உலக அரங்கிற் தமிழ்ச் செவ்வியலிலக்கங்கள் முன்வைக்கும் அறிவு பற்றிய கருத்தியற் கொள்கைகளும் அளிக்கும் வழிகாட்டல்களும்
-புலவர் சிவநாதன் தமிழவை இலண்டன்
(இக்கட்டுரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினரும் செந்தமிழ் அறக்கட்டளையினரும் இணைந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மார்கழி 2017இல் நடாத்திய ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோர்வைக்காக எழுதப்பெற்றது)
முன்னுரை:
இன்று இவ்வுலகம் அறிவியலில் வெகு வேகமாக முன்னேறிச் செல்வதாக நம்முட்பலர் நம்பிவருவதை யாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது! தொடர்ச்சியாகவும் மிகமிக வேகமாகவும் மும்முரமாகவும் வளர்ந்து வீங்கிப் பருத்து வரும் தொழில்நுட்பவியல் எமது இளைய சந்ததியினரை மட்டுமன்றி… மழலைகள் முதல் எம்போன்ற மூத்த… முதிய சந்ததியினரையும் கரையுடைத்தோடும் காட்டாற்று வெள்ள ஓட்டம்போல இழுத்துச் சென்றுகொண்டிருப்பது கண்கூடு!
மொழி கல்வி கலை கவிதை இலக்கிம் பண்பாடு தொழில் வர்த்தகம் வணிகம் சமயம் சமூகம் அரசியல் ஆன்மீகம் என அனைத்துத் துறைகளையும் இன்று நவீன தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது!
எங்குபார்க்கினும்… எத்திசை திரும்பினும் உலகமாந்தரின் கைகளில் ஓர் இன்றிமையாத விரல் வாத்தியமாகக் கைத்தொலைபேசியும் கணனியும் காட்சிதருகின்றன!
‘கற்றது கைஃபோனளவு! கல்லாதது வைஃபை (wifi) அளவு’ எனும் புதிய ஒளவைத்தமிழ் உதயமாகியுள்ளது!
‘கணனிமொழி கற்றானே கற்றான் மற்றெல்லாம்
‘பிணனி’ மொழி பேசத்தகும்’ என்ற புதிய வள்ளுவத் தமிழ் கூட தமிழர் வரலாற்றிற்கு வரவாகியுள்ளது!
எனவே ‘அறிவு’ ‘அறிஞர்’ என்ற சொற்கள் இன்று புதியதொரு பிரமாண்டமான பரிமாணத்தை எட்டியுள்ளன என்றால் அது மிகையாகாது! ‘ஆன்றவிந்தடங்கிய சான்றோர்’ எனும் பதம் மாண்டு மறைந்து செல்கிறது!
தற்காலக் கல்விமுறை கூட.. ஒருபுறப்பொருள் வயப்பட்ட சூழலில்.. கல்வியின் இலக்கும் அறிவுத் தேடலின் நோக்கும் வருமானம் நோக்கிய தரவுசேகரித்தலையும் மனன ஒப்புவிப்புகளையும் பட்டப் படிப்புகளையும் மையப்படுத்தி வருதாகவே எண்ணத்தூண்டுகிறது!
‘மெய்யறிவு’.. ‘மெய்பொருள் காணும் அறிவு’ ‘மெய்யுணர்வு’ ‘மெய்ஞானம்’ ‘அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவு’ ‘சுடர் மிகும் அறிவு’ ‘தன்னறிவு’ என்று அறிவுப்படிகளுக்கு வரம்பமைத்து… ‘அறிவு உணர்வு அனுபவம் அதிர்வு’ எனும் படிநிலைகளிற் பயிலல்.. கற்றல் கற்றுணர்தல் எனும் நிலைகளில் ஆசிரியன் ஆசான் ஆச்சாரியன் குரு எனும் கல்வி கலைக்கான வழிகாட்டல்களை நிறுவிய ஒரு மேன்மையான மானிடத்தை நோக்கிய வாழ்வியலை முற்றுமுழுதாகப்புறக்கணித்து.. அணுயுகத்தை நோக்கி ஆன்றோரும் சான்றோரும் மௌனித்துவிடக்கூடிய அதர்மமும் அநீதியும் தலைவிரித்தாடுகின்ற ஓர் அழிவுப்பாதையிற் சுழன்று பயணிக்கும் ஒரு பூமிப் பந்தில் நாமும் நமது இளைய… சந்ததியினரும் வாழ்வதோடல்லாமல்… எமது நாளைய சந்ததியினரையும் இந்த வாழ்வியலுக்குள் வரவழைத்து நிற்கின்றோமென்பதனையும் நாம் உணரவேண்டிய தேவையொன்று நம்முன்னே விசுவரூபமெடுத்துள்ளது!
