கட்டுரைத் தளமும் காலத்தின் தேவையும்:
முத்தமிழின் மூச்சாகவும் மூலவேராகவும் மூத்தகலையாகவும் முப்பாட்டன் சொத்தாகவும் பாட்டாகவும் கூத்தாகவும் பேச்சாகவும் மெய்ப்பாட்டின் வெளி;ப்பாடாகவும் இயங்கவல்ல நாடகத்தமிழையும்…. இந்த உலகப்பரப்பில் நாளை உதயமாகப்போகும் எங்கள் நாளைய சந்ததியையும் இணைக்கும் தலைப்பிலான இக்கட்டுரையை எழுதும் வாய்ப்புக் கிட்டியமை குறித்துப் பெருமகிழ்ச்சியும் இறும்பூதும் எய்துகின்றேன்!
கூத்தும் இசையும் பாட்டும் பனுவலும் பார்த்தும் கேட்டும் பயனுற்ற தொல்குடியின் வாழ்க்கையும் வரலாறும் நேற்றும் இன்றும் போல் நாளையும் தொடர வாய்ப்புண்டா? என்று என்னை யானே கேட்டதன் விளைவே இக் கட்டுரையின் ஊற்றென்பேன்! நாடகத் தமிழையும் தமிழ் நாடக அரங்கினையும் மேனாடுகளில் மேம்படுத்தி மெருகூட்ட யாமெடுக்கவேண்டிய முன்னெடுப்புக்களெவையெவையென எண்ணிப் பார்ர்ப்பதற்கான ஒருவேளையாகவே இதனை யான் கருதி இக்கட்டுரையை யாத்திட விழைகின்றேன்!
எமது பூட்டனும் பாட்டனும் அப்பனும் ஆத்தாளும்… மாற்றங்கள் பலகண்டும் மாறாத மரபுகளைத்…தேட்டமாய் எமது முதுசொமாய்ப்… தமிழர் வரலாற்றின் முதசொத்தாய்ப் போற்றி வளர்த்துக் காத்து எமக்களித்து ஏகினர்! அவற்றை எமது நாளைய சந்ததியின் கரங்களில் ஒப்படைக்கும் பாரிய பொறுப்பிற்குப் பாத்திரமாகி நிற்பவர்கள் யாம் எனில் அதுமிகையாகாது!
‘பதியெழ அறியாப் பழங்குடி மாந்தராய்’ (சிலம்பு) என வாழ்ந்த பெருங்குடி தமிழ்த்தொல்குடி! இன்று தாய்நிலத்தின் மடியிலும் தன்னைத் தக்கவைக்கத் தவமியற்றிக்கொண்டிருப்பது தமிழினத்தின் தலைவிதிபோலும்!! எனினும்… இதேகாலப்பின்னணியில்…எல்லாத் தீமைகளின் மத்தியிலும் ஒருசில நன்மைகளும் விளந்தாற்போல்…… புலம் பெயர்ந்தாலும் உளம் பெயராத உறுதியோடு இன்று உலகத்தமிழர்கள் தமது உயிரிற் தாய்த்தமிழையேந்தியவாறு…தரண்pஙெ;கும் உலவி வருவதையும் யாரும் மறுப்பதற்கில்லை! நெருப்பினில் உயிர்த்த அக்கினிப் பறவைகளாக…அகிலவெளியில் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்!
தமிழர் தைப்பொங்கல் தினத்தைத் தரணியின் தினமாக மாற்றிக்கொண்டிருக்கிறது உலகத்தமிழினம்! மேதினித் தெருவெங்கும் வாகனத் தேரில் வலம் வருகின்றன தெய்வத்திருவுருவங்கள்! தாயகமொழியைத் தான்வாழுமிடமெல்லாம் ஆசனத்திருத்தி அழகுபார்க்கத் துடிக்கிறான் அகிலத் தமிழன்!
உலகவரலாற்று ஆசிரியர்களால். நேற்று எழுதப்பட்ட வரலாறுகளுக்கெல்லாம் முன்னே… பூகோளப் பரப்பினிற் தோன்றி… அதனை முத்தமிட்ட எம்முன்னோர்… எம்முள் விதைத்துச் சென்ற ஆற்றல்கள் ஆளுமைகள்.. காற்றோடு பறக்காமல்.. ஆற்றோடு மிதந்து எம் அடையாளம் சிதையாமல்…நாளையும் நிலைக்க… உலகத்தமிழர்கள் உயிர்ப்போடும் உணர்வோடும் ஆற்றிவரும் ஆற்றுகைகள்;… வெளிப்பாடுகள் எண்ணிலடங்காதவை!
