உலக அரங்கிற் தமிழ்ச் செவ்வியலிலக்கங்கள் முன்வைக்கும் அறிவு பற்றிய கருத்தியற் கொள்கைகளும் அளிக்கும் வழிகாட்டல்களும் -புலவர் சிவநாதன் தமிழவை இலண்டன் (இக்கட்டுரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினரும் செந்தமிழ் அறக்கட்டளையினரும் இணைந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மார்கழி 2017இல் நடாத்திய ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோர்வைக்காக எழுதப்பெற்றது) முன்னுரை: இன்று இவ்வுலகம் அறிவியலில் வெகு வேகமாக முன்னேறிச் செல்வதாக நம்முட்பலர் நம்பிவருவதை யாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது! தொடர்ச்சியாகவும் மிகமிக வேகமாகவும் மும்முரமாகவும் வளர்ந்து வீங்கிப் பருத்து வரும்