பஞ்சம் பசி பட்டினி.. போர்.. அறியாமை… ஏற்றத்தாழ்வுகள் என… இன்றைய அவலங்களுக்கும் ஆபத்தான நிகழ்வுகளுக்கும் அழிவுநோக்கிய நடவடிக்கைகளுக்கும் மூலகாரணம் கல்வி அறிவுபற்றிய உலகின் இன்றைய பார்வையும் இவைபற்றிய நம்பிக்கைக் கோட்பாடுகளுமே என்பதைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் முதன்மையான சொல்நெறியாகும்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தனது தொன்மை வரலாற்றின் அனுபவ ஆளுமையின்வழி கண்டு கற்று உணர்ந்து புரிந்து ஓசைகொடுத்த செம்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கிய இதிகாசங்கள் தமக்குட் தாங்கிய.. உலகப்பண்பாட்டின் உயரிய இலக்கணங்களை… உலக ஒருமைப்பாட்டிற்குரிய அன்பு அறம் சார்ந்த…மற்றும் ஒழுக்கம் பண்பாட்டினை அடித்தளமாகக்கொண்ட கல்வி மற்றும் அறிவுபற்றிய கருத்தியற் கொள்கைகளை….தொட்டுச்செல்வதே கட்டுரையாளன் கைக்கொள்ளும் செல்நெறியாகும்!
‘எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்போருள்
மெய்ப்பொருள் காணபதறிவு’- குறள்- 423
‘எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு’- குறள் -426
‘பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்’- கலித்தொகை
‘பண்புடையார்ப் பட்டுணடு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்’- குறள் – 996
‘தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்றுணர்’- 40- ஒளவையார் நல்வழி
ஒளவை கூறும் ‘ஒருவாசகமே’ää செம்மெழியாம் தமிழ்மொழி காட்டும் அறிவியலின் சாரமாகும்!
இன்றைய உலகில் அறிவும் உணர்வும் அனுபவமும் அதிர்வும்:
இன்றைய மழலைகளின் முதலறிவு கைத்தொலைபேசியிலேயே ஆரம்பிக்கின்றது!
குழந்தைகளின் கைகளிற்குக் கிடைக்கக்கூடிய முதலாவது விளையாட்டுப் பொம்மை… ஒரு கைத்தொலைபேசியாகவோ.. இல்லை கணனயாகவோ தான் இருக்கக் காண்கிறோம்!
ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தனுள்ளே தீபாராதனையின்போதும்… திருமண அக்கினி வலத்தின்போதும்… மரணச்சடங்கின் மத்தியிலும்… ஒப்பாரி வைக்கும் போதும் கூட…கைத்தொலைபேசியின் பிரசன்னத்தை யாம் தரிசிக்காமல் இருக்க முடிவதில்லை!
பாட்டா பாட்டியும் கூடப் பல்துலக்குமுன் WhatsApp பார்த்துவிட்டே தனக்கு முன்னால் விரியும் பாதையைப் பார்க்கும் ஒரு காலம் இது! முகம் பார்த்துப் பேசாத மன்தர்களின் இயக்கமே இன்றைய சமுதாய இயக்கமாகிவிட்டது! Facebook இன் பின்னால் ஒளிந்துகொண்டு விட்ட முகமற்ற மனிதர்களின் பொறுப்பேற்காத தகவல் மாற்றங்களே இன்றைய சமூக உறவு நிலையாகிவருகிறது!