அரங்கிலும்… அலையிலும்… வானிலும்…வலயத்தளங்களிலும் கலையாய்க் கவிதையாய்.. எழுத்தாய்..ஏடாய்.. இதழாய்…ஒலியாய்.. ஒளியாய்… ஓசையாய்…இயலாய்… இலக்கியமாய் வலம் வருகின்றாள் தமிழ்த்தாய்! ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் பாவரிப் பயன் சொல்லிப் பாரெலாம் பரவிநிற்கிறது உலகத்தமிழினம்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்யும் எங்கள் மானிடக்கவியாம் மகாகவியின் மணிவாசகங்களுக்கு மகுடம் சூட்ட மார்தட்டி நிற்கிறது மேதினிவாழ் தமிழர்கூட்டம்! தமிழ்கற்போமெனத் தம்மையும் இணைத்துக்கொள்ளத் தாவிNhயடி வருகின்றன தரணியின் இனங்கள் பல!
மானிடவிடுதலைக்காக ஊனுயிர் உறவெலாம் தீயினில் அர்;ப்பணிணத்த தேசமாமாந்தரின் ஓசையைப் பதிவுசெய்யும் பாவலரும் நாவலரும் பூமகளின் புத்திரர்களாக ஆங்காங்கே தத்தமது பாதையிற் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள்!
எனினும் ‘தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் இன்னும் செத்துவிடவில்லை’ என்ற சத்திய ஓசை ஆங்காங்கே எழுந்த வண்ணமே இருக்கின்ற அதேசமகாலத்தில்…சமுதாயப்புற்றுநோய்களும்..நம்மைப் பற்றிக்கொண்டு எமது விழுமியங்களுக்குள் விடநீரைப் பாய்ச்சுவதையும் யாம் புறக்கணிப்பதற்கில்லை!
இந்தக்கால ஓட்டத்தின் பாய்ச்சலிற்றான்…எமது கலையும் கவிதையும் இலக்கிய ஈடுபாடுகளும்… வானோங்கச் சங்கநாதம் எழுப்பி… ஒரு சமதர்ம சழுதாயத்தை… உலகசரித்திரம் படைக்கும் நாளைய சந்ததியைப் படைக்கவேண்டியுள்ளதை உலகத்தமிழர்யாம் உணரவேண்டியுள்ளது! இங்குதான் நாடக்த்தமிழின் நர்த்தனம் பற்றி யாம் நயந்துரைக்வேண்டிய தேவை வந்துள்ளது!
இயற்றமிழ் ஆரம்பக்கல்வியுடன் நின்றுவிட.. இசைத்தமிழும்.. நாட்டியத்தமிழும் அரங்கேற்றங்களுடனும் அரங்கங்களுடனும் அடங்கிவிட… தமிழர் வாழ்வியிலை வரலாற்றுப்படுத்தி… வளப்படுத்த வல்ல சக்தி நாடகத்தமிழுக்கேயுண்டு என்பது ஒரு நியாயமான வாதமாகும்!
‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கு’ எனத் தமிழின் பாவளத்தையும் நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் இணைத்தது தொல்காப்பியம்!
‘நாடகம்’ என்பது ஒரு நாட்டினை அகமாகக் கொண்டு… எடுக்கப்புடும் ஒரு குறித்த காலப்புள்ளியில்;;… அதன் அரசியல்…ஆன்மீக…பொருளாதார… சமூக தனிமனிதப் பணபாட்டு வாழ்வியல் இயல்புகளை… இவைசார்ந்து நிகழும் நிகழ்வுகளை.. இவற்றில் தொடர்சிசியாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை…வெற்றி தோல்விகளை… ஏற்ற இறக்கங்களை.. அவற்றினை ஒட்டிய கருப்பொருள்…கற்பனை…கருத்தியல் வாதப்பிரதிவாதங்கள்.. பருப்பொருள்…பாத்திர அமைப்பு…பாத்திர உணர்வு உறவுப் பரிமாற்றங்கள் பகிர்வுகள்.. பாத்திரங்களின் பாவ மெய்ப்பாடுகள் எனும் உபகரண்ங்களின் மூலம்… இவ்வியல்புகளாலும் நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுகின்ற அல்லது பாதிக்கப்படவல்ல பார்வையாளருக்கும் பங்காளிகளுக்கும் ஒரு அரங்கச் சூழலில் ஆற்றுகைப்படுத்துவதற்கான ஒரு சாதனமோ என யான் எண்ணுவதுண்டு! ஒரு மக்களின் காலம் சார்ந்த வழக்கு மொழியினையும் அவர்தம் நம்பிக்கைகள் அன்றாட நடவடிக்கைகள்..அக்கால வாழ்க்கைநிலை…என்ற உள்ளடக்கங்களையும் அணியாக்கி… வரலாற்றுப்பதிவுக்குத் தருகின்ற ஓர் அழகிய கலையாக நாடகக்கலையைக் கருதுவது சாலப்பொருந்து மென யான் எண்ணுகின்றேன்!
