் நீண்டகாலப் பணித்திறனும்..பன்முக ஆற்றல்களும் கொண்ட தமிழுள்ளங்களைக் கொண்டு தன்னை விரிவுபடுத்திவருகின்ற எமது தமிழவையின் தொண்டுகள் தொடரவேண்டுமென்ற பேராவலும் பெருவிருப்பும் என்னுள் என்றும் சுடர்விட்டுக்கொண்டேயிருக்குமென நான் பூரணமாக நம்புகின்றேன்! பராசகஜதியை வேண்டுகின்றேன்!
இவையைல்லாவற்றையும் நினைவேந்தி நெகிழவும் மகிழவும் எமக்கான ஓர் அரியவாய்ப்பாகவே… எமது வெள்ளிவிழாவானது ஒரு மகிழ்ச்சிப் பெருவிழாவாக மலருமென நம்புகின்றேன்!
இந்த இனியநாள் சிறப்புற நடந்தேற.. எல்லாம்வல்லஅன்னைபராசக்தியின் பாதாரவிந்தங்களை நெஞ்சிருத்தி.. இவ்விழாவின் வெற்றி நோக்கி.. விழிகளில் ஒளியோடு பழுக்கள் சுமந்து.. பணியாற்றும் என்னினிய தம்பி தங்கைகளுக்கு எனது அன்புரிமைகலந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் வழங்கி.. அமைகின்றேன்!
‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!
அன்புடன்
தங்கள் நல்லுறவு நாடும்
புலவர் நல்லதம்பி சிவநாதன்
நிறுவனர் காப்பாளர்
தமிழவை
Nallathamby Sivanathan
BSc. Civil Eng. FCIOB FaPS FCABE C Build Eng. TechIOSH AssocRICS
Senior H&S/CDM Consultant
35. தமிழவையின் ஆலோசகர் ‘சைவஞான வித்தகர்’ சூ யோ பற்றிமாகரன் அவர்களின் அணிந்துரை
தமிழவை என்னும் புனிதப் பேரவை
தாயக தேசிய தெய்வ உணர்வு உலகில் பெருக்கும் தமிழர் பேரவை
சைவஞான வித்தகர் சூ.யோ. பற்றிமாகரன்
மகாகவி நல்லதம்பி சிவநாதன் உடன் பிறவா அன்புத் தம்பி
1985ம் ஆண்டில் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பங்கய மணாளன் என்ற முப்பத்தொரு வயது இளங்கவிஞர் “நாவதனை வெட்டியதைச் சமைத்திட்டாலும் – நா தமிழனெ;றே கூறிச் சாகும்” எனத் தமிழ் உணர்ச்சிக் கொண்டு, மண்ணினதும் மக்களதும் நிலை கண்டு நெஞ்சத்தால் குமுறிக் “குமுறல்” என்ற 106 பக்கக் கவிதைத் தொகுப்பினைப் படைத்தளித்தார்..
அந்த ‘குமுறல்’ கவிதைத் தொகுதிக்குப் பங்கய மணாளன் தானே அமைத்துத் தந்த நுழைவாயிலில் “இனக்கொலை, அடக்குமுறை கொடுமை கண்டு கொதித்து வரும் கவிதைகளே எனது பாணி” என்று தன் கவிதை நடைத் தன்மை என்னவெனவும் தானே சொன்னார்.
“பிணக்குவியல் தாய் மண்ணை நனைக்கும் செந்நீர் கண்ணீரே என் கவிதைக்கு எதுகை மோனை” என்று நூலுக்கான கவிதா இலக்கணப் போக்கையும் அவரே கட்டுரைத்தார்.
குமுறல் கவிதைத் தொகுப்பு “திருப்புமுனையிதுதான் திருந்து முனையிதுNவு! உருப்படியாய் ஒன்றாய்த் திரண்டிடுவோமென்றால் உருப்படுவோம், உயர்ந்த சந்ததியைப் படைப்போம்!” என்று ஈழத்தமிழர் தேசமாய் எழுந்து தங்கள் விடுதலைக்காகக் ‘கடைக்குருதிவரையிற் கடுஞ்சமர் புரிந்திட அழைத்தது. அந்தப் பங்கயமணாளன் அன்று முதல் இன்று வரை 39 ஆண்டுகள் அதே நோக்குடன் பாட்டுத்திறத்தாலே ஈழத்தமிழர் நாட்டு விடுதலைக்காய் அயராது உழைத்து வருகின்றார்.