உறவுகள்.. உரையாடல்கள்.. உணர்வுநிலை… மெய்ப்பாட்டு வெளிப்பாடுகளை விட்டு வெகுதூரம் பயிணித்துக்கொண்டிருக்கினறன!
உணர்வுப் பகிரல்.. அனுபவப் பகிரல்.. அருகிக்கோண்டே வருகின்றது!
புறப்பொருள் நோக்கிய இன்றைய அறிவியல் கொலை கொள்ளை வழிப்பறி.. பகற்கொள்ளை… இலஞ்சம் என்ற அறத்திறகும் அன்பிற்கும் முற்றிலும் மாறுபட்ட கொடுநெறிகளில் எமது இளைய சந்ததியினரை வழிநடத்தும் வல்லமைபெற்றதாக ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது!
விலங்கினங்கட்கும் பட்சி பறவைகட்கும் உள்ள அறிவுநிலையை ஆராய்வதில் இன்று மேலைத்தேய உலகம் மிக உறுதியுடன் முயன்றுவருவதையும் அவ் ஆய்வுகள் துலக்கும் இயற்கையின் வியப்புமிகு அந்தரங்கங்களையும் யாம் கண்டும் கேட்டும் வருகினறோம்! ஏன்… தாவரங்கள் புல் ப10ண்டுகள் பூச்சி புழுக்களுக்கள் நுண்கிருமிகளுக்குக் கூட அறிவுநிலையுண்டு என்பதையும் இயற்கை எல்லா உயிர்கட்குமான ‘பிறப்பு பிழைப்பு இறப்பு’ க்கான அறிவுநிலையை அளித்துள்ளது என்பதனையும் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது!
எல்லா உயிர்களுக்கும் தன் தன் இனத்தினைக் கண்டுகொள்ளக்கூடிய ஆற்றலையும் அறிவையும் இயற்கை மிகத் தாராளமாக அளித்துள்ளது!
பாம்புகளும் பட்சிகளும் பறவைகளும் மிருகங்களும் தத்தம் இனத்தோடு ‘கூடல்’செய்து இனப்பெருக்கம் செய்வதறகான அறிவை இயற்கை அவற்றிற்கு வரமாக ஈந்துள்ளது! ஆழக்கடலினுள் ஆயிரமாயிரம் வர்க்கங்களாக உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது! கூட்டம் கூட்டமாக நீந்துகின்ற மீன்கூட்டங்கள் தமது தமது சொந்த வர்க்கத்தினை இனங்கண்டு அவற்றோடு இணைந்துகொண்டு கூடிச்செல்கின்றன என்றால் அந்த அறிவை அவற்றிற்கு இயற்கை வழங்கியுள்ளது என்பது உறுதியாகின்றது!
உயிர் வாழ்வுத் தத்துவத்தை ‘தேடல’; ‘கூடல்’ ‘ஓடல்’என்ற மூன்று சொற்பதங்கட்குள் யான எனது ‘ஆழ்படலுக்குள் ஆருயிர் முன்னோர்’ என்ற ஆய்வு நூலிற் குறிப்பிட்டுள்ளேன்!
தன்னினத்தை இனங்காணவும்.. அவ்ற்றோடு கூடவும்..தன்க்கான பாதுகாப்பினைத் தேடவும் அபாயத்திலிருந்து விலகித் தப்பி ஓடவும.;… உயிரினங்களுக்கெல்லாம் இயற்கை தன்னறிவைக்கொடுத்துள்ளது!
நீர்த்தேக்கம் தேடிப் பெணயானையைத் தொடரும் யானைக் கூட்டத்திற்கும் தேன் சேர்க்கும் தேனீக்கும் கொழுகொம்பினைத் தழுவும் கொடிக்கும் நிரையாகச் சென்று புற்றெழுப்பும் எறும்புக்கும் தன்னறிவைப்படைத்தது இயற்கை!
