இந்த உணர்ச்சிக்குமுறலுக்கு மத்தியிலும் தன்மொழியின் இனத்தின் உயர்வுகளை உறுதியுடன் கூறுவதன் வழியாகவே தன் சந்ததி தாம் வாழும் நாட்டில் தமிழராக வாழ வேண்டும் என்று நினைப்பவன் தமிழ்ப்படைப்பாளி. அத்தகைய ஒரு உன்னதமான அயலகத் தமிழ்ப்படைப்பாளி தான் பெரும் புலவர் என்று ஐரோப்பாவே கொண்டாடும் புலவர் நல்லதம்பி சிவநாதன். இவர் இலங்கையும் இந்தியாவும் முதுதமிழ்ப் புலவர் எனப் போற்றிய புலவர் நல்லதம்பி அவர்களின் இளைய மகன். திருநெல்வேலித் தமிழ்ச்சங்கமே “முது தமிழ்ப்புலவர்’ என்ற பட்டத்தை இவரின் தந்தைக்கு வழங்கியது. இவரின் தந்தையே இலங்கையின் தேசிய கீதத்iதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.