நாடகமொழி… ஒரு நாட்டின் மொழி! அந்நாட்டு மக்களின் வீட்டின் மொழி! தோட்டம் துரவுகளில் ஆற்றங்கரைகளிலே… மே;ட்டிலும் பள்ளத்திலும்…கூட்டம் கூட்டமாய் மனிதர்கள் கூடிக்குலவிக் குதூகலித்துக்கொண்டாடுகையில் யாம் கேட்ட மொழி! இன்றும் அவரவர் தாய்நிலங்களிற் கேட்கும் மொழி!
மேற்கத்தைய நாடக மரபுகளிற் கூட பாட்டியலின் பங்கு நிறையவுண்டு என நம்புகின்றேன்! கிரேக்க திறந்த வெளி வட்ட அரங்க நாடக வரலாறாக இருப்பினும் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடக அரங்க வரலாறுகளாளக இருப்பினும் நாடக இலக்கியமென வரும்போது அவற்றின் மூலகர்த்தாக்ளாக யாம் அறியக்கூடியவர்கள் பாட்டியலில் வல்ல புலவோர்கள்..கவிஞர்களாகவே இருந்திருக்கிறார்களெனலாம்!
தொல்காப்பியத்திற்கு முந்திய காலங்களிலும் சரி… அதன் சமகாலத்திலும் சரி… நாட்டின் மொழி மட்டுமன்றி… உலக வழக்கு மொழிகூடப் பாட்டு மொழியாகவே இருந்திருக்வேண்டுமென்பது தொல்காப்பியனது கூற்றுமொழியின் ஊற்றுநெறியாயிற்றுப் போலும்! ஆயிரமாயிரமாண்டுகளாகப் பாடப்பட்டுவந்த… பேணப்பட்டுவந்த.. இலக்கியப் பெட்டகங்கசெல்லாம் சுலோகங்களாகவும்… செய்யுள்களாகவும் வாகடங்களாகவும் இருந்துள்ளமையாலன்றோ பொருள்கூறும் படலங்கள் வரலாற்றில் நுழைந்தனஎன எண்ணத்தூண்டுகிறது!
தெய்வக்கதைகளைப் பாட்டாக்கி ஏட்டுமொழியை… நாவின் ஓசைமொழிவடிவில்.. நாட்டுமொழியாக்கி நயந்தகலைத்துறையே நாடகத்துறையெனவும் கூறமுடிகிறது!
மேற்குலக நாடக வரலாற்றில்.. Pழநவள யுசழைnஇ Pசலniஉhரளஇ ளூயமநளிநயச போன்ற புலவோரை எம்மாற்காணமுடிகிறது!
தமிழகத்தைப்பொறுத்வரை… தமிழ்நாடக அரங்கவரலாற்றை எடுத்தால்… ‘ராம நாடகம்- அருணாசலக்கவி’… ‘நந்தனார் சரிதம்- கோபாலகிருட்டினபாரதியார்’.. ‘அழகர் குறவஞ்சி- கவிகுஞ்சலபாரதி’… குற்றாலக்குறவஞ்சி-திரிகூடராசப்பகவிராயர்’…என இங்கும் நாடக அரங்கில் தமிழ்மொழியின் ஓசைவளமும் சந்தவளமுமே ஓங்கி நின்றுளளதை எம்மால் எறுதி செய்யமுடிகிறது!
இதன் மத்தியில்.. கூத்து மேடைகளிலும் கூத்திசை நாடக மேடைகளிலும் புலவோரின் பாட்டுத் தமிழே பவனிவந்ததென்றால் அதனை மறுப்போரிருக்கமாட்டார்கள்!
பின்னர் வந்த டீ கே எஸ் சகோரர்கள்.. அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி போன்றோரும் நடிகர் திலகம் சிவாஜி… மக்கள்திலகம் எம்ஜி ஆர்.. பெருநடிகர் மனோகர் போன்றோரும் தமது மொழியோசை… நவோசையாலேயே நாடக அரங்குகளையும் திசையரங்குகளையும் அதிரவைத்தனர் என்றால் அதுமிiயாகாது!