ஆம்!. அந்தப் பங்கயமணாளன்தான் எங்கள் முன் இலண்டனிலிருந்து “கவிதாப்பேரொளி” எனத் தமிழகமும் போற்ற உலகத் தமிழ் மகாகவியாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்களின் இளைய மகன் பொறியியல் அறிவுரைஞர் நல்லதம்பி சிவநாதன் அவர்கள்.
“உலக நலத்தில் தன் நலத்தையும், உலகப் பெருஞ்சாலையில் தன் பயணத்தையும், உலக வாழ்க்கையில் தன் மக்கள் வாழ்க்கை நிறைவினயும் அறிய வல்லவனே பாவலன். பகைவரின் மனவிருள் நீக்கி அறிவொளி தோன்றவும், பாழ்பட்டு நின்று பரிதவிக்கும் மேலான மக்கள் போராட்டம் வெற்றிக்கொடி ஏந்தவும், மேலான மக்கள் வாழ்வு விடுதலை பெறவும், பங்கயமணாளன் பாடல்கள் கைகொடுக்கும் என்பது முக்காலும் உறுதி உறுதி” என்பது குமுறல் நூலுக்கு த.கோவேந்தன் “ஒரு பாவலனின் குமுறல்” என்ற தலைப்பில் அளித்த அணிந்துரையில் கூறினார்.
புலவர் ந. சிவநாதன் அவர்கள் 29.03. 1992 இல்; தனது குமுறல் நூலின் முன் பக்கத்திலே “ அன்புச் சகோதரன் பற்றிமாகரனுக்கு – அன்புடன், பங்கயமணாளன்” என்று தன் கைபட எழுதி என்னையும் தன் தம்பியருள் ஒருவராக்கி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. அன்று முதல் இன்று வரை ‘டே; என்று என்னை அழைத்து அன்புரிமை கொண்டாடுவதில் சிறிதளவும் மாற்றம் இல்லாத தொடர்பறாத நீண்ட பயணத்தைக் கொண்ட நட்பு புலவரின் நட்பு. இதனைப் பகிர்கையில் குமுறல் நூலில் அவரின் ஆரம்பகாலக் கவிதைகள் வெளிவருவதற்கு முன்னமே தான் “பயணம்” என்ற கவிதையைத்தான் தனது முதற்கவிதையாக எழுதியதாகவும் அது ஈழத்தமிழினத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திய கவிதாப்படைப்பு என்றும் கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த நினைவு புலவரின் உள்ளம் என்றும் தொடரும் நட்புப் பயணத்தைக் கொண்டது ஆதலால் எங்கள் நட்பு காலங்களைக் கடந்து தொடரும் என்ற நம்பிக்கை அன்றே வந்தது அது இன்று உண்மையாகி தமிழவையின் வெள்ளிவிழா ஆண்டின் பெருமகிழ்ச்சிப் பெருவிழாவில் மகிழ்ந்து உறவாட வைக்கிறது. இந்த நட்புடை அனைவரையும் தானாகவே கருதி பாசமொழியாம் ஒருமையில் அழைக்கும் உறவுப்பண்பாடு புலவரின் உரிமைப்பண்பாடாக உள்ளது. இன்றைய உலகின் தூக்கி வீசும் பண்பாட்டின் வார்த்தை ஜாலமான போலியான மரியாதைப்பன்மை வெறும் முகத்துதியாக அமையும் சமகாலத்தில் தொன்மைப் பண்பாட்டின் அன்பின் ஆழத்தை உள்ளங்கள் ஒன்றாகும் உள்ளப் பிணைப்பின் அமுதசுகத்தின் ஆனந்தப் பெருக்கின் உணர்ச்சித் துள்ளலை புலவரின் உறவாடலிலேயே கண்டு அனுபவிக்க முடிகிறது. இதற்கு தமிழவை வெள்ளிவிழாவைத் தங்களின் வீட்டு விழாவாகவே கூடி நிற்கும் இந்த நட்பாளர் வட்டமும் சான்றுபகர்கின்றது.
