நவீன யமன் தர்பார்: ‘காலதேவனின் சட்ட சபையில்’
‘வாசாப்பு’ இசைநாடக மரபினையும் நாட்டுக்கூத்து மரபினையும் இணைத்த இந்த அரங்க நாடகப் படைப்பு…
1980-90களில் எமது தாயக மக்களின் விடுதலை வேட்கையினையும் அவர்கள் வடித்த கண்ணீரையும் செந்நீரையும் பிரிதிபலிக்கின்ற ஓர் அரங்கப் படைப்பாக்கமாக வல்தம்ஸ்ரோ தமிழ்ப்பாடசாலை மழலைகட்காகப் புலவர் சிவநாதனால் எழுதப் பெற்று.. நெறியாள்கை செய்யப்பெற்று… அரங்கேற்றம் கண்டுள்ளது!
யமன் சித்திரகுப்தன் மற்றும் மழுவர்கள் ஆத்மாக்கள் வேடங்களிற் தோன்றிய பாலர்கள்… மிகவும் சிறப்பாக நடித்துப் பலத்த பாராட்டினைப் பெற்றனர்!
நண்பர்கள் சாந்திகுமார் சிறீபாலன் ஆகியோரது மைந்தர்களே யமன் வேடந்தாங்கி நடித்தனர்!
பின்னர் சிறீபாலனின் மகன் அவுஸ்திரேலியாவிலும் நடித்து இப்படைப்பினை அரங்கற்றியது பற்றி அறிந்துள்ளேன்! இதன் ஒளிப்பதிவினைக் கூடப் பார்த்ததாக ஞாபகம்! தற்போது எனது கைக்குக் கிடைக்காதது வேதனை!
அதன்பின்னர்.. நவராத்திரியை முன்னிட்டு.. மேலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு ‘காலதேவனின் சட்டசபையில்’ எனும் புதிய தலைப்புடன் அரங்கேறிய இப்படைப்பு.. எமது பாசையூர்ச் சகோதரர்களாலும் நடிக்கப் பெற்று அரங்கேறியுள்ளது!
‘காலதேவனின் சட்டசபையில்’ எனும் இப்படைப்பின் ஒலிப்பதிவு எமது தமிழவையின் ஆவணப்பதிவாக எம்மிடம் உள்ளமை மகிழ்சிசிதரும் ஒரு விடயமாகும்!
மேலும்…
2007இல்.. தமிழவையின் முத்தமிழாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு மீண்டும் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு.. நவீனப் படுத்தப்பட்டு புலவர் சிவநாதன் அவர்களால் எழுதப்பெற்று..நெறியாள்கை செய்யப்பெற்று… றுiளெவழn ஊhரசஉhடைட ர்யடட இல் அரங்கேற்றம் கண்டது! இத்தடவை.. தம்பி உதயணன் யமனாகவும்.. தம்பி பிறிற்றோ சித்திரகுப்பதனாகவும் தோன்றி.. மிக மிகச் சிறப்பாக நடித்துப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்!
தமது ஒப்பற்ற இசை ஈடுபாட்டின் மூலம்.. எமது இசைநாடகங்களுக்கு எப்போதும் உயிரூட்டி உணர்வூட்டி வருபவர்கள்.. சகோதரர் ஜோ வில்சன் இருதயானந்தன்.. தம்பிகள் ரமே~; ஜெயம் தனம் ஆகியோரே!
இப்படைப்பிலிருந்து ஒரு நறுக்குக் காட்சி…05-10-2024 அன்று நிகழ்ந்த தமிழவையின் வெள்ளிவிழா நிகழ்வின் நாடக உலாவிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது! உதயணன் யமனாகவும் மணிவண்ணன சித்திரகுப்தனாகவும் பாத்திரமேற்று நடிக்க.. ரமே~; ஜோ இருதயானங்தன் ஜெயம் தனம் ஆகியோர் பின்னணியிசை பாடல் ஆதரவினை வழங்கிச் சிறப்பித்தனர்!