எனவே ஒரு மொழியின ஆற்றலை வெளிப்படுத்தவல்ல… அதன் ஆழ அகலங்களை… ஊடுருவ வல்ல… அம்அமதழிக்கான ஏட்டு இலக்கியங்கள்pல் ஊற்றெடுக்கும் உணர்வலைகளையும் அதிர்வலைகளையும் பிரவாகமாக எடுத்துவந்து நுகர்வோரின் நாடி நரம்புகளைச் சென்றடையச்செய்து.. அவர்தம் மனமாற்றங்களை… சிநதனைத் திருப்பங்களை ஏற்படுத்தவல்ல.. ஆற்றலும் சக்தியும்… நாடக அரங்கிறகு உண்டென்பதை யாரும் மறுத்துவிடமுடியாது1 இதனைக் கிரேக்க நாகரீகம் நிறைய நம்பியுள்ளதாக எம்மால் அறியமுடிகின்றது! கிரேக்கர்களைப் பொறுத்தவரையில்..அவர்கள்.. ழுசஉhநளவசய எனப்பட்ட எமது வட்டக்களிரியை ஒத்த நாடக அரங்குகளில் முகமூடிகளணிந்து நடித்த நடிகர்களின் நாவில் எழுந்த மொழியலைகளின் வேகத்தையும் வீச்சையுமே தமது அரசியல் சமுக விழப்புணர்வுகட்கான ஆயதமாக எடுத்தனர் என்பதை யாம் அறியமுடிகின்றது! எமது தமிழ் மரபுகளில் யாம் நம்புகின்ற மெய்ப்பாட்டு வெளிப்பாடுகளைவிட மொழியுணர்வு வெளிப்பாட்டினையே கிரேக்கர்கள நம்பியுள்ளார்களெனக்குரதவேண்டியுள்ளது1
இவ்விடத்தில் இன்னுமொரு சுவையான செய்தியை இங்கு குறிப்பிடுவது நலமென யான் நம்புகின்றேன்! உலக வழக்கினையும் உறுதியாகக் குறிப்பிடக்கூடிய உலக அறிவும் உலகத்தொடர்பும் எமது முன்னோர்க்கு அன்றே இருந்துள்ளதென்பதை நாம் அவதானிக்கவேண்டியுள்ளது!
எனவே நாடக மொழியென்று வரும்போது… ஒருநாட்டின் வழக்குமொழியை உள்வாங்கி அதற்குரிய ஓசைவலுவேற்றி… தேவையொன்று அன்றும் இருந்திருக்கின்றது1 இன்றும் அது தேவைப்படுகிறது எனறே நம்பவேண்டீயள்ளது!
இதேவேளை…ஓரினத்தின் அடையாளத்தை… அதனது அகத்தை…பண்பாட்டு வளத்தை… வரலாற்றுப் பலத்தை வெளிப்படுத்தவல்ல…கவியழகும் கருத்தழகும் மொழியுரையழகும் கலையழகும் நிறைந்த நாடகப் படைப்புக்களைப் படைக்கவேண்டிய அவசியத்தையும் யாம் புறக்கணித்து விடமுடியாது! குறிப்பாக தமிழர்களாகிய எமது வரலாற்றையும் வாழ்வியல் விழுமியங்களையும் அடிச்சுவடே தெரியாமல் அழித்துவிடலாமெனக் கங்கணம்கட்டி நிறகின்ற ஒரு சோதனைமிகு கால கட்டத்தில்… எமது நாடக அரங்க ஆற்றுகைகள் முற்றுமுழுதான அடையாள அழிப்பைநோக்கிப் பயணிக்கும் நிலையை யாம் வரவேற்றுவிடமுடியாது! சமகாலத்தையும் வரலாற்றையும் சமநிலைப்படுத்திய ஒரு தமிழ் நாடக அரங்கினை யாம் கட்டியெழுப்வேண்டிய கட்டாயம் எம்முன் விரிந்துள்ளதை ஈண்டு குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது!
மேலும் தமிழ் நாடகத்திற்கான ஒரு புராதன வரலாறு நிச்சயமுண்டு என்பதில் எனக்கு எதுவித ஐயப்பாடுமில்லை! மேலைத்தேய நாடக அரங்க எழுச்சிகளுக்கு முன்னதான ஒருவரலாற்றுத் தடம் தமிழ்நாடக வரலூற்றுக்கு இருந்திருக்குமென்பதும்…முக்கடற்கோள்களாலும்.. முன் நிகழ்ந்த அந்நிய ஆக்கிரமிப்புகளாலும் தடங்களும் தடயங்களும் உலகப்பார்வையிலிருந்து பறிக்கப்பட்டன என்பதும் எனது உறுதியான நிலைப்பாடாகும்!