புலவரை எங்கு முதலில் கண்டேனோ அன்றே அவர்க்கு ஆளாகிய வரலாற்றையும் இங்கு எழுதினால்தான் எதனால் புலவர் சிவநாதன் ஈழத்தமிழரின் இதயத்தில் நட்பாளனாகக் கொலுவீற்றிருக்கம் வல்லமை பெற்றார் என்பது தெளிவாகும். 1991இலே வோல்தம் பொரஸ்ட் வில்லியம் மொரிஸ் சமுக மண்டபத்திலே “ நம்நாடு” என்ற புலவர் சிவநாதனின் கலை இலக்கியப் பண்பாட்டு மாதஇதழைக் கையில் தந்து என்னுடைய யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரிய கலாத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர் தலைவர் அன்புடை சூசைப்பிள்ளை ரூபேர்ட் அவர்கள் புலவர் அவர்களை முதன்முதலில் அறிமுகம் செய்தார். அப்பொழுது அந்த நம்நாடு இதழின் அட்டைப்படத்தில் ‘தட்டேந்தி நின்ற’ஈழத்தமிழ்ச்சிறுமி ஒருத்தியின் இதய அழைப்பாக புலவர் அதில் எழுதியிருந்த கவிதாவரிகள்,
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
என்ற வள்ளுவர் குறளுக்கு உதாரணமாக எங்கள் இதயங்களை ஒத்த உணர்;ச்சிப் பெருக்கில் இறுகப் பிணைத்தன – தோளைத் தோளோடு இறுகக் கைகள் அணைந்தன. அன்றைய நிகழ்வில் அடுத்து 1990 களில் இலண்டன எழுச்சி விழாக்களில் மாவீரர் வணக்கப் பாடலாகப் பாடப்பெற புலவரின் “வீர விளக்கேற்றி வைத்து … விடுதலைக்கு ஊற்றுவைத்துத் .. தூரவழி செல்கின்ற தோழர்களே! – அந்த நேரம் வரும்போது ஒரு நீதி வெல்லும் – எங்கள் நாளையுகம் வரலாற்றின் பெருமை கொள்ளும்!” என்ற பாடல் பாடப்பெற்ற பொழுது ஈழத் தேசிய விடுதலைப் போராட்டக் கவிஞன் ஒருவனின் தோள் தொட்ட மகிழ்வில் உள்ளம் துள்ளியது. அன்று முதல் இன்று வரை விட்டுப் பிரியா உறவாக 33 ஆண்டானாலும் புலவரண்ணா என்றாலே உள்ளம் விடுதலைக் கூத்தாடுவதால்தான் என்னை அறியாமலே அவருடைய சந்திப்புக்களில் நான் விடுதலை வேகம் கொண்டு பேசுகின்ற தன்மை தொடர்கிறது. இதே நிலைதான் தாயகப் பற்றும் தமிழ்மொழிப் பற்றும் மானிட விடுதலை நோக்கும் உள்ள புலவரின் நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாரதி விடுதலைக்காகக் பொட்டல் காட்டுப் பொந்தில் வைத்த அக்கினிக் குஞ்சு மனிதவடிவாகி வட்டுக்கோட்டையில் உயிர் பெற்றெழுந்து இலண்டனில் அன்பு உறவாடும் உருவாகவே மகாகவி ந. சிவநாதன ஆகி நிற்கின்றது; என்பதறிவர். பார்வையிலே வீரமிடுக்கு பழக்கத்திலே குழந்தைச் சிரிப்பு மட்டுமல்ல “அன்பால் குழந்தை அடிக்கிறது, தடவிப்பார்த்தால் இனிக்கிறது” என்ற கண்ணதாசன் கவி வரிகள் புலவருக்கும் அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் என்பது வாழ்க்கை அனுபவம். அன்பைப் பொழிகையில் சின்னக் குழந்தையின் பாசப்பொழிவு தரும் அற்புதம் – சிறு ஏமாற்றமும் தாங்காது குழறிய அழும் குழந்தை உள்ளமாகவும் சிறிது காலத்தில் அதை மறந்து கட்டியணைத்து முத்தமிடும் மாறாநட்பு உள்ளமாகவும் வாழ்நாள் எல்லாம் மாறாதிருப்பதுடன் மனதுக்கண் மாசில்லா மனித மனம் புலவரின் அன்பு மனம் என்பதை அனைவரும் ஏற்பர். உறவு மறுக்கப்படுகிறது