தாவரங்கள் தாமும் சூரிய ஒளியைநோக்கி நீர்த்துளியூற்று நோக்கிக் கிளை நீட்டி.. வேர் நீட்டி வாழ்க்கை நடத்துவதற்கான தன்னறிவினை இயற்கை தந்துள்ளது
ஆயிரம் மைல்கள் பறந்தும் தன் தாயகம் நோக்கிச் செல்லக்கூடிய வல்லமையைப் பறவைகட்கு இயற்கை தந்துள்ளது! தனது குஞ்சுகளையும் குட்டிகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பண்பாட்டை இயற்கை உயிரினங்களுக்கு அளித்துள்ளது!
தன்னைத்தானே அழித்துக்கொள்ள மதுவருந்தவும் புகைப்பிடிக்கவும் தற்கொலை புரியவும் மனிதனைத்தவிர வேறெந்த உயிரினத்திற்கும் அதன் அறிவு பயன்படுவதாக இல்லை!
இந்த மகா-இயற்கைதந்த தன்னறிவைத்..தன்னுணர்வையே இன்றைய மனித-இனம் இழந்து வருவதுதான் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விடயமாகவுள்ளது! தன்னைத் தானிழந்துவிட்ட தாழ்வுநிலையை இன்றைய அறிவியல் மனிதனுக்குத் தந்து நிற்கிறது!
நேற்றைய எமது தாயகங்களின் வரலாற்றில்.. அந்நிய ஏகாதிபத்தியங்கள்.. அந்நிய ஆக்கிரமிப்புச் சக்திகள் அறிவு புகட்டல் அறியாமையை நீக்கி அறிவொளி பாய்ச்சுதல் எனும் பெயரில் எமது தன்னடையாள உணர்வுகளைத் தகர்த்தெறிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்! மொழி கலை பண்பாட்டு வரலாற்று விழிப்புணர்வுகளை விரட்டியடிக்கின்ற அரசியலை எமக்குக் கற்பித்து நாகரிக வளர்ச்சி என எம்மை நம்பவைத்து…அறிவு வளர்ச்சி எனும் போர்வையில் நமக்குள் அடிமைத்தனத்தையும் அந்நிய மோகத்தையும் பயிர்செய்து எம்மைப் பட்டமரங்களாக்கிப் பரிகாசத்துக்காளாக்கினர்!
அச்சமே எமது அடி மனதில் வித்திடப்பட்டது! அந்த அச்சமே எம்மை நிரந்தர அடிமைகiளாக்கியது! அந்த அச்மே எமது அறிவியலானது! அரசியலான்து! பொதுவுடைமையானது! பொருளியலானது!
பல்கலைகழகக் கல்வியும் எம்மை நிர்வாணிகளாக்குவதற்கே பயன்படுத்தப்பட்டன!
அதேவேலையைத் தான் இன்றும் அறிவியல் எனும் பெயரில் தொழில்நுட்பம் எனும் பெயரில்… இவ்வுலகம் செய்துகொண்டிருக்கின்றது! எமது இல்லங்களுக்குள் நுழைந்து எமது அந்தரங்கங்களை… புனித உணர்வுகளை.. நுண்ணுணர்வுப்பரிமாறல்களை… உறவுப் பிணைப்புக்களை வேவுபார்க்கிறது! குலைந்திடும் குடும்பங்களை.. கூடு விட்டுப் பறக்கும் குழந்தைப் பறவைகளை வேடிக்ககை பார்த்துச் ச்நதைப்படுத்திச் சல்லாபித்து வருகின்றது!
தன்னடையாளத்தை.. தன்னொளியை.. தன்னுணர்வை இழந்து.. தறிகெட்டலைந்து… தகைமையற்ற தலைமைகளை நாடும் புற்றீசல்களைப் படைக்கும் அறிவியலே இன்று தலைதூக்கி நின்று தாண்டவமாடுகின்றது!