எனது பள்ளிக் காலத்தில்.. தமிழ்ப்பேரறிஞர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின் உரைகளைக் கேட்டிருக்கின்றேன்! ஒருமுறை அவர் தமிழ் நாடக வரலாறு பற்றிப் பேசியதைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது! நாட்டிய நன்னூல் எனறு சிலம்பு குறிப்பதுபோல நாடகக் காப்பிய நூல் பற்றியும் தமிழ் நாடகம் பற்றிய செய்திகள் பல பண்டைய நூல்களிற் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டது போல இன்றும் எனது செவிகளில் மிகவும் மெல்லிய ஓசையில்..ஒலித்துக்கொணடிருக்கின்றது! இதுபற்றி ஆய்வுகள் செய்யவேண்டுமென விருப்பும் வேணவாவும் இருந்தும் அதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை! தமிழறிஞர் பேராசிரியர் அமரர் க சிவத்தம்பி அவர்கள் தமிழ் நாடகங்கள் பற்றி எழுதியுள்ளதை அறிவோம்! எனினும் அவருடைய ஆய்வுகளும் மேற்கொண்டு தொடரப்படவில்லையென எண்ணுகின.றேன்!
அண்மையில் அமரத்துவமடைந்த எனது பெருமதிப்பிற்குரிய… தமிழகத்தின் தஞசைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ராமானுஜம் ஐயா அவர்களுடன் அன்புறவுகொண்டிருந்த காலங்களில் இதுபற்றி அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்வில்லை! எனது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் ராமசாமி அவர்களின் தொடர்பு எனக்குண்டு! ‘சென்னையிற் தமிழவை’ எனும் நிழ்வினை.. சென்னை உலகத் தமிழ்மையத் தோழர்களுடனும் மதுரைத் தமிழ்ச்சங்கத் தோழர்களுடனும் இணைந்து சென்னையிலும் மதுரையிலும் எமது இலண்டன் தமிழவை மற்றும் இலண்டன் நர்த்தன கலாலயா நிறுவனத்தினர் நிகழ்த்தினோம்! இவ்வேளை அந்நிகழ்வின்போது… கூத்துப்பட்டறை முத்துசாமி அவர்களையும் தமிழ்நாடகத்துறை வு.ளு. ராமகிருட்ணன் அவர்களையும்… எனது அன்புச் சோதரர் கவிஞர் தங்ககாமரஜ் அவர்கள் மூலம்…; சந்தித்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது! எனினும் இவர்களோடு கூடத் தமிழ்நாடக வரலாறுபற்றி விரிவாகப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை!
எமது தாயகங்களில்…தமிழ் நாடக உலகில்… பற்பல ஆற்றுகையாளர்களும் இயக்குநர்களும் தோன்றி வாழ்ந்து தத்தம் ஆற்றல்களையும் ஆளுமைகளையும் பதிவுசெய்துள்ளார்கள்!
ஆரம்ப காலங்களில்… தமிழ்ப் புலமைத்துவமே…தமிழ்நாடகஉலகின்.. ஊற்றுச் சக்தியாகயும் உந்து விசையாகவும் உயிரோட்டாகவும் இருந்துள்ளதென்பதில் யாருக்கும் மாறான கருத்து இருக்குமென யான் கருதவில்லை! கூத்து நாட்டியம் இசை இவற்றை வழிநடத்தும் அடிநாதமாகச் செய்யுள் மரபும் சந்தப்பா மரபுமே இருந்திருக்கவேண்டும்! இதன்காரணமாகவே தொல்காப்பியத்தின் ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கு’ எனும் சூத்திரம் எழுந்தது எனலாம்!
தமிழ் நாடக மரபு என்று பேசத்தொடங்கினாலே புலமைத்துவமும் கவித்துவமும் இதனது தொடக்கப்புள்ளியாகிவிடுகிறது!
‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ என்கிறது பட்டினப்பாலை
பாட்டும் செய்யுளும் அகவலாய் ஒலிக்கிறது! பாட்டே கூத்தின் பாணரை இணைக்கிறது1
‘கூத்தாட்டவைக் குழாம்’… வள்ளுவத்தின் குறிப்பு!