எனக் கண்டால் அவரின் மொழியில் மறச்சீற்றம் கொண்டெழும் அதே புலவரின் உள்ளம்தான் உண்மையை உரைக்கையில் எஃகு அணைய இதய உறுதியுடன் கவிமொழி பேசும். இதுவே அவரின் தேசம் தேசியம் தெய்வம் எமைக்காத்திடும் உள்ளத்தரண்கள் என்று அவரின் தேசப்; பணிகளின் தமிழ்ப் பணிகளின் மக்கட் பணிகளின் வேராக இருந்து வருகிறது. ஐம்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த தேசம் தேசியம் தெய்வ முன்னுரிமையின் வழியிலேயே தமிழரின் விழ விழ எழும் உள்ள உறுதியின் ஊற்றாகப் புலவரின் படைப்புக்களில் வெளிவந்தது. அவரின் நல்லாக்கக் கனவின் கட்புல வடிவாக” ஆன்Nறூர் அறிவும் சான்றோர் சால்பும் தோன்றாத்துணையாய்க் கொண்டது அவையே” என்ற உறுதியிருந்ததையே அதுவே தமிழவை என்று மக்கள் திரள்வடிவொன்றை மண்ணில் அவர் 1999இல் தோற்றவிக்க இறைசித்தம் கைகூடச் செய்தது.
அதுவும் நான் வாழும் ஒக்ஸ்வேர்ட் நகரின் கிரைஸ்ட் சேர்ச் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள தேம்ஸ் நதித்தீரத்துப் பசும்புற்றரையில் இருந்துதான் தமிழவை அமைப்பு விதிகளை எழுதி புலவர் ந. சிவநாதன் தமிழவையைக் கட்டமைத்தார். அப்பாழுது இதே பசும்புல்தரையில் இதே இடத்தில்தான் உலகின் பாராளுமன்ற முறைமையை கிரைஸ்சேர்ச் பல்கலைக்கழகத்தின் அன்றையப் போரசிரியர் டாக்டர் யோண் லொக் மக்களாட்சிக்கான உயிர்ப்பாக உருவாக்கினார் என்ற எண்ணம் நெஞ்சில் எழுந்த பொழுது தமிழவையும் தமிழரின் மக்கள் ஆட்சி மண் மீதில் உயிர்ப்புப் பெறுவதற்கான இறையாற்றலாகப் புலவரின் மொழியில் கூறினால் ஆதிபராசத்தியின் ஆற்றல் பெருக்காக பிறப்பெடுக்கிறது என்ற எண்ணம் வந்தது. தமிழவை என்ற பெயர் தமிழ்ஞான சம்பந்தராகத் தன்னை முன்னிலைப்படுத்திய திருஞானசம்பந்த சுவாமிகள் வடிவமைத்த சொல். “எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்” எனத் தம்pழ்ஞானசம்பந்தர் திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய திருப்பதிகத்தில் தனது மொழி இறைமொழியே என எடுத்துரைத்த பின்னணியில் “பண்ணும் பதம் ஏழும் பல ஓசைத் தமிழவையும் உள்நின்றதொர் சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் ” எனத் தனது திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் “தமிழவை” என்ற சொல்லாட்சியை வடிவமைத்தார். “தமிழவை என்றாலே இசைத்தமிழும் இயல்தமிழும் நாடகத்தமிழும் ஒக்களித்து நடம்புரியும் தமிழ் மன்றம் என்ற விளக்கத்தினை அத் தேவாரம் தெளிவாக்கியது. பாடி ஆடிக் கூடிக் குதூகலித்து ஒக்களித்து மகிழ்வதுதான் தமிழவை. அத்துடன் கலைஞானசம்பந்தன் தமிழவை ஒக்களிப்புக் கேட்டோர் “ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே” என இந்தத் திருவீழிமிழலைத் திருக்டைக்காப்பை அமைத்ததினால் தான் தனது முதல் தேவாரத்தின் திருக்கடைக்காப்பில் “ திருநெறிய தமிழ் வல்லார் தொல்வினைகள் தீர்த்தல் எளிதாமே” எனப்பாடி விதி வெல்லும் சத்தியாகத் தமிழை