இதன்வழிதான் உலக அரசியற்தலைமைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன! அன்பையும் அறத்தையும் அழிக்கும் அணுயுகத்தினை வலுப்படுத்தும் பயணத்தில் இப்பூகோளம் விரைந்து சென்றுகொண்டிருக்கினறது!
இலக்கிய.. ஊடக..படைப்புலகும் கூடப்.. புறப்பொருள் வர்த்தகம் வருமானம் சார்ந்த யுக்திகளையே வளர்ச்சிக்கான.. தக்குநிலைக்கான…தரிசனப்பார்வையாக முன்னெடுத்து வருகின்றன!
ஏன்.. வாசிப்புக் கலை… எழுத்துக் கலை கூட.. மௌ;ள மௌ;ள மங்கி மங்கி வருவதை எம்மால் அவதானிக்கமுடிகிறது!
அதிர்வலைகளைப் புரிந்து கொள்;ளக்கூடிய உய்த்துணர்தலின் முக்கியத்துவத்தை முற்றுமுழுதாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் தலைதூக்கிநிற்கின்றது!
இதன் பின்னணியில்…தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய தன்னறிவே தன்னுணர்வே இன்று இன்றைய அறிவுலகிற்குத் தேவைப்படுவதை உணரமுடிகிறது!
தமிழிலக்கியங்கள் காட்டும் அறிவியலும் தன்னறிவின் தகைமைகளும்
அறிவின் படிநிலைகள:;
அறிவு பற்றிப் பலதளங்களில் நின்று நாம் வரையறைகளை வகுக்க முடியும்!
பொறியின் அறிவு! புலன்களின் அறிவு! மனத்தின் அறிவு! மாயையின் அறிவு! உள்ளத்தின் அறிவு! உயிரின் அறிவு!
திருவள்ளுவர் திருமூலர் திருமுறை நால்வர் சித்தர்கள் மற்றும் ராமகிரு-ணர் விவேகானந்தர் ரமணர் தாகூர் அரவிந்தர் ஆகியோரும்…சோக்கிரட்டீஸ் பிளேட்டோ அரிஸ்ரோட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானியரும் அறிவு பற்றியும் மெய்யறிவு பற்றியும் தத்தமது பார்வைகளையும் பங்களிப்புகளையும் பதிவு செய்து போயுள்ளனர்!
மெய்யறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பலர் பலவிதத்தில் முயன்றுள்ளனர்!
‘Knowledge alone can make us perfect; only knowledge can free and save us’- Swami Vivekananthar
தன்னை உள்நோக்கிய திசையிலான அறிவு… தனக்குட் தோன்றித் தன்னிலிருந்து புறப்புடுகின்ற அறிவு… தன்னுள் ஒளியைத் தோற்றுவிக்கின்ற உள்ளுணர்வின் வழி எழுகின்ற அறிவெனஅறிவை எப்படியெப்படியெல்லாமோ கண்டு சென்றுள்ளனர் எமது முன்னோர்கள்!
பொறி புலன் வழி நமக்குக் கிடைக்கின்ற அனுபவத்தின் வழி கிடைக்கின்ற அறிவு ஒன்று!
மனத்தின் வழி நாம் கண்டு தெரிந்துகொள்கின்ற அறிவு இன்னொன்று!
உள்ளத்தின் உள்ளுணர்வின் வழி நாம் அனுபவிக்கின்ற அறிவு வேறொன்று!
தன்னறிவு என்றும் தன்னுணர்வு என்றும் கருதப்படுகின்ற அறிவு மற்றொன்று!
நாம் கல்வியென்கின்ற போர்வையில் ஈட்டுகின்ற அறிவு பிறிதொன்று!
நாம் செய்திகள் தரவுகள் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள புறச்சாதனங்கள் கருவிகள் மூலம் பெறுகின்ற அறிவு இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓh அறிவு!