கலையும் கவிதையும்.. இலக்கியமும் பண்பாடும்… வரலாறும் வாழ்வியலும் ஓரினத்தின அகம்!
கலையோ இலக்கியத்தின் களம்!
பாட்டும் செய்யுளும் கூத்தின் தளம்!
கூத்தும் இசையும் நாடகத்தின் வளம்!
நாடகமோ நாம் காணும் சமூகத்தின முகம்!
இந்த நாடகத்தமிழையும் தமிழ்நாடகங்களையும் எமது நாளைய சந்ததியிடம் தக்கவைப்பது எப்படி?
இதுவே நம்முன் எழுந்துள்ள நீள்கேள்வி!
இவ்வாறான் ஒரு சூழலிற்றான்…கடந்த அக்டோபர் ஏழாந்திகதியன்று டுழனெழn டுநயவாநசாநயன வுhநயவசந இல் வெற்றிகரமாக நிகழ்ந்தேறிய இரண்டாவது உலகத் தமிழ்நாடக விழாவின் ஆரம்பப் பணிகளின் நிமிர்த்தமும்… நிகழ்ச்சிகளின் ஆற்றுகையாளரின் அறிமுகங்கள் குறித்தும் இலண்டன வந்திருந்த திரு அரியநாயகம் அவாகளின் சந்திப்பு எனக்குக் கிட்டியது!
எனது ஊரான வட்டுக்கோட்டையின் நாட்டுக்கூத்து… மற்றும் எனது கவிதை… இலக்கிய…நாடக… நாட்டிய நாடக்த் துறைகள் சார் அனுபவங்கள் பற்றி என்னையறிந்த பின்னணியோடு என்னை ஐயா அரியசநாயகம் அவர்கள் தொடர்புகொண்டு இலண்டனிற் சந்தித்தார்!
யாம் சந்தித்தோம்! அன்பிற் கட்டுண்டோம்! தமிழ் பற்றியும் தமிழர் சமுதாயம் தமிழ் நாடகம் கூத்துப் பற்றியும் கலந்து சிந்தித்தோம்!
தாயகத்தின் இன்னல்கண்டு எழுதியவர்கள் நாங்கள்! கலைப் படைப்புக்களை ஆக்கியளித்தவர்கள் நாங்கள்! மண்ணையும் மக்களையும் அவர்தம் தாகத்தையும் தவிப்பினையும் வேகத்தினையும் வீச்சினையும் உலகின முன் எடுத்துச் சொல்வதுற்கான ஒருகருவியாகக் கலையினைக் குறிப்பாக நாடக்திதினைக் கைnயிலெடுத்தவர்கள் நாங்கள்!
எனவே ஒத்த எண்ணமும் ஓங்கிய சிந்தனையும் உலகப்பார்வையும் கொண்ட எமது நட்புறவு வேர் விட்டது! அதன் பயனாய் நாடக விழா நோக்கிக் கரங்கோர்த்து நடந்தோம்!
அன்று விழா சிறப்புற நிகழ்ந்தேறியது!
தொடர்ந்து….
விழா மலரிற்கான கட்டுரை எழுதும் பணியை ஐயா அளித்துள்ளார்!
கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகாளாகத் தாயகநிழல்தனைப் பிரிந்து வாழும் புலம்பெயர் வாழ்வியற் சூழலிற் சுற்றிச் சுழன்ற போதும்… தாயகப்பற்றோடும்…தமிழ் மொழி…கலை கவிதை இலக்கியம் தமிழர் பண்பாடு; வரலாற்று ஈர்ப்போடும்..உணர்வோடும்… பொறியியல் சார் கட்டட முகாமைத்துவத் தொழிற்துறை ஈடுபாட்டோடும் தொடர்ச்சியாக இயங்கிவரும் என்னுள் பலகாலங்களாக வியாபித்து விரிந்து நிற்கின்ற நாடகத்தமிழ் பற்றி எழுதும் வாய்ப்பினைத் தந்த திரு அரியநாயகம் ஐயா அவர்களுக்கு எனது நன்றிகளை முதற்கண் தெரிவிக்க விரும்புகின்றேன்!
மேலும் திரு அரியநாயகம் அவர்களின் வழிகாட்டலில்…பிரான்சிலிருந்து வெளியாகிவருகின்ற..‘உடல்’ எனும் அரங்கியலிதழின் பெரும்பணிகுறித்து எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கிமகிழ்கிறேன்! கடந்த ஒருசில வாரங்களிற்கு முன்னர் இலண்டனில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறி;ய.. இரண்டாவது உலகத்தமிழ் நாடக விழாவிற் பங்குகொண்ட அனுபவம் அபரிமிதமானது!