வாழ்வை முன்னிறுத்திய பின்னணியில் தமிழவையாகத் தமிழர் கூடிடும் பொழுது அந்தத் தமிழவை விதி வெல்லும் ஆற்றல் தரும் புனிதப் பேரவையாகத் துணைசெய்யுமென்று தமிழவையைச் சேக்கிழர் பெருமானின் புனிதப்பேரவை கடவுளடியார்கள் என்ற கருத்துடன் ஒப்பீடு செய்ய முடிகிறது. . இவருக்கு முன்னரே திருநாவுக்கரசர் தமிழோடிசை பாடல் மறந்தறியார் “அஞ்சுவ யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” ஆதலால் “நாமார்க்குங் குடியல்லோம் – நமனையஞ்சோம்” என்று மரணமற்ற மனித குலத்தவராகிய தமிழராகிய நாம் “நாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழையோர்காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்” வாழ்வோம் எனத் தெய்வத்தை நாளாந்த வாழ்வில் முன்னிலைப்படுத்தினார் இந்த தமிழர் மரபில் எந்நாளும் தமிழவையின் தலைமை தெய்வமே என்பது புலவர் சிவநாதனின் சிந்தனைத் தெளிவுமாகும். அதனாலேயே தேசம் தேசியம் தெய்வம் போற்றலும் பேண உழைத்தலும் இலண்டன் தமிழவையினர் நோக்கு என்று புலவர் தெளிந்துரைத்தார். நின்ற சொல்லராகத் தமிழவை உறுப்பினர் போக்கு அமைந்திடப் புலவர் என்றும் ஆசிக்கிறார். தமிழவையின் உறுப்புரிமைப் பயனாக அன்பே தமிழ் அதிலே அமிழ் என்ற தெய்வ வாக்கின் வாழ்வாகத் தமிழவை உறுப்பினர் வாழ்வு அமைந்திட வேண்டும் என்பது அவர் எண்ணம். இந்த அன்பே தமிழ் அதிலே அமிழ் என்ற தமிழவையின் வாழ்வியல் அழைப்பும் ஒரு வான்வழி அசரீரி வாக்குத்தான். ஆம்! நான் மகாகவி சேக்ஸ்பியரின் 200 வது ஆண்டை முன்னிட்டு தமிழ்மகாகவிகளின் மாநாடு ஒன்றை இலண்டனில் தமிழவையடனும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளர். சொர்ணமலர் முருகையா அவர்களுடனும் இணைந்து நடாத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென தெய்வாதீனமாக ஒக்ஸ்வேர்ட்டில் எங்கள் வீட்டில் “அன்பே தமிழ் அதிலே அமிழ்” என்றுதான் இனித் தமிழவை பயணிக்க வேண்டுமென்றார். இவைகளை எல்லாம் எடுத்து நோக்குகையில் இன்று புலவர் அண்ணா ந. சிவநாதனை நிறுவனராகவும் இலண்டன் பெருங் கவிஞர் பாலரவி அவர்களைத் தலைவராகவும் கொண்டிலங்கும் தமிழவை தெய்வத்தின் சித்தம். தமிழவையின் உறுப்புரிமை தெய்வத்தின் அழைப்பு. தமிழவையில் உண்மையும் நேர்மையுமாகச் செயற்படுவதன் பயன் தெய்வதரிசனம். இந்தத் தமிழவை புனிதப்பேரவையாகத் தாயகமும் தமிழகமும் மட்டுமல்ல அனைத்துலகும்; தாயக தேசிய தெய்வம் என்ற உணர்வில் சிறந்திட இறைவனிலும் மனித சமத்துவ சகோதரத்திலும் நிலைத்து நின்று “அன்பே தமிழ் அதிலே அமிழ்” என அன்புப்பணிபுரிந்து உலகில் பாதுகாப்பும் அமைதியும் வளர்ச்சிகளும் சிறக்க உலகு உள்ளவரை அரும்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் திருவருளை இன்தமிழால் வேண்டி இதய அன்புடன் எனதும் எனது மனைவி முனைவர் றீற்றா பற்றிமாகரனதும் தமிழவைக்கான வெள்ளி விழா வாழ்த்தினைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