இவையெல்லாவற்றிற்குமப்பால்.. எதுவித ஊற்றுக்காரணிகளோ.. அல்லேல் ஊடகமோ இன்றி… அதிர்வலைகள் மூலம் நமது உயிரை வந்து ஊடுருவுகின்ற அறிவுத் தரவுகள் அனுபவங்கள் ஆனN;றாராலும் சான்றோராலும் இனங்காணப்பெற்றுள்ளது! சித்தர்கள் பெற்ற அறிவினைப் பற்றி பேசிட இயலாது!
அறிவு புகட்டுபவனை ஆசான் ஆசிரியன் ஆச்சாரியன் குரு எனும் படிநிலைகளில் வைத்துப் பார்த்த பெருமை தமிழுக்கு உண்டு!
வாழ்வில் நித்திரை நிம்மதி நிறைவு நிதானம் நிதி என… இப் ‘பஞ்ச நி’ களை ஈட்டி இல்லறவாழ்வினை யாத்து வையத்துள் வாழ்வாங்கு வாழும் மெய்யறிவைத்தான் தமிழிலக்கியங்கள் உலகின் மடியில் அரங்கேற்றின எனில் அது மிகையாகாது!
இதற்கான எடுத்துக்காட்டுக்களை எத்தனையோ இலக்கியங்களிலிருந்து நாம் கொண்டுவரமுடியுமெனினும் கட்டுரையின் வரம்புகள் குறித்து சான்றுகள் ஓரிரண்டுடனேயே நிறைவுசெய்ய விழைகின்றது இக் கட்டுரை!
உள்ளுணர்வையும் உலக மேம்பாட்டையும் முன்வைக்கும் தமிழிலக்கிய மரபும் மாண்பும்:
தமிழைக் காக்கும் முருகன் கையில் வேலைக் கொடுத்தது தமிழ்!
குமரன் கைவேல் அறிவின் விளக்கம் என்பார் தமிழைக் கற்றுணர்ந்தோர்;!
கூhந்த நல்ஞானத்தின் ஆழத்தை அகலத்தைக்காட்டிநிற்கிறது செந்திறகுமரன் கைவேல்!
அறிவு கூர்மையாகவும் அகன்றும் ஆழமாகவும் இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த வேல்!
சூரனைச் சங்காரம் செய்த வேலிது! அறியாமையிருளின்.. அகந்தையின் அவதாரமே சூரபத்மனின் தோற்றம்! அவ்வாறாயின் அறியாமை இருளைப்போக்குதலே அறிவின் இலக்கு என்று ஆகின்றது!
புற அறியாமை இருளைப் போக்கவல்ல அறிவு நிலை ஒன்று! அவ்வறிவு உலகமேம்பாட்டினை இலக்காகக் கொண்டது!
கம்பனின் இராம காதையில் வசிட்டர் மூலம் உலகமேப்பாட்டிற்கான அறிவுரைகள் பேசப்படுகின்றன! இளங்கோவின் சிலம்பாரத்தில் அரசியலறம் பேசப்படுகிறது! திருக்குறள் அறிவினையும் மக்கட் பண்பினையும் உலக மேம்மபாட்டையும் தன்னுணர்வையும் மிகமிகத் தெளிவாக விளக்கி நிற்கின்றது!
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்ற கணியன் பூங்கன்றனின உலகப்பார்வையும் தன்னறிவுத் தரிசனமும் ஒப்புவமை கடந்தது! சமத்துவ நெறிக்கு… விடுதலை ஒளிக்கு முத்ததாரம்வைக்கின்றது!
இயற்கையின் அழகினை…அமைப்பினை.. அசைவினை… ஆவர்த்தன இயக்கத்தினை… இணைப்பினை உற்று அவதானித்துத் தமது பாவிலும் பனுவலிலும் உவமைகளாக்கிய பெருமக்கள் எமது முன்னோர்கள்!
திணைக்குரிய உணர்வுகளை… அவ்வவ் நிலத்திற்குரிய இயல்புகளோடு… இணைத்துக்காட்டிய செழுமையும் செம்மையும் சிந்தனைக்குரியவை!