தமிழ் கூத்து…நாடக.. நாட்டிய…நாட்டிய நாடகப்படைப்பாக்கங்களையும்… படைப்பாளர்களையும் ஆற்றுகையாளர்களையும்…நெறியாளர்களையும்..பங்கேற்ற கலைப்பெருமக்களையும் நேரிற்காணும் வாய்ப்பினைப்பெற்றமை எமது நினைவலைகளைப் பசுமைப்படுத்தவல்லது! அதுவும் குறிப்பாக…எமது இளஞ் சந்ததியினரின் கலைத்திறனும் மொழியாளுமையும் அரங்கியல் ஆற்றலும் எமையெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்தின என்றால் அதுமிகையாகாது! ‘வேலு நாச்சியார்’ விழிகளை நனையவைத்தாள்!
இவற்றின் மத்தியில்…கடந்த இருபது ஆண்டுகளாக… இலண்டன் அரங்குகளிலும் வானலையிலும் முத்தமிழாரங்கள் சூட்டிவருகின்ற எமது இலண்டன் தமிழவையின் நாடகத் தயாரிப்பக்களில் ஒன்றான ‘திரிசங்குசொர்க்கம்’ நாடகக்காட்சிகளுக்கான ‘வசன அலைகள்’ அரங்கேறியபோது எழுப்பப்பட்ட கரவோசையும்… அதைத்தொடர்ந்து எமது நாடகக்கலைஞர்;களுக்குக் கிடைத்த பாராட்டுக்களும் எம்மை ஊக்கப்படுத்தின! எமக்கு உற்சாகமளித்தன! எமது படைப்பாக்கத்திற்கும் கலைப்பயணத்திற்கும் உரமளித்தன! கலையுள்ளங்களுக்கு எனது சார்பிலும் எமது கலைஞர்கள் சார்பிலும் எமது நெஞ்சங்கனிந்த நன்றிகள் உரியதாகுக!
இனி என்னைப்பற்றிய ஓர் அறிமுகத்டதுடன் எனது கட்டுரைக்குள் நுழைய விரும்புகின்றேன்!
நாடகத்மிழை இணைக்கும் இக்கட்டுரையை எழுதுவற்கான எனது அனுபவப்பின்னணியைச் சற்று இங்கு குறிப்பிடாது போயின் யாரும் எதையும் எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணப்பாட்டை எம்மையறியாமலே ஊக்குவித்து விடமுடியும்!
‘இயல்வது கரவேல்’ என்பாள் ஒளவை! இதனைத் தான் யான் பணியாற்றும் கட்ட நிர்வாகத்துறையில்…’ஊயியடிடைவைல ளுவயவநஅநவெ’ என்று கூறுகிறார்களென நம்புகின்றேன்!
கட்டுரையாளனின் அறிமுகமும்…‘நாடகத் தமிழ்… தமிழ் நாடக’ அனுபவமும்:
தமது இளவயதிலேயே தாயகத்தைவிட்டுப் புறப்பட்டவர்களுள் யானும் ஒருவனாகையாற் தாயகத்தில் எனது தமிழ்ப்பணிகள் குறிப்பாக நாடகத்துறைசார்ந்த பங்களிப்புகள்..அறியப்பட்டிருக்க நியாமில்லையெனலாம்! தமிழ்ப்பலகலைக்கழக வளாகங்களாலும் தமிழ்த்துநைப் பேராசிரியர்களாலும் ஆசீர்வதிக்ப்படாத கும்பல்கள் குழுக்கள் குழாம்களைச்சேர்ந்த எமது தாயகவாழ்வுக்காலங்களில்.. ஊர்மிய… கிராமியச் சூழலிற் கூத்து…நாடகம்… மற்றும் கூத்திசைநாடகங்களிற்கு ஓரளவு நல்ல வரவேற்பும் வடிகால்களும் இருந்துள்ளன எனலாம்!