கலித்தொகையும் குறுந்தொகையும் இச்சிறப்பினைத் தாங்கி நின்று எம்மை இறுமாப்படையவைப்பன!
‘செம்புலப்பெயல் நீர்போல’- குறுந்தொகை!
‘கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்’- குறுந்தொகை பா 69
குறிப்பாகத் திருமூலரினதும் பொதுவாகச் சித்தர்களினதும் மற்றும் சங்கப் புலவர்களினதும் அகவியல் அருளியல் அறிவுப் பார்வைகளை விளக்கிட வார்த்தைகளில்லை!
தமிழிலக்கியங்கள் காட்டும் அறிவியற் கோட்பாடுகளை ஓரளவாவது விளங்கிக்கொள்வதற்கு ‘மனம்’… ‘உள்ளம்’…;எண்ணம்’… ‘சிந்தனை’…இச்சொற்களின் பொருளின் ஆழத்தினையும் நீள அகலங்களையும் புரிந்து உணர்ந்து கொளவது அவசியம்!
நம்முட்பலரிடம் மனத்தினையும் உள்ளத்தினையும் எண்ணத்தினையும் சிந்தனையினையும் வேறுபடுத்தும தெளிவு நிலை காணப்படுவதில்லை!
எங்கள் தமிழ்மொழியும் எமது தொன்மையான இலக்கியங்களும் குறிப்பாக எமது பக்தி இலக்கியங்களும் மனம் புத்தி உள்ளம் என்ற சொற்களை மிகவும் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டியுள்ளன!
இவைபற்றிய விளக்கங்களை விரிவுபடுத்த இக்கட்டுரை வரம்புகள் இடங்கொடுக்காது1
மனம் பற்றியும் மனத்தின் ஆற்றல்கள் அவலங்கள் பற்றியும் தமிழிலக்கியங்கள் மிக மிக ஆழமான பதிவுகளைச் செய்துள்ளன!
‘மனத்தின் கண் மாசிலனாதல்’ பற்றிய கருத்தியற்கோட்பாடுகளை விளங்கிக் கொள்ளும் சக்தி பல நாடுகளுக்கு இன்னும் வரவில்லைப் போலிருக்கிறது!
மனத்தினைப் பிசாசாக்கி.. ஆசைக்கதவுகளையும் சாளரங்களையும் அகலத் திறந்துவிட்டு நித்திரை நிம்மதி நிறைவு நிதானத்தைப் பணயம் வைத்து நிதிதேடியலையும் நிர்வாண நிலைக்கு உலகப் பிரஜைகளைத் தூண்டிவிடும் துர்ப்பாக்கிய நிலையிலேயே இன்றைய அறிவியல் கண்ணுங்கருத்துமாக நடைபோட்டுக்கோண்டிருக்கிறது!
மண்ணுலகினை நரகமாக்கி விண்வெளியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகில் மனிதன் மிருகமாகிக்கொண்டிருக்னின்றான்! விலங்குகள் மனிதனுக்குப் பாடங்களைக் கற்பித்துக்கொண்டிருகின்றன!
மனம் பிசாசாகி… உள்ளத்தில் இருள் பரவி… எண்ணம் மெலிந்து… சிந்தனை சிதைந்து மானிடம் மரணித்துவிடுகின்ற அறிவியலுக்கு மருந்து சொல்கின்றது தமிழிலக்கியங்கள்!
உளத்தினிலே ஒளியினைப் பாய்ச்சும் அறிவினையே ‘சுடர் மிகும’; அறிவெனப் பாடினான் எங்கள் மகாகவி!
‘உளத்தினிலே ஒளியுண்டானால் வாக்கினிலும் ஒளியுண்டாகும்’- பாரதி
‘உள்ளத்தனையதுயர்வு’ –வள்ளுவன்
‘உள்ளம் பெருங்கோயில்’- திருமூலன்
‘உள்ளம் பொய்தான் தவிர்ந்து’-திருமுறை
‘அறம் செய விரும்பு’ –ஆத்திசூடி
ஆரம்பக்கல்வியிலேயே அறத்தையும் அன்பையும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வலியுறுத்தி வளப்புடுத்துவதாகவே தமிழர் அறிவு…கல்விக்கோட்பாடுகள் அமைந்துள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!
‘கல்லுதல்’ என்ற வினையடி மூலம் அறிவினை கற்பவனின் உயிரின் உள்ளிருந்து ஓங்கி எழவைக்கும் செயற்பாடாவே கற்கை நெறியையும் கற்பிக்கும் நெறியையும் கற்பித்தனர் எமது முன்னோர்!
‘கற்றனைத்து ஊறும் அறிவு’- வள்ளுவன்
உயர்ந்த எண்ணங்களின் வலிமைபற்றியும் எண்ணியரின் திண்மைபற்றியும் தமிழிலக்கிய மரபு ஆணித்தரமான கொள்ளைகளைப் பதிவுசெய்துள்ளது!
அவ்வெணண்ங்களின் வழியெழும் தரிசனங்கள்.. கனவுகள் பற்றிய நம்பிகைகைகள் பலமாக ஒலிக்கின்றன!
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்’- வள்ளுவன்
மெய்யுணர்வின் இயக்கத்தில்..எண்ணம் உதிக்கினறது! மெய்யறிவின் முழக்கத்தில் சிந்தனை பிறக்கின்றது!
புலனெறி வழக்கில் உண்மைப் புலமை ஓசையெழுப்புகின்றது!
ஏட்டுக் கல்வியையும் மனனப் பயிற்சிகளையும் ஒப்புவிப்புகளையும் கடந்த ஆனமீக அறிவொளியே உண்மையான விடுதலை விளக்கினை உலகிற்கு வழந்கும் என்பதே தமிழிலக்கியங்களின் அறிவியற் சாரமாகும்! ஆணொடு பெண்ணவள் சமமெனும் சத்தியநேர்மையுள்ள அறிவுக் கொள்கையே தெய்வத்தழிழ் காட்டும் தெளிவான வழிகாட்டலாகும்!
முடிவுரை:
“ignorance is death; knowledge is life” – Swami Vivekananthar
அறியாமையும் அடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளின் வேர்கள்! அறியாமை இருளை இனங்கண்டு.. அறியாமையிலிருந்து தன்னை விடுவிக்கும் பயணமே அறிவுத்தேடல்!
உண்மை இன்பத்தை ஈட்டுவதே… உண்மை அறிவுpன் உயரிய நோக்கு!
இயற்கையிலிருந்து மனிதனைப் பிரிக்கும் அறிவு அழிவையே விளைவிக்கவல்லது!
பூனை தன்து குட்டிகளை ப்ல்லினாற் தூக்கும்போதும் குரங்குகள் தாயாகித் தந்தையாகி நிற்கும்போதும் கரடியும் சிங்கமும் முதலையும் பாம்பும் கூடத் தமது தன்னுணர்வுடன் தன்னறிவுடன் வாழும்போதும் மனிதனுக்கு மட்டும் ஏனதான்; தன்னறிவு மங்கி தன்னுண்ர்வு குன்றிச்செல்ல வேண்டும்? தன்னடையாளத்தை தன்னொளியை இழக்காத அறிவியற்கொள்கையையே எமது தெய்வத்திருமொழியாம் தமிழ் மொழி நம்பி நிற்கிறது! பேசிநிற்கிறது!: ஓதி நிற்கிறது! ஒலித்துநிற்கிறது! இதுவே தமிழின் ஓசை! தமிழின் நாதம்! தமிழிலக்கியங்களி;ன் திருவாசகம்! இதுவே ஒளவைகுறிப்பிடும் ‘ஒரு வாசகம்’!
‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!
‘திங்களும் கதிரும்
தென்றலும் தீயும்
பொங்கு கடலும்
பூமியும் உளவரை
எங்கள் தமிழும்
இனமும் வாழும்’