திறந்த வெளியரங்குகளில்.. அரங்கேறிய கூத்துக்களையும் நாடகங்ளையும் பார்த்து ரசித்த சந்தiதியயைச் சேர்ந்தவர்கள் நாங்கள்! எனது ஊராம் வட்டுக்கோட்டையின் நாட்டுக்கூத்துக்களையும்…அரங்க நாடகங்களையும்…எமது தாயத்தின் இசைநாடக வேந்தர் நடிகமணி வைரமுத்து அவர்களின் நாடகப் பிரவாகத்தையும்;;;…‘தீர்க்கசுமங்கலி;’ ‘கண்டி அரசன்’ போன்ற பாசையூர் நாடகங்களையும் அயலவர் அரங்கப் படைப்புகளையும் தொடர்சிசியாகப் பார்த்துப் பயனடைந்த கூட்டத்தைச் சேர்ந்தவன் யான்! ‘கே எம் வாசகர்’ ‘மரக்காயர் ராமதாஸ்’ ‘அப்புக்குட்டி ராஜகோபால்’ ‘வரணியூரான்’ ‘அண்ணை ரைற்- பாலச்சந்திரன்’ ‘சக்கடத்தார்’ ‘முகத்தார் வீடு- யோகரட்ணம்’ ‘டிங்கிரி சிவகுரு’ போன்றோரின் நாடக ஆற்றுகைகளையும்… வானலை-அரங்க அளிப்புகளையும்… ‘அடங்காப்பிடாரி’ வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ போன்ற நாடகங்களையும் இலங்கைவானொலியின் நாடகங்களையும பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தவன் யான்!
நாடக்த்துறையில் என்னைப்பற்றிப் பச்சையாகச்சொன்னால்…ஏடறிந்த தமிழ்நாடகப் பேராசிரியர்கள்… தமிழுலகறிந்த…ஏன்…எமது தாயகநாடுகளறிந்த தமிழ்நாடக ஜாம்பவான்கள்… நாடகத்துறைசார் ஊடகவியலாளர்கள்…என.. இவர்களிற்பலருக்கு என்னபை; பற்றியும் எனது கூத்து… நாடக… நாட்டிய நாடகப் படைப்புகள்.. மற்றும் அவைபற்றிய எனது ஈடுபாடுகள் பற்றியும் படைப்புகள் பற்றியும் பெரிய அளவிற் தெரிந்திருக்க நியாயமில்லை என்று துணிவோடு என்னாற் கூறமுடியும்! அதற்கான காரண காரியங்களை ஆராய்வதும் இவைபற்றி அங்கலாய்ப்பதும் ஆவேசப்படுவதும் இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதனை இங்கு குறிப்பிடவிருப்புகின்றேன்!
எனினும் எமது தாயகத்தின் நாடகப் பேராசான் கலையரசு சொர்ணலிங்கம்…தமிழகத்தின் பேராசிரியர் ராமானுஜம்…பேராசிரியர் ராமசாமி.. மற்றும் இன்றும் இலண்டனில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற… நாடக ஆசான் திரு தாசிசியஸ் …மற்றும் நாடக இயக்குநர் நடிகர் பாலேந்திரா நடிகர் இயக்குநர் மனோகரன் போன்றவர்களின் அறிமுகமும் தொடர்பும் எனக்கு ஓரளவு இருந்ததையும் இன்றும் ஒருசிலருடன் இருந்து வருவதையும் யான் மறைத்துவிடுவதற்கில்லை!
மிகவும் உள்ளந்திறந்து உண்மையைச் சொல்வதாக இருந்தால்….தமிழ் மொழி…கலை…கவிதை இலக்கியம் வரலாறு ஆகிய துறைகளோடு மட்டுமன்றி…எனக்கு…நாட்டுக்கூத்து…நாடக…நாட்டிய நாடகத் துறைகளோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு பலகாலமாக இருந்து வருவதை…நம்முட் பலரறிவர் எனநம்புகின்றேன்!
1950 களில்…தாயகத்தில் யான் வாழ்ந்த காலங்களில்…எனது .ஆரம்ப் கல்விக்காலத்தில்….எனது ஊரான வட்டுக்கோட்டையின் பாரம்பரியச்சொத்தாகக் கருதப்பட்ட நாட்டுக்கூத்தின் பரமபக்தனாக இருந்திருக்கிறேன்! எனது பதினான்கு பதினைந்து வயதிலேயே எனது தோழர்களை இணைத்து தருமபுத்திர நாடகம் எனும் நாட்டுக்கூத்தினை அரங்கேற்றிய அனுபவம் எனக்குண்டு!
எனது சிறுவயதில் நான் ஈடுபட்ட மற்றுமொரு கலைவடிவம் கதாப்பிரசங்கம்! அதனைத் தொடர்ந்து நான் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக்கல்லூரியிற் கற்ற காலங்களிற்றான் வில்லுப்பாட்டுடன் நாடகத்துறையிலும் ஈடுபடும் வாயப்பு எனக்குக் கிட்டியதெனலாம்!